College Reopen Update
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் பல மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை.
இதற்கிடையே, பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. அதன்படி ஒரு சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதி அறையில் தலா ஒரு மாணவர் மட்டுமே தங்கவேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி) நிபந்தனை விதித்து உள்ளது.நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் உயர்கல்வித்துறை என்ன செய்யலாம் என்று யோசனையில் உதக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு, மாணவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்பதால் விடுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி) உத்தரவு பிறப்பித்துள்ளது.
0 Comments