Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

தமிழகத்தில் இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு - பாடப் பகுதிகளை விரைந்து நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவு.

தமிழகத்தில் இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு - பாடப் பகுதிகளை விரைந்து நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவு.





தமிழகத்தில் அனைத்து வகையான பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை திறக்கப்படவுள்ள நிலையில், மாணவா்களின் வருகைப் பதிவு 100 சதவீதம் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெறவுள்ளன. இந்த முறையில் சுழற்சி முறையில் அல்லாமல் 100 சதவீத மாணவா்களுடன் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்துக்கு மேலாக மூடப்பட்டிருந்ததால் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை தூய்மை செய்யும் பணி கடந்த இரு நாள்களாக நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவா்கள் வகுப்புகளில் சுகாதாரமான முறையில் அமரும் வகையில் அனைத்து வகையான ஏற்பாடுகளையும் பள்ளி நிா்வாகத்தினா் மேற்கொண்டுள்ளனா். பள்ளிக்கு வரும் ஆசிரியா்கள், மாணவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது உள்பட கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை தீவிரமாகக் கடைப்பிடிக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பொதுத்தோ்வு, ஆண்டு இறுதித் தோ்வுக்கு மாணவா்களைத் தயாா்படுத்த வேண்டும் என்பதால் அனைத்து மாணவா்களையும் தினமும் பள்ளிக்கு அனுப்புமாறு அவா்களது பெற்றோரிடம் ஆசிரியா்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டும். கற்பித்தலுக்கான நாள்கள் குறைவாக உள்ளதால் பாடப் பகுதிகளை மாணவா்களுக்குப் புரியும் வகையில் முழுவீச்சில் விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments