10th Tamil Unit 1
Book back and Interior
குறுவினா & சிறுவினா
10th Tamil Unit 1 Book back | Interior Question & Answers
Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21, Samacheer Kalvi 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil 10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide pdf free download 10th book back answer 10th standard Tamil unit 1 book back question and answer 10th standard Tamil unit 1 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use
10th Tamil Unit 1 Book back and Interior Short Question & Answers, 10th Samacheer kalvi Tamil Book Back Question and answers, 10th tamil Solutions guide, Students can Download 10th Tamil Chapter 1 அன்னை மொழியே Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework, home test, home assignments, assignments and to score high marks in board exams.
10th Tamil Unit 1 Book back | Interior Question & Answers
தமிழ்சொல் வளம்
கற்பவை கற்றபின்
சிறுவினா
1. ‘புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’
இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
பிள்ளை – தென்னம் பிள்ளை வாங்கி வந்தேன் .
வடலி – காட்டில் பனை வடலியைப் பார்த்தேன்.
நாற்று – நெல் நாற்று நட்டேன்.
கன்று – வாழைக்கன்று நட்டேன்.
பைங்கூழ் – சோளப் பைங்கூழ் பசுமையாக உள்ளது.
குறுவினா
1.தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள் யாவை?
தாள், தண்டு , கோல், தூறு, தட்டு, கழி, கழை, அடி.
2.தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?
கவை, கொம்பு, கொப்பு, கிளை, சினை, போத்து, குச்சி, இணுக்கு.
3.தாவரங்களின் காய்ந்த பகுதிகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?
சுள்ளி, விறகு, வெங்கழி, கட்டை.
4.தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?
இலை, தாள், தோகை, ஓலை, சண்டு, சருகு.
5.தாவரங்களின் நுனிப்பகுதியைக் குறிக்கும் சொற்கள் யாவை? (கொழுந்து வகை)
- துளிர் அல்லது தளிர்
- குருத்து
- முறி அல்லது கொழுந்து
- கொழுந்துதாடை
6.பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?
அரும்பு, போது, மலர், வீ, செம்மல்.
7.தாவரங்களின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?
பூம்பிஞ்சு, பிஞ்சு, வடு, மூசு, கவ்வை, குரும்பை, முட்டுக்குரும்பை, இளநீர், நுழாய், கருக்கல், கச்சல்.
8.தாவரங்களின் குலை வகைகளைக் குறிப்பதற்கான சொற்கள் யாவை?
கொத்து, குலை, தாறு, கதிர், அலகு அல்லது குரல், சீப்பு.
9. கெட்டுப்போன காய்க்கும் கனிக்கும் தாவரத்திற்கேற்ப வழங்கப்படும் சொற்கள் யாவை?
சூம்பல், சிவியல், சொத்தை, வெம்பல், அளியல், அழுகல், சொண்டு, தேரைக்காய், அல்லிக்காய், ஒல்லிக்காய், கோட்டான்காய் (அ) கூகைக்காய்.
10. பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க வழங்கும் சொற்கள் யாவை?
தொலி, தோல், தோடு, ஓடு, குடுக்கை, மட்டை, உமி, கொம்மை.
11. தானியங்களுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?
கூலம், பயறு, கடலை, விதை, காழ், முத்து, கொட்டை, தேங்காய், முதிரை.
12. தாவரங்களின் இளமைப் பெயர்களை எழுது.
நாற்று, கன்று, குருத்து, பிள்ளை , குட்டி, பைங்கூழ், மடலி (அ) வடலி.
13. கோதுமையின் வகைகளில் சிலவற்றைக் கூறு.
சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை.
14. சம்பா நெல் வகைகளை எழுதுக.
ஆவிரம்பூச்சம்பா, ஆனைக் கொம்பன் சம்பா, குண்டுச் சம்பா, குதிரைவாலிச் சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது வகைகள் சம்பாவில் உள்ளன.
15. இரா. இளங்குமரனாரின் தமிழ்ப்பணியைத் தரம் உயர்த்திய நல்முத்துகள் யாவை?
- இலக்கண வரலாறு
- தமிழிசை இயக்கம்
- தனித்தமிழ் இயக்கம்
- பாவாணர் வரலாறு
- குண்டலகேசி உரை
- யாப்பருங்கலம் உரை
- புறத்திரட்டு உரை
- திருக்குறள் தமிழ் மரபுரை
- காக்கைப் பாடினிய உரை
- தேவநேயம்
முதலியன இரா. இளங்குமரனாரின் தமிழ்ப்பணியைத் தரமுயர்த்திய நல்முத்துகளாகும்.
16. உலகத்தமிழ் மாநாடு குறித்து க. அப்பாத்துரையார் கூறுவன யாவை?
“உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா. அம்மாநாட்டுக்குரிய முதல் மொழியும் தமிழே!” என்று க. அப்பாத்துரையார் கூறுகின்றார்.
10th Tamil Unit 1 Book back | Interior Question & Answers
சிறுவினா
1. தேவநேயப்பாவாணர் பற்றி நீவீர் அறிந்தவற்றை எழுதுக.
