பிளஸ் 2 செய்முறை தேர்வுக்குப் பிறகு
தொடர் விடுமுறை அளிக்க ஆலோசனை
சென்னை, ஏப். 2: தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்க ளுக்கு, செய்முறைத் தேர்வு முடிந்த பின்னர் தொடர் விடு முறை அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரையிலான மாணவர்க ளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று ஏற்கெ னவே அறிவிக்கப்பட்டுவிட் டது. இந்தநிலையில் பிளஸ் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடந்து வந்த நிலையில், பள்ளிகளில் தேர்தலையொட்டி கேமராக் கள் பொருத்தும் பணி நடை பெறுவதால் தற்போது மாண வர்களுக்கு விடுமுறை அளிக் கப்பட்டுள்ளது.
வரும் 6ஆம் தேதி வாக்குப் பதிவு முடிந்ததும் மறுநாள் முதல் வழக்கம்போல் வகுப்பு கள் நடைபெற உள்ளன.
பிளஸ் 2 வகுப்பு மாணவர் களுக்கு ஏப்.16 ஆம் தேதி முதல் ஏப். 23ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடை பெறுகின்றன அதன்பின் தொடர்ச்சியாக 10 நாள்க ளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட உள்ளது. பின்னர் மே 3 முதல் பொதுத்தேர்வு நடை பெறுகிறது. இதற்கான பணி கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
0 Comments