பன்னிரண்டாம் வகுப்பு
தமிழ் மனப்பாட செய்யுள்
திருக்குறள்
இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
3 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
செய்ந்நன்றி அறிதல்
4. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.
8. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
9. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி
கொன்ற மகற்கு.
வெஃகாமை
12. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
வெகுளாமை
15. மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய
பிறத்தல்
அதனான் வரும்.
17. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.
18. சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
ஊழ்
15. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.
அறிவு உடைமை
1. அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண்.
3 3. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
5. எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்.
சிற்றினம் சேராமை
7. நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல்.
வினைத்திட்பம்
8. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
9. சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம்
சொல்லிய
வண்ணம் செயல்.
11. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி
அன்னார் உடைத்து.
தூது
12. கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை
உட்பகை
15. வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக
கேள்போல்
பகைவர் தொடர்பு.
சூது
20. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
-திருவள்ளுவர்
************************
************************
பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் மனப்பாட செய்யுள் இயல் 1 to 4 Click Here
************************
************************
0 Comments