சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் காலியாக உள்ள நீதியரசருக்கான உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 66 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
- நிர்வாகம் : சென்னை உயர்நீதிமன்றம்
- பணி : நீதியரசருக்கான உதவியாளர்
- மொத்த காலிப் பணியிடங்கள் : 66
- கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள், பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தட்டச்சுத் துறையில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்.
- வயது வரம்பு:
- விண்ணப்பதாரர் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
- ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்
- விண்ணப்பிக்கும் முறை : மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 03.02.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000
இதர விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.mhc.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினை காணவும்.
source: tamil.careerindia.com
TN Latest Jobs, Tamil Nadu Latest Jobs, Latest Jobs in Tamil Nadu, சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை.
0 Comments