பெயர் : தேவநேயப் பாவாணர்
சிறப்புப்பெயர் : மொழிஞாயிறு
படைப்புகள் : இலக்கணக் கட்டுரைகள், மொழியாராய்ச்சிக் கட்டுரைகள், சொல்லாய்வுக் கட்டுரைகள்.
பணி : செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநர், உலகத் தமிழ்க் கழகத் தலைவர்
2. இரா. இளங்குமரனார் குறித்து நீவீர் அறிந்தவற்றைக் கூறுக.
பெயர் : இரா. இளங்குமரனார்
தமிழ்ப்பற்று : விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது என்றார்.
திரு.வி.க வழி : தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல் இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கொண்டவர்.
சிறந்த நூல்கள் : இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, புறத்திரட்டு உரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம்
பிற செய்திகள் : திருவள்ளுவர் தவச்சாலை மற்றும் பாவாணர் நூலகத்தை அமைத்தார்.
3. கார்டிலா – நூல் குறிப்பு வரைக.
1554-ல் போர்ச்சுகீசு நாட்டில் தமிழில் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்.
ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்ட நூல்.
இதனை Carthila de lingoa Tamul e Portugues என்பர்.
இந்திய மொழிகளுள் மேலை நாட்டு மொழிகளில் அச்சிடப்பட்ட முதல் நூல் தமிழ்மொழி நூலே.
4. எந்தெந்தத் தாவரங்களின் அடிப்பகுதி என்னென்ன பெயர்களால் அழைக்கப்படுகிறது எனப் பட்டியலிடுக.
தாள் – நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
தண்டு – கீரை, வாழையின் அடி
கோல் – நெட்டி, மிளகாய்ச் செடியின் அடி
துறு – குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
தட்டு (அ) தட்டை – கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
கழி – கரும்பின் அடி
கழை – மூங்கிலின் அடி
அடி – புளி, வேம்புவின் அடி
5. தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கும் சொற்களையும் அவை தாவரங்களின் எப்பகுதிக்குப் பொருந்தும் என்பதையும் எழுது.
- கவை – மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை
- கொம்பு (அ) கொப்பு – கவையின் பிரிவு
- கிளை – கொம்பின் பிரிவு
- சினை – கிளையின் பிரிவு
- போத்து – சினையின் பிரிவு
- குச்சி – போத்தின் பிரிவு
- இணுக்கு – குச்சியின் பிரிவு
6. எந்தெந்தத் தாவரங்களின் இலைகள் என்னென்ன பெயர்களால் அழைக்கப்படுகின்றன என்பதைப்
பட்டியலிடுக.
- புளி, வேம்பு – இலை
- தென்னை, பனை – ஓலை
- நெல், புல் – தாள்
- காய்ந்த இலை – சருகு
- சோளம், கரும்பு – தோகை
7. தாவரங்களின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கப்படும் பெயர்களையும் அவை எத்தாவரப் பிஞ்சுகளுக்குப் பொருந்தும் என்பதையும் கூறு.
(பூம்பிஞ்சு -பூவோடு கூடிய இளம்பிஞ்சு, பிஞ்சு – இளம்காய்)
- வடு – மாம்பிஞ்சு
- இளநீர் – முற்றாத தேங்காய்
- மூசு – பலாப்பிஞ்சு
- நுழாய் – இளம்பாக்கு
- கவ்வை – எள் பிஞ்சு
- கருக்கல் – இளநெல்
- குரும்பை – தென்னை, பனை பிஞ்சு
- கச்சல் – வாழைப்பிஞ்சு
8. எந்தெந்தத் தாவரங்களின் குலைகள் என்னென்ன பெயர்களால் அழைக்கப்படுகின்றன எனப் பட்டியலிடுக.
- கொத்து – அவரை, துவரை
- கதிர் – கேழ்வரகு, சோளக் கதிர்
- குலை – கொடி முந்திரி
- அலகு (அ) குரல் – நெல், தினைக் கதிர்
- தாறு – வாழைக்குலை
- சீப்பு – வாழைத் தாற்றின் பகுதி
9. கெட்டுப்போன காய்க்கும் கனிக்கும் தாவரத்திற்கேற்ப வழங்கப்படும் பெயர்கள் யாவை?
- சூம்பல் – நுனியில் சுருங்கிய காய்
- சிவியல் – சுருங்கிய பழம்
- சொத்தை – புழுபூச்சி அரித்த காய் (அ) கனி
- வெம்பல் – சூட்டினால் பழுத்த பிஞ்சு
- அளியல் – குளுகுளுத்த பழம்
- அழுகல் – குளுகுளுத்து நாறிய பழம் (அ) காய்
- சொண்டு – பதறாய்ப் போன மிளகாய்
- கோடான்காய் (அ) கூகைக்காய் – கோட்டான் அமர்ந்ததினால் கெட்ட காய்
- தேரைக்காய் – தேரை அமர்ந்ததினால் கெட்டகாய்
- அல்லிக்காய் – தேரை அமாந்ததினால் கெட்ட தேங்காய்
- ஒல்லிக்காய் – தென்னையில் கெட்ட காய்
10.பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க அவற்றின் தன்மைக்கேற்ப தாவரங்களுக்கு வழங்கப்படும் சொற்களை எழுதுக.
- தொலி – மிக மெல்லியது
- குடுக்கை – சுரையின் ஓடு
- தோல் – திண்ணமானது
- மட்டை – தேங்காய் நெற்றின் மேற்பகுதி
- தோடு – வன்மையானது
- உமி – நெல், கம்பு ஆகியவற்றின் மூடி
- ஓடு – மிக வன்மையானது
- கொம்மை – வரகு, கேழ்வரகு உமி
10th Tamil Unit 1 Book back | Interior Question & Answers
11. தானியங்களுக்குத் தாவரத்திற்கேற்ப வழங்கப்படும் சொற்கள் யாவை?
கூலம் – நெல், புல் தானியங்கள்
- பயறு – அவரை, உளுந்து
- கடலை – வேர்க்கடலை
- விதை – கத்தரி, மிளகாய் வித்து, கொண்டைக் கடலை
- காழ் – புளி, காஞ்சிரை வித்து
- முத்து – வேம்பு, ஆமணக்கு வித்து
- கொட்டை – மா, பனை வித்து
- தேங்காய் – தென்னை வித்து
- முதிரை – அவரை, துவரை பயறுகள்
12.தாவரங்களின் இளம் பருவத்திற்கான சொற்களையும் அதற்குரிய தாவரங்களின் பெயர்களையும் எழுது.
- நாற்று – நெல், கத்திரியின் இளநிலை
- கன்று – மா, புளி, வாழையின் இளநிலை
- குருத்து – வாழையின் இளநிலை
- பிள்ளை – தென்னையின் இளநிலை
- குட்டி – விளாவின் இளநிலை .
- மடலி (அ) வடலி – பனையின் இளநிலை
- பைங்கூழ் – நெல், சோளத்தின் இளநிலை
13.தமிழ்ச் சொல் வளம் குறித்து கால்டுவெல் குறிப்பிடும் கருத்தை எழுதுக.
தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத் தெளிவாகத் தோன்றும்.
தமிழில் மட்டும் பயன்டுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள என்கிறார் கால்டுவெல்.
14.எவற்றை அமைத்துக்கொள்வது, சிறந்த மதிநுட்பமும் பண்பாடும் உடைய மக்கட்கே இயலும்?
திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது மொழியாதலின், அதுவே ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கும் சிறந்த வழியாகும்.
பொருளைக் கூர்ந்து நோக்கி நுண்பாகுபாடு செய்து அவற்றிற்கேற்பப் பருப்பொருட் சொற்களும், நுண்பொருட்சொற்களும் அமைத்துக்கொள்வது, சிறந்த மதிநுட்பமும் பண்பாடும் உடைய மக்கட்கே இயலும்.
15.பழங்காலத்தில் விளைந்த அளவு இக்காலத்தில் விளையாதவை எவை? விளைந்து வருபவை எவை?
பழங்காலத்தில் விளைந்த அளவு பொன்னும் மணியும் முத்தும் பவளமும் இன்று விளையாவிடினும் அருமையான கூலங்களும் சிறுகூலங்களும் இன்றும் தென்றமிழ் நாட்டில் விளைந்து வருகின்றன.
குறுவினா
1. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி என்பர். இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர்.
எ.கா: சீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான்.
– இத்தொடர் எவ்வித மாற்றமுமின்றி இரண்டு விதமான பொருளைத் தருகிறது.
சீனியில் (சர்க்கரை) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து மிதக்கிறது.
சீனிவாசகனாகிய திருமால் பாற்கடலில் துயில் கொள்கிறார்.
சிறுவினா
1. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.
குறுவினா
1. ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.
2. கடலிலிருந்து கிடைக்கும் பொருட்கள் யாவை?
முத்தும், அமிழ்தமும் கிடைக்கிறது.
வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகள் கிடைக்கிறன.
3. தமிழ்மொழி குறித்து தமிழழகனார் கூறிய செய்தி யாது?
தமிழ் இயல், இசை, நாடகம் முத்தமிழாய் வளர்ந்தது.
முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
ஐம்பெருங் காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது.
சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.
4. இரட்டுற மொழிதல் அணி என்றால் என்ன? அதன் வேறுபெயர் யாது?
ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும்.
வேறுபெயர் – சிலேடை அணி.
5. சிலேடைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
சிலேடைகள் இரண்டு வகைப்படும். அவை:
செம்மொழிச் சிலேடை
பிரிமொழிச் சிலேடை
10th Tamil Unit 1 Book back | Interior Question & Answers
கலைச்சொல் அறிவோம்
- Vowel – உயிரெழுத்து
- Consonant – மெய்யெழுத்து
- Homograph – ஒப்பெழுத்து
- Monolingual – ஒரு மொழி
- Conversation – உரையாடல்
- Discussion – கலந்துரையாடல்
0 Comments