ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம். மாணவிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்
Moovalur Ramamirtham Ammaiyar Higher Education Assurance Scheme: மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.1,000/ வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெறும் மாணவிகள் ஜுலை 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
முன்னதாக, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
இதன்கீழ், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள், 2022-23 ம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான, விவரங்களை 25.06.2022 முதல் 30.06.2022க்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பெற்றோர் மற்றும் மாணவிகளின் தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று, உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகசாத்தை ஜுலை 10 வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments