7.04.2021 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை திருவண்ணாமலை மாவட்ட CEO அறிவிப்பு!
நகாண்.8089/01/2021, நாள்.05.04.2021
பொருள் தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தல் 2021 - திருவண்ணாமலை மாவட்டத்தில்
06.04.2021 அன்று வாக்குப்பதிவு நடைபெறுதல் தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களுக்கு ஏதுவாக வாக்குப்பதிவுக்கு மறு நாளான 07.04.2021 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி தலைவரின் அலுவலகக் குறிப்பு நான்.01/04/2021
பார்வையில் காணும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகக் குறிப்பின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 06.04.2021 அன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதால் வாக்குப்பதிவு நாளுக்கு மறுநாள் பிற தொகுதிகளுக்கு வாக்குசாவடி அரவவர்களாக பணி புரிந்து இரவு வீடு திரும்ப முடியாமல் மறுநாள் வீடுதிரும்பி உரிய நேரத்திற்கு பள்ளிக்கு வருகைபுரியாமல் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஏதுவாக திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து வகை. அரசு நிதியுதவி பள்ளிகளுக்கும் 07.04.2021 அன்று ஈடுசெய்யும் விடுமுறை அளிக்க பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 07.04.2021 அன்று விடுமுறை அளிக்கப்பட்டதால் அதற்கு ஈடுசெய்யும் பொருட்டு பிறிதொரு நாள் பள்ளிவேலை நாளாக செயல்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தலைமை ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், திருவண்ணாமலை மாவட்டம். அனைத்து வகை அரசு/நிதிஉதவி பள்ளித் தலைமையாசிரியர்கள், திருவண்ணாமலை மாவட்டம்
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், திருவண்ணாமலை மாவட்டம்,
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பணிந்தனுப்பலாகிறது.
0 Comments