Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

11th Tamil Important Question Unit 1

பதினோராம் வகுப்பு தமிழ் 

இயல் 1

முக்கிய வினாக்களும் விடைகளும் 

பதினோராம் வகுப்பு இயல் 1 குறுவினாக்கள்

 

  1.  பேச்சுமொழி, எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?

  • எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சுமொழி உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கிறது. எனவேதான் இலக்கிய வாழ்க்கை நெறியை கைவிட்டுப் பேச்சுமொழிக்குத் திரும்பியவுடனே கவிஞனுடைய கவிதையின் மொழி, அதிக வெளிப்பாட்டுச் சக்தி கொண்டதாக மாறிவிடுகிறது.
  • எழுதுவதை மட்டும்தான் மனிதனின் கை செய்கிறது. முகத்தில் இருக்கும் வாய், உடம்பிலிருக்கும் கையைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது.
  • அதனால்தான் பேச்சுமொழி, எழுத்துமொழியைக் காட்டிலும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.

 2.  என் அம்மை, ஒற்றியெடுத்த

    நெற்றிமண் அழகே

வழிவழி நினதடி தொழுதவர்

உழுதவர், விதைத்தவர்

வியர்த்தவர்க்கெல்லாம்

நிறைமணி தந்தவள்

-இக்கவிதை அடிகளில் உள்ள வினையாலணையும் பெயர்களை எழுதுக.

வினையாலணையும் பெயர்கள்:

  • தொழுதவர் -
  • உழுதவர்
  • விதைத்தவர்
  • வியர்த்தவர்.

 

3.   3. பாயிரம் பற்றி நீ அறியும் கருத்து யாது

பாயிரம் என்பதன் விளக்கம்:

  • நாலைப் புரிந்து கொள்ளவும், அதன் சிறப்பை உணர்ந்து விருப்பத்துடன் கற்கவும் பாயிரம் உதவுகிறது.
  • நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும் அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரம் ஆகும். பாயிரம் பொதுப்பாயிரம், சிறப்புப் பாயிரம் என இரு வகைப்படும். 
  • ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும் பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப்படும்.

 4.   இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக. 

தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை எனக் குறிப்பிடுகிறார் இரசூல்

 

பதினோராம் வகுப்பு இயல் 1 சிறுவினாக்கள்

 1.   க.வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்?

  • தமிழ்மொழிப் பற்றி பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாட வேண்டும்.
  • காலத்தால் அழியாத பழமை வாய்ந்த கனிமங்களின் உரமெல்லாம் சேரப் பாடத்தான் வேண்டும்.

 

2.   2. நூல் ஒன்றின் வரையில் இடம்பெற வேண்டுவளவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது?

  • முகவுரை என்பது நூலுக்கு முன் சொல்லப்படுவது.
  • முகவுரையில் நூலின் இயல்பு ஆசிரியர் இயல்பு கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு. கற்கும் முறை, நூலாசிரியர் வயர், நூல் பின்பற்றிய வழி, நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு நூலின் பெயர், தொகை வகை. வி என்பவவைற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு, நூல் குறிப்பிடப்படும் கருத்து. நூலைக் கேட்போர் மாணவர், நூலை கற்பதனால் பெறுகின்ற பயன்.
  • இந்த எட்டுச் செய்திகளும் நூல் ஒன்றின் முகவுரையில் இடம் பெற வேண்டும் என நன்னூல் குறிப்பிடுகிறது.

 

3.   3. என்னுயிர் தமிழ் வாழி என்பேன்' என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப் பற்றினை எழுதுக.

  • என் தாய் மொழி தமிழில் பிறமொழி சொற்கள் கலவாமல் நான் பேசுவதோடு மட்டுமல்லாமல், என் உறவினர், நண்பர்களையும் தூயத் தமிழில் பேச முயற்சி மேற்கொள்வேன்.
  • வீரநடை கொண்டு உலகம் முழுவதும் என் தமிழ் மொழியின் பெருமைகளை பறைசாற்றுவேன்,
  • நான் எங்கு இருந்தாலும் என் தாய் மொழி தமிழுக்கு முதல் இடம் தருவேன், தாய்மொழியை வளப்படுத்துவோம், பல உயர்ந்த தமிழ் இலக்கியங்களைப் படைத்த தமிழ் அறிஞர்கள் பெருமைபடுத்த என்னால் இயன்றதைச் செய்வேன்.
  • தமிழ் மொழியில் எண்ணற்ற நூல்கள் உருவாகவும், உலகில் சிறந்த வேற்று மொழி படைப்புகளை தமிழாக்கம் செய்யவும் தமிழ் ஆட்சி மன்றக் குழுவின் விண்ணப்பம் செய்வேன்.
  • மக்களின் பெயர்கள், அங்காடிகளின் பெயர்கள், திரைப்படங்களின் எல்லாம் தமிழ் பெயர்களாகவே இருக்க என்னால் இயன்ற முயற்சிகளை மேற் கொள்வேன்.

 

4.   4. கூற்று : குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு

செய்வது என்று: நினைவுகூரத்தக்க தருணங்களைப்

பதிவு செய்வதாகும்

கவிதை : - கூண்டு திறந்தது

சிறகடிக்கவா?

இல்லை சீட்டெடுக்க.

கூற்றில் குறியீடு எனக் குறிப்பிடப்படுவது கவிதையில் எப்பொருளாக வந்துள்ளது?

கிளி இருப்பது கூண்டில். அக்கூண்டைத் திறந்தாலும் கிளி வெளியே வருவது சிறகடித்துப் பறப்பதற்கு அல்ல. சீட்டெடுப்பதற்காகத்தான்.

இக்கவிதையில் நினைவு கூரத்தக்கத் தருணம் என்பது ஓர் அடிமையின் வாழ்க்கை முறை

 

5. 5. மொழி முதல், இறுதி எழுத்துகள் யாவை ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுத் தருக.

மொழி முதல் எழுத்துகள் 22.

உயிரெழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.

மெய்யெழுத்துகள் மெய்வடிவிலேயே சொல்லுக்கு முதலில் வருவதில்லை. அவை உயிரெழுத்துகள் சேர்ந்து உயிர்மெய் வடிவிலேயே மொழிக்கு முதலில் வருகின்றன. மெய்களில் க, ச.த, ப,ங, ஞ, ந, ம, ய வ என்னும் பத்து வரிசைகள் சொல்லின் முதலில் வரும். (ஙனம் என்னும் சொல்லில் மட்டுமே ங வரும்)

எ-கா .

அம்மா, ஆடு, இலை, ஈட்டி, உடை, ஊர், எடு, ஏர். ஐயம், ஒன்று, ஓணான், ஔவை.

கண்ணன், சந்தம், தண்ணீர், நண்டு, படை, மலை, வயல், யவணர், ஞமலி, ஙனம் (விதம்

மொழி இறுதி எழுத்துகள் -24

உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் இறுதியில் வரும் மெய்களில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் பதினோரெழுத்தும் சொல்லின் இறுதியில் வரும் பழைய இலக்கண நூலார் மொழி இறுதிக் குற்றியலுகர எழுத்தையும் சேர்த்துக் கொள்வர்

எ.கா.

பல, வினா, கரி, தீ, கடு, பூ. மேலே தை, நொ. போ. கௌ - உயிர்மெய்யோடு கூடி இறுதியில் வந்தது.

உரிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ், வாள் - மெய்யெழுத்துக்கள் இறுதியில் வந்தன. எஃகு, இருபது - குற்றியலுகரம் இறுதியில் வந்தது.




Post a Comment

0 Comments