ஜனவரி 4ஆம் தேதி பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும். என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!
கடந்த சில மாதங்களாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன
இதனால் மாணவர்களின் கல்வித்தரம் ஆனது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது .இதனால்
தொலைக்காட்சி வாயிலாகவும் ஆன்லைன் வாயிலாக அனைத்து பள்ளிகளிலும் பாடங்கள்
நடத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் தமிழகத்தில் கடந்த 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என
அரசு அறிவித்திருந்தது. இதற்கு பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு
தெரிவித்தார்கள். இதனால் மறுதேதி குறிப்பிடாமல் பள்ளி திறப்பு ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தயார் செய்ய ஜனவரி
4ஆம் தேதி பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என்று இந்திய பள்ளி தேர்வு
சான்றிதழ் கவுன்சில் ( சி.ஐ.எஸ்.சி.இ) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இந்த
அமைப்பின் இயக்குனர் அனைத்து மாநில முதலமைச்சர்களும் கடிதம் எழுதி உள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் உரிய விளக்கங்களை தருவதற்கும் பிராஜக்ட் மற்றும் பிராக்டிகல்
செய்வதற்கும் பள்ளிகளைத் திற ந்தால்தான் முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
.
அதே நேரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது
தமிழ் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.
1 Comments
Now no school after june
ReplyDelete