தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பொது தேர்வு- கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் 12-ம் வகுப்பு
பொது தேர்வு ஒத்திவக்கப்பட்டது.
இந்த நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான தேதி விரைவில்
அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியதாவது நடப்பு கல்வியாண்டு
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு குறித்து ஆலோசனை
நடத்தப்பட்டது. மேலும் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில்
மாணவர்களின் பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம்
அளிக்கப்படுவதாகவும்,ஆலோசனைகள் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த முதல்வர்
அறிவுரைகள் அடிப்படையில் தேர்வு குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
தெரிவித்துள்ளார்.
0 Comments