10th Standard Ned Text Book, 10th Standard Free Online Test, 10th Standard Important Question, Important Study Materials
பலவுள் தெரிக
1. ஐம்பெருங்காப்பியங்களுள் பொருந்தாததைத் தேர்க.
அ) யசோதர காவியம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) மணிமேகலை
ஈ) சீவக சிந்தாமணி
Answer:அ) யசோதர காவியம்
2. உள்ளத்தில் கனல் மூள செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடியது எது?
அ) தேன்சிட்டு
ஆ) வண்டு
இ) தேனீ
ஈ) வண்ணத்துப்பூச்சி
Answer: ஆ) வண்டு
3. “அன்னை மொழியே” என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தருள் ஒருவர்
அ) சேரன்
ஆ) சோழன்
இ) பாண்டியன்
ஈ) பல்லவன்
Answer:இ) பாண்டியன்
4. பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) பாவியக்கொத்து
ஆ) நூறாசிரியம்
இ) தென்தமிழ்
ஈ) பள்ளிப்பறவைகள்
Answer: இ) தென்தமிழ்
5. பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) தமிழ்ச்சிட்டு
ஆ) பள்ளிப்பறவைகள்
இ) எண்சுவை எண்பது
ஈ) உலகியல் நூறு
Answer:அ) தமிழ்ச்சிட்டு
6. பொருத்துக.
1. மாண்புகழ் – அ) சிலப்பதிகாரம்
2. மன்னும் – ஆ) திருக்குறள்
3. வடிவு – இ) பத்துப்பாட்டு
4. பாப்பத்தே – ஈ) மணிமேகலை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ
இ) 1.ஆ 2.இ 3.ஈ. 4.அ
ஈ) 1ஆ 2.அ 3.இ 4.ஈ
Answer:அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
7. ‘அன்னை மொழியே’ கவிதை இடம் பெறும் நூல்
அ) நூறாசிரியம்
ஆ) கனிச்சாறு
இ) எண்சுவை எண்பது
ஈ) பாவியக்கொத்து
Answer:ஆ) கனிச்சாறு
8. “முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே”- என்று பாடியவர்
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) க.சச்சிதானந்தன்
இ) வாணிதாசன்
ஈ) கண்ண தாசன்
Answer:அ) பெருஞ்சித்திரனார்
9. “முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே” – என்று பாடியவர்
அ) க.சச்சிதானந்தன்
ஆ) துரை. மாணிக்கம்
இ) வாணிதாசன்
ஈ) முடியரசன்
Answer:ஆ) துரை. மாணிக்கம்
10. “நற்கணக்கே” என்பதில் சுட்டப்படும் நூல்கள் எத்தனை?
அ) 18
ஆ) 10
இ) 8
ஈ) 5
Answer: அ) 18
11. “மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே!” எஞ்சியுள்ள பெருங்காப்பியங்கள் எத்தனை?
அ) ஐந்து
ஆ) மூன்று
இ) இரண்டு
ஈ) எட்டு
Answer: ஆ) மூன்று
12. துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) பெரியவன்கவிராயர்
இ) தேவநேயப் பாவாணர்
ஈ) தமிழண்ணல்
Answer: அ) பெருஞ்சித்திரனார்
13. பெருஞ்சித்திரனார் பாடலில் ‘பழமைக்குப் பழமை’ என்னும் பொருள் தரும் சொல்.
அ) முன்னை முகிழ்ந்த
ஆ) முன்னைக்கும் முன்னை
இ) முன்னும் நினைவால்
ஈ) முந்துற்றோம் யாண்டும்
Answer: ஆ) முன்னைக்கும் முன்னை
14. ‘பாப்பத்தே எண் தொகையே’ – சரியான பொருளைக் கண்டறி.
அ) பாடல் பத்து, எண் தொகை
ஆ) பா பத்து, எட்டுத் தொகை
இ) பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
ஈ) பத்தும் எட்டும்
Answer: இ) பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
15. பெருஞ்சித்திரனாரின் ‘முந்துற்றோம் யாண்டும்’, ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ என்னும் இரு தலைப்பிலுள்ள பாடல்கள் எத்தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பெற்றன?
அ) எண்சுவை எண்பது
ஆ) உலகியல் நூறு
இ) நூறாசிரியம்
ஈ) கனிச்சாறு
Answer: ஈ) கனிச்சாறு
16. செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அது போல – பயின்று வரும் அணி
அ) உவமையணி
ஆ) உருவக அணி
இ) எடுத்துக்காட்டு உவமையணி
ஈ) தற்குறிப்பேற்றணி
Answer: அ) உவமையணி
17. செந்தமிழ் – பிரித்து எழுதுக.
அ) செந் + தமிழ்
ஆ) செம் + தமிழ்
இ) செ + தமிழ்
ஈ) செம்மை + தமிழ்
Answer: ஈ) செம்மை + தமிழ்
18. செந்தமிழ், செந்தாமரை ஆகிய சொற்களில் இடம் பெறும் இலக்கணக் குறிப்பைச் சுட்டுக.
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) உம்மைத் தொகை
ஈ) அன்மொழித்தொகை
Answer: அ) பண்புத்தொகை
19. உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள – இவ்வடியில் காணும் நயம்
அ) மோனை
ஆ) எதுகை
இ) முரண்
ஈ) இயைபு
Answer: அ) மோனை
20. தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண் தொகையே! நற்கணக்கே
மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
இப்பாடலில் அமைந்த எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.
அ) தென்னன்
ஆ) மன்னும்
இ) இன்ன றும்
ஈ) இவையனைத்தும்
Answer: ஈ) இவையனைத்தும்
21. ‘அன்னை மொழியே’ என்னும் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர்
அ) சுந்தரனார்
ஆ) பாரதிதாசன்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) பாவாணர்
Answer: இ) பெருஞ்சித்திரனார்
22. “சாகும் போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று பாடியவர் யார்?
அ) பாரதிதாசன்
ஆ) பெருஞ்சித்திரனார்
இ) சச்சிதானந்தன்
ஈ) ஆறுமுகநாவலர்
Answer: இ) சச்சிதானந்தன்
23. பெருஞ்சித்திரனாரின் பணிகளில் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் எது?
அ) பாவியக்கொத்து
ஆ) கனிச்சாறு
இ) திருக்குறள் மெய்ப்பொருளுரை
ஈ) உலகியல் நூறு
Answer: இ) திருக்குறள் மெய்ப்பொருளுரை
24. தென்மொழி, தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களின் ஆசிரியர் யார்?
அ) கண்ண தாசன்
ஆ) பாரதிதாசன்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) திரு.வி.க
Answer: இ) பெருஞ்சித்திரனார்
*********************************
கூடுதல் 1 மதிப்பெண் வினா விடைகள்
1. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை மாணிக்கம்
2. தென்னன் மகளே இதில் தென்னன் என்பவன் பாண்டியன்
3. பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்குக் கருவூலமாக அமைந்தது
4. சாகும் போதும் தமிழைப் படித்துச் சாக வேண்டும் எனக் கூறியவர் க.சச்சிதானந்தன்
5. அன்னை மொழியே எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல் கவிச்சாற
6. செந்தமிழ் - பிரித்து எழுதுக செம்மை + தமிழ்
7. தும்பி என்பதன் பொருள் வண்டு
8. இரட்டுற மொழிதல் சிலேடை எனவும் அழைக்கப்படுகிறது
9. ஒரு சொல்லோ, தொடரோ இரு பொருள்பட வருவது இரட்டுற மொழிதல் ஆகும்
10. சந்தக்கவிமணி எனக் குறிக்கப்படுபவர் தமிழழகனார்
11. ப. தமிழழகனாரின் இயற்பெயர் சண்முக சுந்தரம்
12. ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாக பெற்ற மொழி தமிழ்
13. புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பு தனிப்பாடல் திரட்டு
14. தமிழழகனார் பன் இரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.
15 நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்று கூறியவர் மகாகவி பாரதியார்
16. "திருவள்ளுவர் தவச்சாலை " ஒன்றை அமைத்தவர் இரா. இளங்குமரனார்
17. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தைப் படைத்தவர் கால்டுவெல்
18. மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர் தேவநேயப் பாவாணர்
19. தமிழ் வழித் திருமணங்களை நடத்தி வருபவர் இரா. இளங்குமரனார்
20. இரா. இளங்குமரனார் பாவாணர் நுலகத்தை உருவாக்கியவர் ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே அந்நாட்டு மக்களின் அறிவொழுக்கம் அமைந்திருக்கும்
21. நெல், கேழ்வரகு இவற்றின் அடி நான் ஆகும்
22 கீரை, வாழை இவற்றின் அடி தண்டு ஆகும்.
23. நெட்டி, மிளகாய்ச்செடி இவற்றின் அடி கோல் ஆகும்.
24. .......க்கு செடி, புதர் இவற்றின் அடி நூறு ஆகும்.
25. கம்பு, சோளம் இவற்றின் அடி தட்டு (அ) தட்டை ஆகும்
26. கரும்பின் அடி ஆகும்.
28. மூங்கிலின் அடி ஆகும்.
29. புளி, வேம்பு இவற்றின் அடி, அடி என வழங்கப்பெறும்.
30. அடிமரத்திலிருந்து பிரியும் மாபெரும் கிளை, கலை என அழைக்கப்படும்
31. கவையின் பிரிவு கொம்பு (அ) கொப்பு எனப்படும்
32. கொம்பின் பிரிவு ஆகும்
33. கிளையின் பிரிவு சினை ஆகும். சினையின் பிரிவு போத்து ஆகும்.
