Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

pondicherry school reopen date for doubts?

புதுச்சேரி மற்றும் காரைக்கால் நகரங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ மாணவர்கள் அக்டோபர் 5ம் தேதி பள்ளிக்குச் செல்லலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆன்லைன் வழியாக நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதில் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், தலைமைச் செயலர் அஸ்வனி குமார் உள்ளிட்ட பல உயர் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.


அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, புதுச்சேரி, காரைக்காலில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகங்கள் ஏற்பட்டால், அக்டோபர் 5 ம் தேதி முதல் பள்ளிக்குச் சென்று தீர்வு காணலாம் என்றும், அதேபோல் 9 மற்றும் பிளஸ் ஒன் மாணவர்கள் அக்டோபர் 12 முதல் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.கல்வித்துறை மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியையும், மதிய உணவையும் ஏற்பாடு செய்யலாம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பள்ளிகளைத் திறக்க அனுமதியில்லை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments