Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

10th Tamil கற்கண்டு- பா வகைகள்

10th  Tamil 

கற்கண்டு-  பா வகைகள்    

ப.எண் : 195

வினாக்கள் 
1 .யாப்பின் உறுப்புகள் யாவை  ?
   எழுத்து , அசை ,  சீர் , தளை , அடி ,  தொடை  ஆகிய உறுப்புகளைக்  கொண்டது .

2 .வெண்பாவிற்குரிய   ஓசை யாது ?
செப்பலோசை

3 .வெண்பாவிற்குரிய பாவினங்கள் யாவை  ?
திருக்குறள் , நாலடியார்

4 .ஆசிரியப்பாவிற்குரிய பாவினங்கள்  யாவை  ?
 சிலப்பதிகாரம் , மணிமேகலை ,பெருங்காதை

5.கலிப்பாவிற்குரிய ஓசை யாது ?
துள்ளல் ஓசை

6 . வஞ்சிப்பாவிற்குரிய ஓசை யாது ?
தூங்கல் ஓசை

7.புலவர் குழந்தை கூறிய யாப்போசை தரும் பாவோசை எப்படி இருக்கும்?
1. செப்பலோசை -  இருவர் உரையாடுவது போன்ற ஓசை
2. அகவலோசை - ஒருவர் பேசுவது போன்று -  சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை
3.  துள்ளலோசை -  கன்று துள்ளி வருவது போலச்  சீர் தோறும் துள்ளி வரும் ஓசை -  அதாவது தாழ்ந்து உயர்ந்து வருவது
4 . தூங்கலோசை - சீர் தோறும்  துள்ளாது தூங்கி வரும் ஓசை  - தாழ்ந்தே வருவது .

8 .ஈற்றுச்சீராயின் ஓரசைச்சீர் யாது ?
நேர் - நாள்
நிரை-  மலர்

9 .ஈற்றுச்சீராயின்  ஈரசைச்சீர் யாது ?
நேர்பு - காசு
நிரைபு - பிறப்பு 

10 .ஈரசைச்சீர் யாவை ?
நேர் - நேர் - தேமா
நிரைபு -  நேர் - புளிமா
நிரை- நிரை - கருவிளம்
நேர் - நிரை - கூவிளம்

11.மூவசைச் சீர்கள் யாவை ? 
காய்ச்சீர் - 4  
கனிச்சீர்  - 4  
காய்ச்சீர்
நேர் - நேர் -  நேர் - தேமாங்காய் 
நிரை -  நேர் - நிரை -  புளிமாங்காய் 
நிரை- நிரை - நேர் - கருவிளங்காய் 
நேர் - நிரை - கூவிளங்காய் 
கனிச்சீர்
நேர் - நேர் - நிரை - தேமாங்கனி
நிரை-  நேர் - நிரை - புளிமாங்கனி
நிரை- நிரை -  நிரை -கருவிளங்கனி
நேர் - நிரை - நிரை -கூவிளங்கனி

12. ' பா 'எத்தனை வகைப்படும்  ? அவை யாவை ?
பாக்கள் நான்கு வகைப்படும் . அவை
1. வெண்பா
2. ஆசிரியப்பா
3. கலிப்பா
4.  வஞ்சிப்பா

13.  வெண்பா  எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?
வெண்பா ஆறு வகைப்படும். அவை
1. குறள் வெண்பா
2. நேரிசை வெண்பா
3 .இன்னிசை வெண்பா
4. பஃறொடைவெண்பா
5. நேரிசைச் சிந்தியல் வெண்பா
6. இன்னிசைச் சிந்தியல் வெண்பா

14. ஆசிரியப்பாவின் வகைகள் யாவை ?
ஆசிரியப்பா நான்கு வகைப்படும். அவை
1. நேரிசை ஆசிரியப்பா
2. இணைக்குறள் ஆசிரியப்பா
3. நிலைமண்டில ஆசிரியப்பா
4.  அடிமறி   மண்டில ஆசிரியப்பா

15.  வெண்பாவின் பொது இலக்கணம்  யாது ?
வெண்பாவின் பொது இலக்கணம் :
1. ஈற்றடி  முச்சீராய்  ஏனைய அடிகள்  நாற்சீராய் வரும் .
2. இயற்சீர் ( மாச்சீர் , விளச்சீர் )  , வெந்நீர் ( காய்ச்சீர் )  வரும் . பிற சீர்கள் வரா.
3. இயற்சீர் வெண்டளையும் (  மாமுன் நிரை , விளமுன் நேர் )  வெண்சீர் வெண்டளையும் ( காய்முன் நேர் ) வரும் . பிறர் தலைகள் வரா.
4. ஈற்றடியின்  ஈற்றுச்சீர்  நாள் , மலர்,  காசு , பிறப்பு  என்ற வாய்பாடுகளுள்  ஒன்றுகொண்டு முடியும் .
5. செப்பலோசை பெற்று வரும்
6. இரண்டடி முதல் 12 அடி வரை வரும் .

16 . ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்  யாவை ?
ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் ;
1 .அடிகள் தோறும் நான்கு சீர்களைய் பெற்று வரும்.
2 .  இயற்சீர் ( மாச்சீர்,   விளச்சீர்)  பயின்று வரும் .பிற சீரும் வரும் . ஆனால் வஞ்சியுரிச்சீர் வரா.
3. ஆசிரியர் தலைகள் பயின்று வரும் . பிற தலைகள் கலந்துவரும் .
4. மூன்றடி சிற்றெல்லையும் , பாடும் புலவரின் மனக் கருத்திற்கேற்ப பல அடிகளை பெற்றும் வரும் .
5. அகவலோசை பெற்று வரும் .
6. ஈற்றடி ஈற்றுச் சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு .

Post a Comment

0 Comments