34. போத்தின் பிரிவு தக்க ஆகும்.
35. குச்சியின் பிரிவு நினுக்கு ஆகும்
36. கள்ளி, விறகு வெங்கட், கட்டை என்பன காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் பெயர்களகு இலை, தான், தோகை, ஓலை, கண்டு, சருகு என்பன தாவரங்களின் நிலை வகைகளைக் குறிக்க
39 துளிர் அல்லது தளிர் என்பது நெல், புல் முதலியவற்றின் கொழுந்தாகும் முறி அல்லது கொழுந்து என்பது புளி, வேம்பு இவற்றின் கொழுந்தாகும்.
40. சோளம், கரும்பு, தென்னை பனை முதலியவற்றின் கொழுந்து குருத்து என அழைக்கப்படுகிறது
41. கரும்பின் நுனிப்பகுதி கொழுத்தாடை ஆகும்
42. பூவின் தோற்ற நிலை அரும்பு பூ விரியத் தொடங்கும் நிலை போது
43. பூவின் மலர்ந்த நிலையான
44. வி என்பது மரஞ்செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை பூ வாடிய நிலை செய்தல்
45. பூவோடு கூடிய இளம் பக்கக்குப் பூப்பிக்க எனப் பெயர்,
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. ‘காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது
அ) இலையும் சருகும்
ஆ) தோகையும் சண்டும்
இ) தாளும் ஓலையும்
ஈ) சருகும் சண்டும்
Answer: ஈ) சருகும் சண்டும்
2. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை
அ) குலை வகை
ஆ) மணி வகை
இ) கொழுந்து வகை
ஈ) இலை வகை
Answer: ஆ) மணி வகை
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலையைக் குறிக்கும் சொல் எது?
அ) அரும்பு
ஆ) மலர்
இ) வீ
ஈ) செம்மல்
Answer: இ) வீர
2. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
அ) பாவாணர்
ஆ) கால்டுவெல்
இ) இரா. இளங்குமரனார்
ஈ) திரு.வி.க
Answer: ஆ) கால்டுவெல்
3. திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் எது?
அ) அல்லூர்
ஆ) திருவள்ளூர்
இ) கல்லூர்
ஈ) நெல்லூர்
Answer: அ) அல்லூர்
4. குச்சியின் பிரிவு எச்சொல்லால் அழைக்கப்படுகிறது?
அ) போத்து
ஆ) குச்சி
இ) இணுக்கு
ஈ) சினை
Answer: இ) இணுக்கு
5. பொருத்துக.
1. தாள் – அ) குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
2. தண்டு – ஆ) நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி
3. கோல் – இ) தண்டு, கீரை முதலியவற்றின் அடி
4. தூறு – ஈ) நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
அ) 1.ஈ 2.இ 3.ஆ 4.அ
ஆ) 1.ஆ 2.அ 3.ஈ 4-இ
இ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer: அ) 1.ஈ 2.இ 3.ஆ 4.அ
6. பொருத்துக.
1. தட்டு – அ) கரும்பின் அடி
2. கழி – ஆ) புளி, வேம்பு முதலியவற்றின் அடி
3. கழை – இ) கம்பு, சோளம்
முதலியவற்றின் அடி – ஈ) மூங்கிலின் அடி
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.இ 2.அ 3.ஈ. 4.ஆ
இ) 1.ஈ 2.இ 3.அ 4.ஆ
ஈ) 1.இ 2.அ 3.ஆ 4.ஈ
Answer: ஆ) 1.இ 2.அ 3.ஈ 4.ஆ
7. பொருத்துக.
1. கவை – அ) அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை
2. கொம்பு – ஆ) கிளையின் பிரிவு
3. சினை – இ) கவையின் பிரிவு
4. போத்து – ஈ) சினையின் பிரிவு
அ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
ஆ) 1.ஈ 2.இ 3.அ 4.ஆ
இ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஈ) 1.இ 2.ஆ 3.அ 4.ஈ
Answer: அ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
8. பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) தூறு
ஆ) கழி
இ) கழை
ஈ) கவை
Answer: ஈ) கவை
9. பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) தாள்
ஆ) தண்டு
இ) கிளை
ஈ) கோல்
Answer: இ) கிளை
10. பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) கவை
ஆ) தட்டு
இ) கொம்பு
ஈ) சினை
Answer: ஆ) தட்டு
11. பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) கவை – குச்சியின் பிரிவு
ஆ) கொம்பு – கவையின் பிரிவு
இ) போத்து – சினையின் பிரிவு
ஈ) குச்சி – போத்தின் பிரிவு
Answer: அ) கவை-குச்சியின் பிரிவு
12. வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.
