Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

50 சதவீத இருக்கைகளுக்கே வகுப்பறைகளில் அனுமதி

50 சதவீத இருக்கைகளுக்கே வகுப்பறைகளில் அனுமதி


வகுப்பறைகளில், 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே, தனி மனித இடைவெளியுடன், மாணவர்களை அமர வைக்க வேண்டும்' என, பள்ளி கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரிப்பதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை, தமிழக அரசு விதித்துள்ளது. இதை பின்பற்றி, அரசு, தனியார் பள்ளிகளில், மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களை, பள்ளி கல்வி அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதன் விபரம்: தற்போது, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வரும் நிலையில், வகுப்பறைகளில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும், மாணவர்களை இடைவெளி விட்டு, அமர வைக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் இருக்கும் நேரம் முழுதும், முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை, பள்ளிகளுக்கு அனுமதிக்க வேண்டாம். 
மாணவர்கள் பள்ளிகளுக்குள் நுழையும் போது, அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே, அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments