பொதுத் தேர்வில் மாற்றங்கள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் பொது தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கு மட்டும் தற்போது பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு உள்ளது.
சட்டமன்ற வாரியாக தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் தேர்தல் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்
இந்நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு வர இனி இரண்டு மாதங்களே உள்ள நிலையில், இந்த குறைவான காலகட்டத்தில் பாடங்களை முடித்துவிட முடியுமா? தேர்வை எப்படி எதிர்கொள்வது? என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்து உள்ளனர்
இதனை அடுத்து இதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
9 மற்றும் 11ம் வகுப்புகளை திறக்க மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்பு அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
அவர் கூறியதாவது, கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட இருந்ததால் இந்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்.
மேலும் பொதுத்தேர்வு வினாத்தாளும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் எதிர்பார்த்த வண்ணம் எளிமையான முறையிலேயே இருக்கும் என்றும், பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு தமிழக முதல்வர் அனுமதி அளித்த பிறகு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
2 Comments
Cancel the public exam
ReplyDeleteYes,cancel the all class exam
Delete