அ) தாள், தண்டு, கோல், தூறு
ஆ) கவை, கொம்பு, கிளை, சினை
இ) சுள்ளி, விறகு, வெங்கழி, கட்டை
ஈ) கழி, குச்சு, இணுக்கு, கழை
Answer: ஈ) கழி, குச்சு, இணுக்கு, கழை
13. பொருத்துக.
1. இலை – அ) தென்னை , பனை முதலியவற்றின் இலை
2. தாள் – ஆ) சோளம், கம்பு முதலியவற்றின் அடி
3. தோகை – இ) புளி, வேம்பு முதலியவற்றின் இலை
4. ஓலை – ஈ) நெல், புல் முதலியவற்றின் இலை
அ) 1.ஈ 2.இ 3.அ 4.ஆ
ஆ) 1.இ 2.ஈ 3.ஆ 4.அ
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஈ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ
Answer: ஆ) 1.இ 2.ஈ 3.ஆ 4.அ
14. பொருத்தமற்ற ஒன்றைக் கண்டறிக.
அ) சண்டு
ஆ) சருகு
இ) தோகை
ஈ) கட்டை
Answer: ஈ) கட்டை
15. பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) சண்டு – காய்ந்த தாளும் தோகையும்
ஆ) சருகு – காய்ந்த இலை
இ) தாள் – புலி, வேம்பு முதலியவற்றின் இலை
ஈ) தோகை – சோளம், கம்பு முதலியவற்றின் இலை
Answer: இ) தாள் – புலி, வேம்பு முதலியவற்றின் இலை
16. வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.
அ) தோகை, ஓலை, சண்டு, சருகு
ஆ) துளிர், முறி, கொழுந்து, கொழுந்தாடை
இ) பூம்பிஞ்சு, பிஞ்சு, வடு, கவ்வை
ஈ) கருக்கல், கச்சல், கொத்து, குலை
Answer: ஈ) கருக்கல், கச்சல், கொத்து, குலை
17. தும்பி – இச்சொல்லின் பொருள்
அ) தும்பிக்கை
ஆ) வண்டு
இ) துந்துபி
ஈ) துன்பம்
Answer: ஆ) வண்டு
18. தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்களுள் – சரியானவற்றைச் தேர்ந்தெடு.
அ) இலை, தாள், தோகை, ஒலை, சண்டு, சருகு
ஆ) இலை, தோகை, தாள், தளிர், குருத்து, அரும்பு
இ) தாள், தோகை, தூறு, தட்டு, தண்டு, ஓலை
ஈ) இலை, தாள், ஓலை, தளிர், கொழுந்து, சண்டு
Answer: அ) இலை, தாள், தோகை, ஒலை, சண்டு, சருகு
19. ‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்று பாடியவர் யார்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன் இ) பெருஞ்சித்திரனார்
ஈ) தேவநேயப் பாவாணர்
Answer: அ) பாரதியார்
20. சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) இளங்குமரனார்
இ) திரு.வி.கலியாணசுந்தரனார்
ஈ) மறைமலையடிகள்
Answer: ஆ) இளங்குமரனார்
21. பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) இளங்குமரனார்
இ) திரு.வி.க
ஈ) மறைமலையடிகள்
Answer: ஆ) இளங்குமரனார்
22. தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) பெருஞ்சித்திரனார்
இ) இளங்குமரனார்
ஈ) பெருந்தேவனார்
Answer:இ) இளங்குமரனார்
23.விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது என்று எண்ணியவர் யார்?
அ) ஜி. யு. போப்
ஆ) வீரமாமுனிவர்
இ) இளங்குமரனார்
ஈ) பெருங்குமரனார்
Answer:இ) இளங்குமரனார்
24.இளங்குமரனார் யார் போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர்?
அ) திரு.வி.க
ஆ) பாவாணர்
இ) மு.வ
ஈ) ஜீவா
Answer:அ) திரு.வி.க
25. இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர்
அ) தமிழழகனார்
ஆ) அப்பாத்துரையார்
இ) தேவநேயப் பாவாணர்
ஈ) இரா.இளங்குமரனார்
Answer: ஈ) இரா.இளங்குமரனார்
26.விழிகளை மூடியபடி எழுதும் ஆற்றல் வாய்ந்த வர்கள் ………… …………
அ) திரு.வி.க., இளங்குமரனார்
ஆ) தமிழழகனார், அப்பாத்துரையார்
இ) தேவநேயப் பாவாணர், கால்டுவெல்
ஈ) பெருஞ்சித்திரனார், சுந்தரனார்
Answer: அ) திரு.வி.க., இளங்குமரனார்
27. ‘தமிழ்த்தென்றல்’ என்று போற்றப்பட்டவர் யார்?
அ) இளங்குமரனார்
ஆ) பெருந்தேவனார்
இ) திரு.வி.க
ஈ) ம.பொ .சி
Answer: இ) திரு.வி.க
28. உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது? மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே என்று கூறியவர் யார்?
அ) மலேசியா, க. அப்பாத்துரையார்
ஆ) சிங்கப்பூர், தேவநேயப் பாவாணர்
இ) இந்தியா, இளங்குமரனார் ஈ) கனடா, ஜி.யு. போப்
Answer: அ) மலேசியா, க. அப்பாத்துரையார்
29. ‘பன்மொழிப் புலவர்’ என்றழைக்கப்பட்டவர் யார்?
அ) க.அப்பாத்துரையார்
ஆ) தேவநேயப் பாவாணர்
இ) இளங்குமரனார்
ஈ) ஜி.யு.போப்
Answer: அ) க.அப்பாத்துரையார்
30.சம்பா நெல்லின் உள் வகைகள் எத்தனை?
அ) 30
ஆ) 60
இ) 40
ஈ) 80
Answer:ஆ) 60
31.‘மொழி ஞாயிறு’ என்றழைக்கப்பட்டவர் யார்? அ) க.அப்பாத்துரை
ஆ) தேவநேயப் பாவாணர்
இ) இளங்குமரனார்
ஈ) ஜி.யு.போப்
Answer:ஆ) தேவநேயப் பாவாணர்
32. ‘தமிழ்ச்சொல் வளம்’ என்னும் கட்டுரை இடம் பெற்றுள்ள நூல் எது?
அ) சொல்லாய்வுக் கட்டுரைகள், தேவநேயப் பாவாணர்
ஆ) தேவநேயம், இளங்குமரனார்
இ) மொழி மரபு, மு.வ ஈ) ஆய்வியல் நெறிமுறைகள், பொற்கோ
Answer: அ) சொல்லாய்வுக் கட்டுரைகள், தேவநேயப் பாவாணர்
33.பொருத்திக் காட்டுக.
i) சுள்ளி – 1. காய்ந்த குச்சு (குச்சி)
iii) விறகு – 2. காய்ந்த சிறுகிளை
iii) வெங்கழி – 3. காய்ந்த கொம்பும் கவையும் அடியும்
iv) கட்டை – 4. காய்ந்த கழி
அ) 1, 2, 4, 3
ஆ) 2, 1. 3, 4
இ) 1, 3, 4, 2
ஈ) 4, 3, 2, 1
Answer: அ) 1, 2, 4, 3
34. பொருத்திக் காட்டுக.
i) இளநீர் – 1. வாழைப்பிஞ்சு
ii) நுழாய் – 2. இளநெல்
iii) கருக்கல் – 3. இளம்பாக்கு
iv) கச்ச ல் – 4. முற்றாத தேங்காய்
அ) 4, 3, 2, 1
ஆ) 2, 3, 4, 1
இ) 1, 2, 3, 4
ஈ) 3, 4, 2, 1
Answer: அ) 4, 3, 2, 1
35. பொருத்திக் காட்டுக.
i) சிவியல் – சூட்டினால் பழுத்த பிஞ்சு
ii) அளியல் – பதராய்ப் போன மிளகாய்
iii) சொண்டு – குளுகுளுத்த பழம்
iv) வெம்பல் – சுருங்கிய பழம்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 1, 3, 4, 2
ஈ) 1, 3, 4, 2
Answer: அ) 4, 3, 2, 1
36. ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே, அந்நாட்டு மக்களுக்கு எது அமைந்திருக்கும்?
அ) அன்பொழுக்கம்
ஆ) அறிவொழுக்கம்
இ) களவொழுக்கம்
ஈ) கற்பொழுக்கம்
Answer: ஆ) அறிவொழுக்கம்
37.செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) வெள்ளைவாரணார்
இ) இளங்குமரனார்
ஈ) பெருந்தேவனார்
Answer:அ) தேவநேயப் பாவாணர்
38. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார்?
அ) தனிநாயகம் அடிகள்
ஆ) தேவநேயப் பாவாணர்
இ) இளங்குமரனார்
ஈ) மு. வரதராசனார்
Answer: ஆ) தேவநேயப் பாவாணர்
39. போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் எது?
அ) லெபனான்
ஆ) லிசுபன்
இ) கெய்ரோ
ஈ) ஹராரே
Answer: ஆ) லிசுபன்
40. இந்திய மொழிகளிலேயே மேலை நாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது?
அ) இந்தி
ஆ) தமிழ்
இ) தெலுங்கு
ஈ) வங்காளம்
Answer: ஆ) தமிழ்
41. கார்டிலா என்னும் போர்ச்சுகீசிய நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிடுவது எது?
அ) ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
ஆ) நான்காம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
இ) செம்மொழி மாநாட்டு மலர்
ஈ) தமிழிலக்கிய வரலாறு மு.வ.
Answer: அ) ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
42. கொழுந்தாடை என்பது யாது?
