Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 1,400 இடங்களை நிரப்ப உடனடி மாணவர் சேர்க்கை: 20ம் தேதி நடக்கிறது

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 1,400 இடங்களை நிரப்ப உடனடி மாணவர் சேர்க்கை: 20ம் தேதி நடக்கிறது

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகளில் நடப்பாண்டில் இளங்கலையில் காலியாக உள்ள 1,400 இடங்களை நிரப்ப உடனடி மாணவர் சேர்க்கை வரும் 20ம் தேதி நடக்கிறது. இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் 1,400 இடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களை உடனடி மாணவர் சேர்க்கையின் (ஸ்பாட் அட்மிஷன்) மூலம் வரும் 20ம் தேதி நிரப்ப பல்கலைக்கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த உடனடி கலந்தாய்வில், பொதுகலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று அதனை தவறவிட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் மற்றும் புதிதாக கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்கள் பங்கேற்கலாம். தரவரிசையின் அடிப்படையில் கல்லூரிகளை தேர்வு செய்யலாம். மேலும், மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீடு, கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், காலியிடங்களுக்கான அட்டவணை ஆகியவை பல்கலைக்கழகத்தின் www.tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். ஜூலை 15 முதல் 30ம் தேதிக்குள் வகுப்புகள் திறக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

Post a Comment

0 Comments