Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

9th Tamil Memory Poem ஒன்பதாம் வகுப்பு தமிழ் மனப்பாட செய்யுள்

ஒன்பதாம் வகுப்பு தமிழ் 

மனப்பாட செய்யுள்

கவிதைப்பேழை

தமிழ்விடு தூது

தித்திக்கும் தென் அமுதாய்த் தென் அமுதின் மேலான 
முத்திக் கனியே முத்தமிழே - புத்திக்குள்
உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துரைக்கும் 
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் - மண்ணில்

குறம் என்றும் பண்ணான்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு 
உறவென்று மூன்று இனத்தும் உண்டோ - திறம் எல்லாம் 
வந்து என்றும் சிந்தா மணியாய் இருந்தஉடன் 
சிந்துவன்று சொல்லிய நாச்சிந்துமே.

பெரியபுராணம்

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு 
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை 
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன 
நாடெல்லாம் நீர்நாடு தனை துவ்வா நலமெல்லாம்.
                                                                -சேக்கிழார்

புறநானூறு

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் 
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம் 
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு 
உடம்பும் உயிரும் படைத்திசினோரே
                                                    - குடபுலவியனார்

ஓ,.என் சமகாலத் தோழர்களே

அறிவியல் என்னும் வாகனம் மீதில்
        ஆளும் தமிழை நிறுத்துங்கள்
கரிகா வன்தன் பெருமை எல்லாம்
       கணிப்பொறி யுள்ளே பொருத்துங்கள்
ஏவும் திசையில் செம்பைப் போல
        இருந்த இனத்தை மாற்றுங்கள்
ஏவு கணையிலும் தமிழை எழுதி
        எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்
                                            -வைரமுத்து

உயிர்வகை

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே 
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே 
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே 
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே 
ஆற்றி வதுவே அவற்றொடு மனனே 
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.
                                    -தொல்காப்பியர்

சிறுபஞ்சமூலம்

அறிவுடையார் தாமே உணர்வர் 

பூவாது காய்க்கும் மரம் உள நன்று அறிவார் 
மூவாது மூத்தவர். நூல் வல்லார்; தாவா, 
விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு 
உரையாமை செல்லும் உணர்வு.
                                    -காரியாசான்

இராவண காவியம்

மருதம்

கல்லிடைப் பிறந்த ஆறும்
              கரைபொரு குளனும் தோயும் 
முல்லை அம் புறவில் தோன்று
            முருகுகான் யாறு பாயும்
நெல்லினைக் கரும்பு காக்கும் 
            நீரினைக் கால்வாய் தேக்கும்
மல்லல் அம் செறுவில் காஞ்சி
            வஞ்சியும் மருதம் பூக்கும். (72)
                               புலவர் குழந்தை


Post a Comment

0 Comments