அ) நெல், புல் ஆகியவற்றின் கொழுந்து
ஆ) புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து
இ) தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து
ஈ) கரும்பின் நுனிப்பகுதி
Answer: ஈ) கரும்பின் நுனிப்பகுதி
இரட்டுற மொழிதல்
பலவுள் தெரிக
1. ‘மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
Answer: அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. ‘தமிழ், ஆழி இரண்டுக்கும் பொருள்படும் படியான’ – இரட்டுற மொழிதலணி அமைய பாடிய ஆசிரியர் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இ) தமிழழகனார்
ஈ) எழில் முதல்வன்
Answer: இ) தமிழழகனார்
2. கடல் தரும் சங்குகளின் வகைகள் எத்தனை?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer: ஆ) மூன்று
3. கடல் தன் அலையால் எதைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது?
அ) மணல்
ஆ) சங்கு
இ) கப்பல்
ஈ) மீனவர்கள்
Answer:ஆ) சங்கு
4. முத்தினையும் அமிழ்தினையும் தருவதாகச் சந்தக்கவிமணி தமிழழகனார் குறிப்பிடுவது எதை?
அ) மூங்கில்
ஆ) கடல்
இ) மழை
ஈ) தேவர்கள்
Answer: ஆ) கடல்
5. தமிழ் அணிகலன்களாகப் பெற்றவை எவை?
அ) சங்க இலக்கியங்கள்
ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்
இ) ஐஞ்சிறு காப்பியங்கள்
ஈ) நீதி இலக்கியங்கள்
Answer:ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்
6. இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் யாது?
அ) வேற்றுமை அணி
ஆ) பிறிதுமொழிதல் அணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி
Answer:ஈ) சிலேடை அணி
7. ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது எது?
அ) இரட்டுறமொழிதல் அணி
ஆ) வேற்றுமை அணி
இ) உவமை அணி
ஈ) உருவக அணி
Answer: அ) இரட்டுறமொழிதல் அணி
8. சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?
அ) சண்முகமணி
ஆ) சண்முகசுந்தரம்
இ) ஞானசுந்தரம்
ஈ) ஆறுமுகம்
Answer:ஆ) சண்முகசுந்தரம்
9. தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?
அ) பத்து
ஆ) பன்னிரண்டு
இ) பதினான்கு
ஈ) பதினாறு
Answer:ஆ) பன்னிரண்டு
10. முத்தமிழ் துய்ப்பதால் என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தொகுப்பு யாது?
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) சிற்றிலக்கியங்கள்
ஈ) தனிப்பாடல் திரட்டு
Answer:ஈ) தனிப்பாடல் திரட்டு
11. ‘மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
Answer:அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. முதல் தமிழ்க்கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு
அ) 1983
ஆ) 1938
இ) 1893
ஈ) 1980
Answer: அ) 1983
2. முதல் தமிழ்க் கணினிக்குச் சூட்டப்பட்ட பெயர்
அ) திருவள்ளுவர்
ஆ) தொல்காப்பியர்
இ) அகத்தியர்
ஈ) கம்ப ர்
Answer:அ) திருவள்ளுவர்
3. புதிய உரைநடை என்னும் நூலினை எழுதியவர்
அ) க. அப்பாதுரை
ஆ) எழில் முதல்வன்
இ) பாவாணர்
ஈ) இளங்குமரனார்
Answer: ஆ) எழில் முதல்வன்
4. எழில் முதல்வனின் இயற்பெயர்
அ) மா. இராமலிங்கம்
ஆ) க. அப்பாதுரை
இ) பாவாணர்
ஈ) இளங்குமரனார்
Answer:அ) மா. இராமலிங்கம்
5. எழில் முதல்வனின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்
அ) புதிய உரைநடை
ஆ) இனிக்கும் நினைவுகள்
இ) யாதுமாகி நின்றாய்
ஈ) எங்கெங்கு காணினும்
Answer:அ) புதிய உரைநடை
6. எழில் முதல்வன் கற்றல் கற்பித்தல் பணியை மேற்கொண்ட கல்லூரி
அ) புதுக்கல்லூரி
ஆ) மாநிலக் கல்லூரி
இ) இராணி மேரிக்கல்லூரி
ஈ) குடந்தை அரசு ஆடவர் கல்லூரி
Answer:ஆ) மாநிலக் கல்லூரி
7. சங்கப் புலவரிடம் இணையத் தமிழன் எவ்விலக்கியங்களைக் குறித்து உரையாடிக் கொண்டிருந்தான்?
அ) சங்க இலக்கியம்
ஆ) பக்தி இலக்கியம்
இ) உரைநடை இலக்கியம்
ஈ) சிற்றிலக்கியம்
Answer:இ) உரைநடை இலக்கியம்
8. “உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அது உருவகமாகும்” – என்றவர்
அ) தொல்காப்பியர்
ஆ) பவணத்தியார்
இ) தண்டி
ஈ) அகத்தியர்
Answer: இ) தண்டி
9. “இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக் கண்ணாடிகளைப் போல் வடபுறமும் தென்புறமும் நீர் நிறைந்த கண்மாய்கள்” என்று குறிஞ்சிமலர் நூலில் நா. பார்த்தசாரதி பயன்படுத்திய நயம்
அ) உவமை
ஆ) உருவகம்
இ) எடுத்துக்காட்டு உவமையணி
ஈ) சிற்றிலக்கியம்
Answer: அ) உவமை
10. எடுத்துக்காட்டு உவமையணியை உரைநடையில் பயன்படுத்துகையில் அதனை எப்படி அழைப்பர்?
அ) இலக்கணை
ஆ) இணை ஒப்பு
இ) முரண்படு மெய்ம்மை
ஈ) சொல்முரண்
Answer:ஆ) இணை ஒப்பு
11. குடிசையின் ஒருபக்கம் கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒரு பக்கம் புளிச் சேப்பக்காரர்கள் மறுபக்கம்; மெலிந்த எலும்புக் கூடுகள் ஒருபக்கம் பருத்த தொந்திகள் மறுபக்கம் – தோழர் ப. ஜீவானந்தம் உரைநடை எதற்கு எடுத்துக்காட்டு?
அ) எதிரிணை இயைபு
ஆ) முரண்படு மெய்ம்மை
இ) இலக்கணை
ஈ) சொல்முரண்
Answer: அ) எதிரிணை இயைபு
12.உணர்வுகளைத் தூண்டி எழுப்புவதில் வெற்றிபெறுவன?
அ) உவமையை விட உருவகமே
ஆ) உருவகத்தை விட உவமையே
இ) எதுகையை விட மோனையே
ஈ) கேள்வியிலே பதில் இருப்பது போல
Answer: அ) உவமையை விட உருவகமே
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ – தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே அ) பாடிய; கேட்டவர்
ஆ) பாடல்; பாடிய
இ) கேட்டவர்; பாடிய
ஈ) பாடல்; கேட்டவர்
Answer: ஈ) பாடல்; கேட்டவர்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) இரண்டு
Answer: ஆ) நான்கு
2.எஃஃகிலங்கிய, உரனசைஇ – இச்சொற்களில் உள்ள அளபெடைகள்
அ) ஒற்றளபெடை, சொல்லிசை அளபெடை
ஆ) இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை
இ) சொல்லிசை அளபெடை, ஒற்றளபெடை
ஈ) ஒற்றளபெடை, இன்னிசை அளபெடை
Answer: அ) ஒற்றளபெடை, சொல்லிசை அளபெடை
3. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் ஒற்றெழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை?
அ) 11)
ஆ) 13
இ) 15
ஈ) 12
Answer: அ) 11
4. பொருத்துக.
i) ஓ ஒதல் வேண்டும் – 1. இன்னிசை அளபெடை
ii) கெடுப்பதூஉம் 2. செய்யுளிசை அளபெடை
iii) உரனசைஇ – 3. ஒற்றளபெடை
iv) எஃஃகிலங்கிய – 4. சொல்லிசை அளபெடை
அ) i.2 ii.1 ili.4 iv.3
ஆ) i.4 ii.3 ili.2 iv.1
இ) i.2 ii.3 iii.4 iv.1
ஈ) ii.4 iii.1 iv.2
Answer: அ) i.2 ii.1 iii.4 iv.3
5.வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) உறாஅர்
ஆ) கெடுப்பதூஉம்
இ) வரனசைஇ
ஈ) எஃஃகிலங்கிய
Answer: ஈ) எஃஃகிலங்கிய
6.பொருத்தமற்ற ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) ஓஒதல்
ஆ) உறாஅர்க்கு
இ) படாஅபறை
ஈ) தம்பீஇ
Answer: ஈ) தம்பீஇ
7.பொதுமொழிக்குரிய சான்றினைத் தேர்வு செய்க.
அ) படி
ஆ) வேங்கை
இ) கண்ண ன்
ஈ) கண்ணன் வந்தான்
Answer: ஆ) வேங்கை
8.எட்டு = எள் + து எனப் பிரிந்து தரும் பொருள்
அ) எட்டு
ஆ) எள்ளை உண்
இ) வேகின்ற கை
ஈ) எள்ளை எடு
Answer: ஆ) எள்ளை உண்
9.பொருத்துக.
1. நடத்தல் – அ) எதிர்மறைத் தொழிற்பெயர்
2. கொல்லாமை – ஆ) வினையாலணையும் பெயர்
3. கேடு – இ) தொழிற்பெயர்
4. வந்தவர் – ஈ) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.இ 2.அ 3.ஈ. 4.ஆ
இ) 1.இ 2.ஆ 3.ஈ. 4.அ
ஈ) 1.இ 2.அ 3.ஆ 4.ஈ
Answer: ஆ) 1.இ 2.அ 3.ஈ. 4.ஆ
10.எதிர்மறைத் தொழிற்பெயர் சான்றினைத் தேர்ந்தெடுக்க.
அ) கொல்லாமை
ஆ) வாழ்க்கை
இ) நடத்தல்
ஈ) சூடு
Answer: அ) கொல்லாமை
11.மொழியின் சிறப்புகளை அறிய துணை செய்வது
அ) கவிதை
ஆ) இலக்கணம்
இ) உரைநடை
ஈ) எதுவுமில்லை
Answer: ஆ) இலக்கணம்
12.சார்பெழுத்துகளின் எண்ணிக்கை
அ) முப்பது
ஆ) பன்னிரண்டு
இ) பத்து
ஈ) ஒன்பது
Answer: இ) பத்து
13. உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer: ஆ) மூன்று
14. நெட்டெழுத்து அளபெடுப்பது என்பது என்ன?
அ) செய்யுளிசை அளபெடை
ஆ) இன்னிசை அளபெடை
இ) சொல்லிசை அளபெடை
ஈ) எதுவுமில்லை
Answer: அ) செய்யுளிசை அளபெடை
15. சொல் திரிந்து அளபெடுப்பது என்பது யாது?
அ) செய்யுளிசை அளபெடை
ஆ) சொல்லிசை அளபெடை
இ) இன்னிசை அளபெடை
ஈ) எதுவுமில்லை
Answer: ஆ) சொல்லிசை அளபெடை
16. மொழி என்பது எத்தனை வகை?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer: ஆ) மூன்று
17. “அந்தமான்” என்பது எவ்வகை மொழி?
அ) தொடர் மொழி
ஆ) தனி மொழி
இ) பொது மொழி
ஈ) எதுவுமில்லை
Answer: இ) பொது மொழி
18. பொருத்திக் காட்டுக.
1. அந்தமான் – அ) தொடர்மொழி
2. கண் – ஆ) தொழிற்பெயர்
3. நடத்தை – இ) பொதுமொழி
4. கண்ணன் வந்தான் – ஈ) தனிமொழி
அ) 1.ஆ 2.ஈ 3.அ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.இ 2.ஈ 3.ஆ 4.அ
ஈ) 1.இ 2.ஆ 3.ஈ 4.அ
Answer: இ) 1.இ 2.ஈ 3.ஆ 4.அ
19. உறாஅர்க்கு, வரனசைஇ – அளபெடை வகை
அ) சொல்லிசை, இன்னிசை
ஆ) ஒற்றளபெடை, சொல்லிசை
இ) செய்யுளிசை, சொல்லிசை
ஈ) இன்னிசை, சொல்லிசை
Answer: இ) செய்யுளிசை, சொல்லிசை
20. தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது
அ) தொழிற்பெயர்
ஆ) முதனிலை திரிந்த தொழிற்பெயர்
இ) முதனிலைத் தொழிற்பெயர்
ஈ) வினையாலணையும் பெயர்
Answer: ஈ) வினையாலணையும் பெயர்]
21. மூவிடத்திற்கும் உரியது ………….; படர்க்கைக்கே உரியது ………….
அ) தொழிற்பெயர், வினையாலணையும் பெயர்
ஆ) வினையாலணையும் பெயர், தொழிற்பெயர்
இ) உரிச்சொற்றொடர், வினையாலணையும் பெயர்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer: ஆ) வினையாலணையும் பெயர், தொழிற்பெயர்
22. ‘நடத்தல்’ என்னும் சொல்லில் ‘நட’ என்பது
அ) வினையடி
ஆ) விகுதி
இ) தொழிற்பெயர்
ஈ) இடைநிலை
Answer: அ) வினையடி
23. ‘வேம் + கை’ என்பதன் பொருள்
அ) வேட்கை
ஆ) வேங்கை
இ) வேகின்ற கை
ஈ) வேகாத கை
Answer: ஈ) வேகாத கை
24. ‘வாழ்க்கை ‘ என்னும் சொல்லுக்குரிய விகுதியைக் குறிப்பிடுக.
அ) வாழ்
ஆ) க்
இ) கை
ஈ) ஐ
Answer: இ) கை
25. அளபெடுத்தல் என்பதன் பொருள்
அ) நீண்டு ஒலித்தல்
ஆ) குறுகி ஒலித்தல்
இ) அளவாக ஒலித்தல்
ஈ) ஒலித்தல் இல்லை
Answer: அ) நீண்டு ஒலித்தல்
26.‘நசைஇ’ என்பதன் பொருள்
அ) விருப்பம்
ஆ) விரும்பி
இ) துன்பம்
ஈ) கவனித்து
Answer: ஆ) விரும்பி
2 Comments
Thank u very much, it is very useful for me🥰
ReplyDeleteReading 11 hours before exam��
ReplyDeleteThank you cuz it's very useful for me.