Breaking News: பகுதி நேர ஆசிரியர் பணி-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள முக்கிய செய்தி அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் அரசு துறை காலிப் பணியிடங்களுக்கான எந்த ஒரு தேர்வும் நடத்தப் படவில்லை. எனவே அந்த காலிப்பணியிடங்கள் இன்றளவும் நிரப்பப்படாமல் உள்ளன. தற்போது கொரோனா மூன்றாவது அலை ஓய்ந்து இருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தேர்வுகள் நடத்துவதற்காக அறிவிப்பு வெளியாகி உள்ளன.
அரசு பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கை காரணமாக பகுதி நேர ஆசிரியர்களாக பலர் பணி அமர்த்தப்பட்டனர். கொரோனா காலத்தில்
தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் பதவி காலம் தொடர்ந்து நீட்டக்கப்பட்டு வந்தது.
இதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய செய்தி பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள்
முன்னறிவிப்பின்றி எந்த நேரமும் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும், பகுதிநேர ஆசிரியர்கள் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது எனவும் பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார்.
0 Comments