Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

JEE MAIN EXAM 2021 Application Date extend

JEE MAIN EXAM 2021

விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு.

2021-ம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின்  தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் ஜனவரி 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் 2021 தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் 23 முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெறும். ஒரே மாணவர் 4 முறையும் தேர்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும்.

இந்த ஆண்டு ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் இந்தி, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் தேர்வு நடைபெற உள்ள நிலையில், பிற மொழிகளில் தேர்வுகள் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே நடைபெறும்.

மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வுக்காக டிசம்பர் 15-ம் தேதி முதல் விண்ணப்பித்து வந்தனர். இந்த ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜன.17 கடைசித் தேதி என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் மதன் மோகன் மால்வியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், இளங்கலைப் பொறியியல் படிப்புகளுக்கு ஜேஇஇ மெயின் 2021 தேர்வு முடிவுகள் கணக்கில் கொள்ளப்படும் என்று அறிவித்தது. இதையடுத்து, தேர்வுக்கு விண்ணப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments