Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

9th Tamil Memory Poem திருக்குறள்

ஒன்பதாம் வகுப்பு தமிழ் 

மனப்பாட செய்யுள் 

திருக்குறள்


பொறையுடைமை

3. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் 
தகுதியான் வென்று விடல்.

கேள்வி

7. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
ஆன்ற பெருமை தரும்.

வினைத்தூய்மை

14. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்

குடிமை

1. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.

சான்றாண்மை

2. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண்.

நாணுடைமை

3. பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.

உழவு

4. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை

                                                                -திருவள்ளுவர்

புறநானூறு

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் 
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம் 
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு 
உடம்பும் உயிரும் படைத்திசினோரே
                                                    - குடபுலவியனார்

ஓ,.என் சமகாலத் தோழர்களே

அறிவியல் என்னும் வாகனம் மீதில்
        ஆளும் தமிழை நிறுத்துங்கள்
கரிகா வன்தன் பெருமை எல்லாம்
       கணிப்பொறி யுள்ளே பொருத்துங்கள்
ஏவும் திசையில் செம்பைப் போல
        இருந்த இனத்தை மாற்றுங்கள்
ஏவு கணையிலும் தமிழை எழுதி
        எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்
                                            -வைரமுத்து

மருதம்

கல்லிடைப் பிறந்த ஆறும்
              கரைபொரு குளனும் தோயும் 
முல்லை அம் புறவில் தோன்று
            முருகுகான் யாறு பாயும்
நெல்லினைக் கரும்பு காக்கும் 
            நீரினைக் கால்வாய் தேக்கும்
மல்லல் அம் செறுவில் காஞ்சி
            வஞ்சியும் மருதம் பூக்கும். (72)
                                - புலவர் குழந்தை

அக்கறை

சைக்கிளில் வந்த

தக்காளிக் கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது

அனைத்துத் திசைகளிலும் பழங்கள்

தலைக்கு மேலே பழங்களை விடவும்

வேலை இருப்பதாய்க்

கடந்தும் நடந்தும்

அனைவரும் போயினர்

நடுங்கிப் போனது

அடுத்த மனிதர்கள்

மீதான அக்கறை

                                    -கல்யாண்ஜி

சீவக சிந்தாமணி

தலைவாங்க விளைந்த நெல் பயிர்

சொல் அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்

மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார்

செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல்

கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே.

                             -திருத்தக்கதேவர் 


Post a Comment

0 Comments