Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

ntse exam 2020

NTSE Exam 2020

 பத்தாம் வகுப்புக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு நிகழாண்டு பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சனிக்கிழமை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: 2020-2021-ஆம் கல்வியாண்டில் அங்கீகா ரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் வரும் டிச.27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய திற னாய்வுத் தேர்விற்கு (என்டிஎஸ்இ) விண்ணப்பிக்கலாம் என அறி விக்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் நவ.21-ஆம் தேதி முதல் நவ.30-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்து டன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50-ஐ சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப் படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவ.30 ஆகும். மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது.


தேர்வர்கள் தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தங் கள் பள்ளிக்கு வரும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். போதிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண் டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments