Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

10th Tamil Unit 4 Long Answers

 10th Tamil Unit 4 

நெடுவினா Question & Answers 

| 10th Tamil Long Answers | 5 Minute Maths 

Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21,  Samacheer Kalvi 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil  10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide PDF free download 10th book back answer 10th standard  10th Tamil Unit 4  நெடுவினா Question & Answers 10th standard Tamil unit 4 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | 5 Minute Maths Guide | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | 

10th Tamil Unit 4  நெடுவினா Question & Answers  | 10th Tamil Long Answers | 5 Minute Maths 

10th Tamil Unit 4  நெடுவினா Question & Answers  | 10th Tamil Long Answers | 5 Minute Maths ,  Short Question & Answers, 10th Samacheer kalvi Tamil Book Back Question and answers, 10th tamil Solutions guide, Students can Download 10th Tamil Chapter 4 Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework, home test, home assignments,  assignments and to score high marks in board exams.  10th Tamil Unit 4  நெடுவினா Question & Answers  | 10th Tamil Long Answers | 5 Minute Maths 

10th Tamil Unit 4  நெடுவினா Question & Answers  | 10th Tamil Long Answers | 5 Minute Maths

 Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions 

10th Tamil Unit 4  நெடுவினா Question & Answers  | 10th Tamil Long Answers | 5 Minute Maths 

செயற்க்கை நுண்ணறிவு

10th Tamil Unit 4 Long Answers
10th Tamil Unit 4 Big Questions

செயற்க்கை நுண்ணறிவு

நெடுவினா

1. ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்றுவிடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் “செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்” பற்றி ஒரு கட்டுரை எழுதுக.
முன்னுரை:
ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளும் வெறும் வணிகத்துடன் அது நின்றுவிடாது. செயற்கை நுண்ணறிவின் வெளிப்பாடுகள் இனி மிகுதியாக இருக்கும்.
ஊர்திகளை இயக்குதல் :
எதிர்காலத்தில் நாம் இயக்கும் ஊர்திகளைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயக்கப்படும்.
இத்தகைய ஊர்திகள் ஏற்படுத்தும் விபத்து குறையும்.
போக்குவரத்து நெரிசல் இருக்காது.
பயண நேரம் குறையும்.
எரிபொருள் மிச்சப்படும்.
மனிதர்களிடம் போட்டி :
மென்பொருள்கள், கவிதைகள், கதைகள், விதவிதமான எழுத்து நடைகள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு மனிதர்களிடம் போட்டியிட்டாலும் வியப்பதற்கில்லை.
கல்வித்துறை :
கல்வித்துறையில் இத்தொழில்நுட்பத்தைப் பல விதங்களில் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
பிற செயல்பாடுகள் :
விடுதிகளில், வங்கிகளில், அலுவலகங்களில் தற்போது மனிதன் அளிக்கும் சேவையை இயந்திர மனிதன் செய்யும்.
நம்முடன் உரையாடுவது, ஆலோசனை வழங்குவது, பயண ஏற்பாடு செய்து தருவது, தண்ணீர் கொண்டு வந்து தருவது, குழந்தைகளுக்குப் பொம்மை கொண்டு வந்து தருவது, குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்டுவது எனப் பலவற்றையும் செய்யும் நிலை வரும்.
வேலை வாய்ப்புகளில் மாற்றம் :
வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றத்தை எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு கொண்டு வரும்.
இயந்திர மனிதனிடம் குழந்தை :
எதிர்காலத்தில் இயந்திர மனிதனிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு அலுவலகம் செல்லும் பெற்றோரைப் பார்க்க முடியும்.
தோழனாய் இயந்திர மனிதன் :
வயதானவர்களுக்கு உதவிகள் செய்தும், அவர்களுக்கு உற்ற தோழனாய்ப் பேச்சுக் கொடுத்தும் பேணும் இயந்திர மனிதர்களை நாம் பார்க்க முடியும்.
உயிராபத்தை விளைவித்தல் :
செயற்கை நுண்ணறிவுள்ள இயந்திர மனிதர்களால், மனிதர் செய்ய இயலாத அலுப்புத் தட்டக்கூடிய கடினமான செயல்களையும் செய்ய முடியும்.
மனித முயற்சியில் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய செயல்களையும் செய்ய முடியும்.
வணிக வாய்ப்புகள் :
பெருநிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும், புதிய வணிக வாய்ப்புகளைச் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திக் கொடுக்கும்.
முடிவுரை:
செயற்கை நுண்ணறிவு சாதனங்களால் மனிதனின் வேலைப்பளு குறைந்துள்ளது. கால விரயம் தடுக்கப்பட்டுள்ளது.


2. செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினி, மென்பொருள், இயந்திர மனிதன் குறித்த செய்திகளைத் தொகுத்தெழுதுக.
முன்னுரை:
செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல்திட்ட வரைவு ஆகும். இது பொதிந்த இயந்திரங்களுக்கு ஓய்வு தேவையில்லை.
வேர்டுஸ்மித்:
இதழியலில் மொழிநடையை உருவாக்கும் மென்பொருளின் பெயர் வேர்டுஸ்மித்.
இதற்கு எழுத்தாளி என்று பெயர்.
இதில் தகவல்களைக் கொடுத்தால் மட்டும் போதும்; சில நொடிகளிலேயே அழகான கட்டுரையை உருவாக்குகின்றன.
இலா:
பாரத ஸ்டேட் வங்கி இலா’ என்னும் உரையாடு மென்பொருளை உருவாக்கியுள்ளது.
ஒரு விநாடிக்குப் பத்தாயிரம் வாடிக்கையாளர்களுடன் உரையாடும்.
அவர்களுக்கான சேவையை இணையம் மூலம் அளிக்கிறது.
வாட்சன்:
2016ல் ஐ.பி.எம். நிறுவனத்தின் செயற்கை நுண்ண றிவுக் கணினி வாட்சன்.
சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.
பெப்பர்:
ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர்.
இது உலக அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ.
வீட்டுக்கு, வணிகத்துக்குப், படிப்புக்கு என மூன்று வகை ரோபோக்கள் உள்ளன.
இவை மனிதரின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகின்றன.
பெப்பரை வரவேற்பாளராகவும் பணியாளராகவும் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பயன்படுத்துகிறார்கள்.
முடிவுரை:
இன்று அங்கும் இங்குமாய் இருக்கும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு, நாளை உலகம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.


பரிபாடல்

நெடுவினா


1. நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.
பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கி வரும் தமிழ் மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன.
சங்க இலக்கியமான பரிபாடலில்……. பூமியின் தோற்றம் குறித்து சொல்லப்பட்டுள்ளது.
எதுவுமே இல்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்குக் காரணமான கரு பேரொலியுடன் தோன்றியது.
உருவமில்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் என்னும் முதல் பூதங்கள் உருவாகின.
அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல காலங்கள் கடந்தது.
பின்னர் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.
மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தில் இப்பெரிய புவி மூழ்கி உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது.
இச்சூழல் மாற்றத்தினால் உயிர்கள் தோன்றி நிலை பெற்று வாழ்கின்றன.
புவி உருவாகிய நிகழ்வை அறிவியல் அறிஞர்கள் கண்டறியும் முன்பே நம் தமிழர் கண்டறிந்தனர் என்பது தமிழருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியும் பெருமைக்குரிய செயலுமாகும்.
விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

1. “அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் ‘விண்வெளிப் பயணம்’ என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.
அறிமுகவுரை:
இலக்கியங்களில் நிலவிய அறிவியல் கோட்பாடுகளையும் நம்பிக்கைகளையும் அறியும் பொருட்டு நானும், எம் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரோடு ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் மேற்கொண்டோம்.
பேரண்டம்:
பேரண்டப் பெருவெடிப்பு, கருந்துளைகள் பற்றியதான ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சிகள் முக்கியமானவை. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உண்டானதே என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் எங்களுக்கு விளக்கினார். ‘இப்புவியின் படைப்பில் கடவுள் போன்ற ஒருவர் பின்னணியில் இருந்தார்’ என்பதை மறுத்தார். பிரபஞ்சத்தை இயக்க வைக்கும் ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை’ என்றார்.
விண்மீன்கள்:
விண்வெளியில் பால்வீதியில் எங்கள் விண்வெளி ஓடம் சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது ஹ ாக்கின், ‘நமது பால் வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிருகின்றன. அவற்றுள் ஞாயிறும் ஒன்று. ஒரு விண்மீனின் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. விண்மீன் சுருங்கச் சுருங்க அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே சென்று அளவற்றதாகிறது என்று விளக்கினார்.
கதிர்வீச்சும் துகளும்:
“சில நேரங்களில் உண்மையானது புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைகிறது. அப்படி ஓர் உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும் என்பதை அறிந்து கொண்டோம். எப்படியெனில், கருந்துளையினுள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளியே வர முடியாது. கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து கதிர்வீச்சுகள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. கருத்துளை உண்மையிலேயே கருப்பாக இல்லை என்பதை நேரில் கண்டோம். அப்போது ஹாக்கிங், கருந்துளையிலிருந்து ஒரு கட்டத்தில் கதிர்வீச்சும் அணுத்துகள்களும் கசியத் தொடங்கி இறுதியில் வெடித்துவிடும் என்றார்.
முன்னர் அண்டவெளியில் காணப்படும் கருந்துளை அழிவு ஆற்றல் என்று கருதப்பட்டது. ஆனால் கருந்துளை என்பது படைப்பின் ஆற்றல் என்று எங்களிடம் ஹாக்கிங் விளக்கினார்.
திரும்புதல்:
விண்வெளி ஓடம் பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது பல வடிவிலான விண்கற்கள் மற்றும் தொலைவில் தூசுகள் போன்ற பால்வீதிகளையும் கண்டு அதனைப் பற்றிய சில கருத்துகளைப் பேசிக் கொண்டே பூமியை வந்தடைந்தோம். எங்களை வரவேற்க பலரும் கூடி வந்திருந்தனர்.
நிறைவுரை:
விண்வெளிப் பயணம் மேற்கொண்ட எங்களை வரவேற்றுப் பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிகழ்வுகள் அனைத்தும் எம் வாழ்வில் மறக்க முடியாதவையாகவே இருக்கின்றன.

கூடுதல் வினா
நெடுவினா

1. “விண்ணைத் தாண்டிய நம்பிக்கை” கதையினைச் சுருக்கி எழுதுக.
முன்னுரை:
உண்மையைக் கண்டறியும் அறிவியல் கொள்கை போற்றுதலுக்குரியது ஆகும். தன்னால் எந்த இயக்கமும் செய்ய இயலாத நிலையிலும், அறிவியலின் உண்மைகளைச் சொன்ன ஒருவர் ஸ்டீபன் ஹாக்கிங். அவரின் பாராட்டுக்குரிய செயல்களைக் காண்போம்.
தளராத நம்பிக்கை :
21ஆம் அகவையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் ஹாக்கிங். மருத்துவ உலகமே மிரண்டு போகுமளவு மேலும் 53 ஆண்டுகள் இயங்கினார். மூச்சுக்குழாய் தடங்களால் பேச்சை இழந்தார். பேசும் திறனை இழந்தபோதும் கன்னத்தசை அசைவு, கண் சிமிட்டல் மூலம் தன் கருத்துகளைக் கணினியில் தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார்.
ஹாக்கிங் கதிர்வீச்சு:
பேரண்டப் பெருவெடிப்பினால் உருவானதே இந்தப் புனித பூமி ஆகும். ஸ்டீபன் ஹாக்கிங் அமெரிக்க அறிவியல் அறிஞர் ஜான் வீலரின் கருந்துளைக் கோட்பாட்டை ஆராய்ச்சி செய்தார். கருந்துளையில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சும் அணுத்துகள்களும் இறுதியில் வெடித்து மறையும். கருந்துளைக்குள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளிவர இயலாது. இந்த ஆராய்ச்சியின் முடிவே ‘ஹாக்கிங் கதிர்வீச்சு’ எனப்படுகிறது.
சிறப்புகள்: அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருது, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது, உல்ப் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார். 2012 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நாயகர் என்ற சிறப்பைப் பெற்றார்.
முடிவுரை:
“பூ ஒற்றைக் காலில் நிற்பதால் ஊனம் என்று கருதுவதில்லை ” அதுபோல, தன் உடல் இயலாமையைப் பொருட்படுத்தாமல் சாதனைப்பூவாகி அறிவியல் உலகில் திகழ்ந்த ஹாக்கிங்கே நமக்குத் தன்னம்பிக்கைப் பாடம் எனலாம்.

இலக்கணம் – பொது


கட்டுரை எழுதுக.
தலைப்பு – விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

முன்னுரை :
ஆணுக்குப் பெண் சரிசமம்’ என்ற கருத்தை மெய்ப்பிக்கும் வண்ணம் விண்வெளியில் கால்பதித்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா. அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பிறப்பு :
01.07.1961 அன்று இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தில் பிறந்தார்.
பெற்றோர் – பனாரஸ் லால் சாவ்லா (தந்தை), சன்யோகிதா தேவி (தாய்).
பஞ்சாபிக் குடும்பத்தைச் சார்ந்தவள்.
‘கல்பனா’ என்றால் ‘கற்பனை’ என்று பொருள்.
இவருக்குச் சுனிதா மற்றும் தீபா என்ற இரு சகோதரிகளும் சஞ்சய் என்ற சகோதரனும் இருக்கின்றனர்.
 
கல்வி :
கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். 1982-இல் சண்டிகரில் உள்ள “பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றாள். 1984-இல் அமெரிக்காவில் உள்ள “டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம்” பெற்றாள். 1988-இல் விண்வெளிப் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
விண்வெளிப் பயணம் :
நாசா ஆராய்ச்சிக் கூடத்தில் “ஓசெர்செட் மேதொட்ஸ் இன்க் இல்” துணைத்தலைவராக பொறுப்பேற்றார்.
1995-இல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார்.
1997 ஆம் ஆண்டு கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87ல் முதல் விண்வெளி பயணத்தைத் தொடங்கினார்.
372 மணி நேரம் விண்வெளியிலேயே இருந்து சாதனை படைத்தார்.
கொலம்பியா விண்கல நிகழ்வு :
16.01.2003ல் அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ் – 107 (STS – 107) விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த விண்கலத்தில் சாவ்லா உட்பட ஏழு பேர் பயணித்தனர்.
பதினாறு நாட்கள் ஆய்வை முடித்துவிட்டு திரும்பிய போது, அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான் பரப்பில் அவ்விண்கலம் வெடித்துச் சிதறியது.
சாவ்லா உட்பட ஏழு பேரும் பலியாகினர்.
விருதுகளும் அங்கீகாரங்களும் :
இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க தமிழக அரசாங்கம் “கல்பனா சாவ்லா” விருதினை 2004 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.
நாசா ஸ்பேஸ் பிளைட் மெடல்.
நாசா டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்.
நியூயார்க்கில் உள்ள ஒரு தெருவிற்குக் “கல்பனா (way)” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முடிவுரை :
பெண்ணினத்திற்கே பெருமை சேர்ந்தவர் கல்பனா.
“கனவுகளைக் கண்டு அந்தக் கனவுகளை நனவாக்குவதற்கு விடா முயற்சியோடும் முழுமனதோடும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்” என்ற உண்மையை உலகிற்கு உணர்த்திச் சென்ற வீரப்பெண்ணை நாமும் போற்றுவோம்.

நயம் பாராட்டுக.

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோல வெறிபடைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ ? – பாரதியார்
தலைப்பு : இயற்கை
ஆசிரியர் : பாரதியார்
திரண்ட கருத்து :
வாழைக்கு அழகு குருத்து
செய்யுளுக்கு அழகு திரண்ட கருத்து நிலா, விண்மீன், காற்று ஆகிய இவற்றையெல்லாம் செம்மையுற்ற ஏற்படுத்தி வைத்து, அவற்றிலெல்லாம் தோய்ந்துள்ளது. திருவருளாகிய அமுதரசம். அந்த அமுதரசத்தைப் பருகி, அழகிய உன்னத நிலைக்கு யாம் உள்ளானோம். உலவுகின்ற மனமாகிய சிறுபறவையை எங்கெங்கும் செலுத்திக் களிப்படைவோம். பலாச்சுளை ஏற்றப்பட்ட வண்டியை ஒரு வண்டானது ரீங்காரம் செய்து வட்டமிடுவது ஆச்சரியகரமானதா என்ன?
தொடை நயம் :
தொடையற்ற பாட்டு
நடையற்றுப் போகும்
செய்யுளில் எதுகை, மோனை, இயைபு, முரண் ஆகிய உறுப்புகளால் தொடுக்கப்படுவது தொடை.
மோனை நயம் :
மோனையற்ற பாட்டு
சேனையற்ற நாடு
செய்யுளில் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும். சான்று: குலாவும், குழம்பைக், குடித்தொரு
எதுகை நயம் :
நயம் பாராட்டுக.
வீரத்துக்கு அழகு வேங்கை
பாட்டுக்கு அழகு எதுகை
முதல் எழுத்து அளவொத்து இருக்க இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகை எனப்படும்.
சான்று:
அடி எதுகை:
நிலாவையும்
குலாவும்
உலாவும்
பலாவின்
அணி நயம் :
கோவிலுக்கு மணி அழகு
செய்யுளுக்கு அணி அழகு
இப்பாடலில் இயல்பு நவிற்சி அணி இடம் பெற்றுள்ளது.
மொழியோடு விளையாடு
தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.
(சோறு, கற்றல், கரு, பூவில், எழுத்து)
1. நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன்………….
2. விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை ………………
3. கல் சிலை ஆகுமெனில், நெல் ………….  ஆகும்.
4. குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து ………….
5. மீன் இருப்பது நீரில், தேன் இருப்பது ………….
Answer:
1. நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் கற்றல்.
2. விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை கரு.
3. கல் சிலை ஆகுமெனில், நெல் சோறு ஆகும்.
4. குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து எழுத்து.
5. மீன் இருப்பது நீரில், தேன் இருப்பது பூவில்.



Post a Comment

1 Comments