Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

Quarterly Exam Model Question

10th English Paper 1 Quarterly Exam Model Question paperclick here
10th STD MATHS QUARTERLY EXAM MODEL QUESTION PAPERclick here

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தரமான ஆசிரியர்களை கொண்டு வினாத்தாள் தொகுப்புகள் விடை குறிப்புகள் தொடர்ந்து நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது அவற்றை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பொதுத் தேர்வு எழுதுவதற்கு முன்பாக நமது வலைதளத்தில் உள்ள வினாக்களை நன்கு பயிற்சி செய்து நல்ல மதிப்பெண் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள் மேலும் இவற்றை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

இயல் 1 அமுத ஊற்று

1. வேங்கை என்பதை தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
2. ‘உடுப்பதூஉம்  உண்பதூஉம் காணின் பிறர்மேல்
 வடுக்காண வற்றாகும் கீழ்’ இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகை யைச் சுற்றி அதன் இலக்கணம் தருக.
3. தற்கால உரைநடையின் சிலேடை அமைப்பையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
4. பெருஞ்சித்திரனா; இயற்றிய நூல்கள் யாவை?
5. பெருஞ்சித்திரனார் எமக்கு உயிர் என இதனைக் கூறுகிறார்?
6. வண்டைப் போல் நாம் என்ன செய்வதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்?
7. அன்னைமொழி பாடலை அழகாக்கும் நூல்கள் யாவை?
8. தமிழ் vவற்றோடு இணைந்து பேசப்படுகிறது?
9. தமிழ் எவ்வாறு வளர்ந்தது?
10. தமிழ் எதனால் வளர்க்கப்பட்டது?
11. தமிழ் எவற்றை அணிகலன்களாக பெற்றது?
12. ஐம்பெரும் காப்பியங்கள் யாவை?
13. மூன்று வகையான சங்குகள் யாவை?
14. எதனை இழக்கக் கூடாது என்று இரா இளங்குமரனார் கூறுகிறார்?
15. பூவின் நிலைகளை எழுதுக?
16. தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
17. தானியம் அணிகளுக்கு வழங்கும் வேறு பெயர்கள் எழுதுக.
18 தாவரங்களின் இளம் பயிர் வகைகளுக்கான சொற்களை எழுதுக.
19. கோதுமையின் வகைகள் யாவை?
20. தாவரத்தின் கிளைப்பிரிவுகள் விளக்குக.
21. இரட்டுறமொழிதல் என்றால் என்ன?
22. முத்தமிழ் என்பதன் தமிழுக்கும் கடலுக்கும் எவ்வாறு பொருந்துகிறது?
23. செய்யுளிசை அளபெடை என்றால் என்ன?
24. இன்னிசை அளபெடை என்றால் என்ன?
25. சொல்லிசை அளபெடை என்றால் என்ன?
26. ஒற்றளபெடை என்றால் என்ன?
27. அளபெடுக்கும் ஒற்று எழுத்துக்கள் யாவை?
28. சொல் என்றால் என்ன?
29. மொழியின் வகைகள் யாவை?
30. தொடர் மொழி என்றால் என்ன?
31. பொது மொழி என்றால் என்ன?
32. தொழிற்பெயர் என்றால் என்ன?
33. முதனிலைத் தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.
34. முன்னிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.
35. வினையாலணையும் பெயர் என்றால் என்ன?
36. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
37. அளபெடை என்றால் என்ன?
38. அளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
39. உயிரளபடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
40. பெருஞ்சித்திரனார் அன்னை மொழியை வாழ்த்தும் விதத்தை எழுதுக.
41. தாவரத்தின் நுனி பகுதிகளைக் குறிக்கும் சொற்கள் எழுதுக.
42. தாவரத்தின் குலை வகைகள் எவ்வாறெல்லாம் வழங்கப்படுகிறது.
43. பாவாணர் தமிழ் சொல்வளம் கட்டுரையின் கையாண்டுள்ள சொல் வளங்கள் விளக்குக. 

Post a Comment

0 Comments