Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

10th Tamil Unit 3 Book back and Interior One Mark Question & Answers

  10th Tamil Unit 3 

Book back and Interior 

One Marks  Question & Answers 

Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21,  Samacheer Kalvi 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil  10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide pdf free download 10th book back answer 10th standard Tamil unit 3 book back question and answer 10th standard Tamil unit 3 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use

 10th Tamil Unit 3 Book back and Interior One Marks  Question & Answers, Short Question & Answers, 10th Samacheer kalvi Tamil Book Back Question and answers, 10th tamil Solutions guide, Students can Download 10th Tamil Chapter 3 Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework, home test, home assignments,  assignments and to score high marks in board exams.

 10th Tamil Unit 3 Book back and Interior One Marks  Question & Answers 

10th Tamil Unit 3 One Marks 

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions 

 விருந்து போற்றுதும்!

1. பின்வருவனவற்றுள் முறையான தொடர்.
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
Answer:
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

2. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை.
அ) நிலத்திற்கேற்ற விருந்து
ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து
ஈ) உற்றாரின் விருந்து
Answer:
ஆ) இன்மையிலும் விருந்து

கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக

1. வரிசைப்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
i) விருந்தே புதுமை – 1. செயங்கொண்டார்
ii) இல்லறவியல் – 2. இளங்கோவடிகள்
iii) சிலப்பதிகாரம் – 3. தொல்காப்பியர்
iv) கலிங்கத்துப்பரணி – 4. திருவள்ளுவர்
அ) 1, 2, 3, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 4, 3, 1, 2
ஈ) 3, 4, 2, 1
Answer:
ஈ) 3, 4, 2, 1

2. மினசோட்டா தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள இடம் எது?
அ) அமெரிக்கா
ஆ) இலங்கை
இ) மொரிசியஸ்
ஈ) மலேசியா
Answer:
அ) அமெரிக்கா
 
3. தொல்காப்பியர் விருந்து என்பதை என்னவென்று கூறியுள்ளார்?
அ) தொன்மை
ஆ) புதுமை
இ) இளமை
ஈ) முதுமை
Answer:
ஆ) புதுமை

4. “………தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ”
– என்று குறிப்பிடும் நூல் எது? இது யாருடைய கூற்றாக அமைகிறது?
அ) கம்பராமாயணம், சீதை
ஆ) சிலப்பதிகாரம், கண்ணகி
இ) நளவெண்பா , தமயந்தி
ஈ) சீவகசிந்தாமணி, காந்தருவதத்தை
Answer:
ஆ) சிலப்பதிகாரம், கண்ண

5. “பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவான யாவையே” – என்று குறிப்பிடும் நூல்?
அ) கம்பராமாயணம்
ஆ) பெரிய புராணம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) மணிமேகலை
Answer:
அ) கம்பராமாயணம்
 
6. “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறும் நூல்.
அ) குறுந்தொகை
ஆ) அகநானூறு
இ) நற்றிணை
ஈ) புறநானூறு
Answer:
இ) நற்றிணை

7. ‘காலின் ஏழடிப் பின் சென்று’ என விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்
அ) சிறுபாணாற்றுப்படை
ஆ) பெரும்பாணாற்றுப்படை
இ) பொருநராற்றுப்படை
ஈ) கூத்தராற்றுப்படை
Answer:
இ) பொருநராற்றுப்படை
 
8 “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” – இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்?
அ) கம்பராமாயணம்
ஆ) கலிங்கத்துப்பரணி
இ) முக்கூடற்பள்ளு
ஈ) பெரியபுராணம்
Answer:
ஆ) கலிங்கத்துப்பரணி

9. “குரல் உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்” என்று புறநானூறு காட்சிப்படுத்தும் கருத்து?
அ) தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினர்க்கு உணவளித்தாள் தலைவி.
ஆ) உணவுக்காக வைத்திருந்த தானியத்தை விதைப்பதற்குத் தலைவனிடம் தந்தாள் தலைவி.
இ) குழந்தையின் பசியைப் போக்க விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்துச் சமைத்துத் தந்தாள் தலைவி.
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினர்க்கு உணவளித்தாள் தலைவி.
 
10. தலைவன் விருந்தளிக்க அடகும் பணையமும் வைத்த பொருட்கள் யாவை?
அ) பழையவாள், கருங்கோட்டுச் சீறியாழ்
ஆ) புதியவாள், நெடுங்கோட்டுப் பெரியாழ்
இ) பழையவாள், நெடுங்கோட்டுப் பெரியாழ்
ஈ) புதியவாள், கருங்கோட்டுச் சீறியாழ்
Answer:
அ) பழையவாள், கருங்கோட்டுச் சீறியாழ்

11. அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்துச் சிவனடியாருக்கு விருந்து படைத்தவர் யார்? இக்காட்சி இடம் பெறும் நூல் எது?
அ) சாக்கியநாயனார், பெரிய புராணம்
ஆ) இளையான்குடி மாறநாயனார், பெரிய புராணம்
இ) காரைக்கால் அம்மையார், அற்புத திருவந்தாதி
ஈ) சுந்தரர், திருத்தொண்டத்தொகை
Answer:
ஆ) இளையான்குடி மாறநாயனார், பெரியபுராணம்

12. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் கொடுத்தவையாகச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுபவை எவை?
அ) குழல் மீன் கறியும் பிறவும்
ஆ) ஆரல் மீன் கறியும் உப்பும்
இ) உப்பும் முத்தும் ஈ) மீன் கறியும் நண்டும்
Answer:
அ) குழல் மீன் கறியும் பிறவும்
 
13. “இலையை மடிப்பதற்கு முந்தைய
வினாடிக்கு முன்பாக
மறுக்க மறுக்க
பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில்
நீண்டு கொண்டிருந்தது
பிரியங்களின் நீள் சரடு” – என்னும் கவிதைக்கு உரியவர் யார்?
அ) அம்சப்பிரியா
ஆ) பா.விஜய்
இ) சிநேகன்
ஈ) நா. முத்துக்குமார்
Answer:
அ) அம்சப்பிரியா

14. “பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீ ரோ”- என்று குறிப்பிடும் நூல் எது?
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) பதிற்றுப்பத்து
ஈ) பரிபாடல்
Answer:
ஆ) குறுந்தொகை
 
15. “மருந்தே ஆயினும் விருந்தோடு உண்” என்று பாடியவர் யார்? நூல் எது?
அ) ஔவையார், ஆத்திச்சூடி
ஆ) ஔவையார், கொன்றைவேந்தன்
இ) குமரகுருபரர், நீதிநெறி விளக்கம்
ஈ) வள்ளலார், ஜீவகாருண்ய ஒழுக்கம்
Answer:
ஆ) ஔவையார், கொன்றைவேந்தன்

16. அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா
அ) வாழையிலை விருந்து விழா
ஆ) இறைச்சி உணவு விருந்து விழா
இ) வேட்டி சேலை உடுத்தும் விழா
ஈ) நவதானிய விழா
Answer:
அ) வாழையிலை விருந்து விழா

17. திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம்பெறும் இயல்
அ) இல்லறவியல்
ஆ) பாயிரவியல்
இ) அரசியல்
ஈ) துறவறவியல்
Answer:
அ) இல்லறவியல்
 
18. விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை உணர்த்தியவர்.
அ) திருவள்ளுவர்
ஆ) தொல்காப்பியர்
இ) இளங்கோவடிகள்
ஈ) செயங்கொண்டார்
Answer:
இ) இளங்கோவடிகள்

19. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளவர்
அ) கம்பர்
ஆ) தொல்காப்பியர்
இ) இளங்கோவடிகள்
ஈ) செயங்கொண்டார்
Answer:
அ) கம்பர்

20. இளையான்குடி மாறநாயனாரின் விருந்தளிக்கும் திறன் பற்றிக் குறிப்பிடும் நூல்?
அ) பெரிய புராணம்
ஆ) நற்றிணை
இ) பொருநராற்றுப் படை
ஈ) கம்பராமாயணம்
Answer:
அ) பெரிய புராணம்
 
21. பொருத்துக.
1. விருந்தே புதுமை – அ) திருவள்ளுவர்
2. மோப்பக் குழையும் அனிச்சம் – ஆ)தொல்காப்பியர்
3. மருந்தே ஆயினும் விருந்தொடு உண் – இ) இளங்கோவடிகள்
4. விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை – ஈ) ஔவையார்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

22. விருந்தோம்பல் பற்றிய 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் காணப்படுமிடம்
அ) சிதம்பரம்
ஆ) மதுரை
இ) மாமல்லபுரம்
ஈ) திருச்சி
Answer:
அ) சிதம்பரம்

23. விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே படைத்த புலவர்
அ) ஒளவையார்
ஆ) திருவள்ளுவர்
இ) கபிலர்
ஈ) கம்பர்
Answer:
ஆ) திருவள்ளுவர்
 
24. “காலின் ஏழடிப் பின் சென்று” – என்னும் பொருநராற்றுப்படை உணர்த்தும் செய்தி
அ) விருந்தினரின் காலைத் தொட்டு வணங்கினர்
ஆ) விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்.
இ) எழுவர் விருந்தினரின் பின் சென்று வழியனுப்பினர்.
ஈ) ஏழுநாள்கள் விருந்தளித்துப் பின் விருந்தினரை வழியனுப்புவர்.
Answer:
ஆ) விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்.

25. “வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும்” – எனப் பாடியவர்
அ) ஔவையார்
ஆ) தொல்காப்பியர்
இ) கம்பர்
ஈ) திருவள்ளுவர்
Answer:
அ) ஒளவையார்
காசிக்காண்டம்
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக


கூடுதல் 1 மதிப்பெண் வினா விடைகள்

1. பகிர்ந்துண்ணல் அன்னையின் அன்பில் தொடங்குகிறது

2. தமிழர் மரபில் விருந்தாவது, உணவோடு உணர்வைக் குழைத்துச் செய்த சமையல்

3. விருந்தே புதுமை என்று கூறியவர் தொல்காப்பியர்

4. திருவள்ளுவர் விருந்தோம்பலை வலியுறுத்திய இயல் இல்லறவியல்

5. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர்

6. தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை தனித்து உண்ணாமை

7. இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத் தமியர் உண்டலும்

பாய்ந்த இளம்பெருவழுதி கூறிய நூல் புறநானூறு

8. பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்று விருந்தோம்பல்

9. அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்" என்று கூறும் நூல் நற்றிணை

காசிக்காண்டம்
1. காசிக்காண்டம் என்பது…………………..
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறு பெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
Answer:
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
பலவுள் தெரிக

2. காசிக்காண்டத்தை இயற்றியவர் யார்? அ) துளசிதாசர்
ஆ) அதிவீரராம பாண்டியர்
இ) ஔவையார்
ஈ) பெருஞ்சித்திரனார்
Answer:
ஆ) அதிவீரராம பாண்டியர்

 3. காசிக்காண்டத்தின் இல்லொழுக்கம் பற்றிய பகுதி எத்தனையாவது பாடல்?
அ) பதினான்காவது
ஆ) பதினாறாவது
இ) பதின்மூன்றாவது
ஈ) பதினேழாவது
Answer:
ஈ) பதினேழாவது

4. முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர்?
அ) அதிவீரராம பாண்டியர்
ஆ) கிள்ளிவளவன்
இ) செங்குட்டுவன்
ஈ) இரண்டாம் புலிகேசி
Answer:
அ) அதிவீரராம பாண்டியர்

5. அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர்
அ) சீவலபேரி பாண்டி
ஆ) சீவலமாறன்
இ) மாறவர்மன்
ஈ) மாறன்வழுதி
Answer:
ஆ) சீவலமாறன்

6. அதிவீரராம பாண்டியர் இயற்றாத நூலைக் கண்டறிக.
அ) நைடதம்
ஆ) வாயு சம்கிதை
இ) திருக்கருவை அந்தாதி
ஈ) சடகோபர் அந்தாதி
Answer:
ஈ) சடகோபர் அந்தாதி

7. பொருத்திக் காட்டுக.
i) நன்மொழி – 1. பெயரெச்சம்
ii) வியத்தல் – 2. வியங்கோள் வினைமுற்று
iii) வருக – 3. தொழிற்பெயர்
iv) உரைத்த – 4. பண்புத்தொகை
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1

8. உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் – என்று குறிப்பிடும் நூல் எது?
அ) சீவக சிந்தாமணி
ஆ) விவேக சிந்தாமணி
இ) மணிமேகலை
ஈ) நளவெண்பா
Answer:
ஆ) விவேக சிந்தாமணி

9. ‘அருகுற’ என்பதன் பொருள் என்ன?
அ) அருகில்
ஆ) தொலைவில்
இ) அழிவில்
ஈ) அழுகிய
Answer:
அ) அருகில்

10. முகமன் எனப்படுவது ……………………
அ) ஒருவரை நலம் வினவிக்கூறும் விருந்தோம்பல் சொற்கள்
ஆ) ஒருவரை எதிர்த்துப் பேசும் சொற்கள்
இ) பெரியோர்களின் கருத்துகளை வரவேற்கும் சொற்கள்
ஈ) மன்னரும் அமைச்சரும் உரையாடும் சொற்கள்
Answer:
அ) ஒருவரை நலம் வினவிக்கூறும் விருந்தோம்பல் சொற்கள்

11. விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள் எத்தனை?
அ) எட்டு
ஆ) ஒன்பது
இ) ஆறு
ஈ) பத்து
Answer:
ஆ) ஒன்பது

12. வெற்றிவேற்கை என்னும் நூலின் ஆசிரியர் ……………………
அ) அதிவீரராம பாண்டியர்
ஆ) கரிகாலன்
இ) பாரி
ஈ) பாண்டியன் நெடுஞ்செழியன்
Answer:
அ) அதிவீரராம பாண்டியர்

13. நறுந்தொகை என்னும் நூலின் ஆசிரியர் ……………………
அ) அதிவீரராம பாண்டியர்
ஆ) கரிகாலன்
இ) பாரி
ஈ) பாண்டியன் நெடுஞ்செழியன்
Answer:
அ) அதிவீரராம பாண்டியர்

14. நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?
அ) கொன்றைவேந்தன்
ஆ) காசிக்கலம்பகம்
இ) வெற்றிவேற்கை
ஈ) காசிக்காண்டம்
Answer:
இ) வெற்றிவேற்கை

15. பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) நைடதம்
ஆ) விவேகசிந்தாமணி
இ) வெற்றிவேற்கை
ஈ) காசிக்காண்டம்
Answer:
ஆ) விவேகசிந்தாமணி

மலைபடுகடாம்

பலவுள் தெரிக

1. “சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது
அ) புத்தூர்
ஆ) மூதூர்
இ) பேரூர்
ஈ) சிற்றூர்
Answer:
ஈ) சிற்றூர்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) அசைஇ – 1. சுற்றம்
ii) அல்கி – 2. கன்றின் நெருப்பு
iii) கன்று எரி – 3. இளைப்பாறி
iv) கடும்பு – 4. தங்கி
அ) 3, 4, 2, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 1, 2, 3, 4,
ஈ) 1, 4, 3, 2
Answer:
அ) 3, 4, 2, 1
 
2. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) ஆரி – 1. பள்ள ம்
ii) நரலும் – 2. கூத்தர்
ii) படுகர் – 3. அருமை
iv) வயிரியம் – 4. ஒலிக்கும்
அ) 2, 1, 4, 3
ஆ) 3, 4, 1, 2
இ) 3, 1, 4, 2
ஈ) 2, 4, 1, 3
Answer:
ஆ) 3, 4, 1, 2


3. பொருந்தாத பொருளுக்கான இணை எது?
அ) வேவை – வெந்தது
ஆ) இறடி – தினை
இ) பொம்மல் – சோறு
ஈ) நரலும் – சுற்றம்
Answer:
ஈ) நரலும் – சுற்றம்
 
4. மலைபடுகடாம் எந்த நூல்களுள் ஒன்று?
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) நீதி
ஈ) பதினெண்கீழ்க்கணக்கு
Answer:
ஆ) பத்துப்பாட்டு

5. மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்ட நூல்?
அ) 483
ஆ) 543
இ) 583
ஈ) 643
Answer:
இ) 583

6. மலைபடுகடாமின் வேறு பெயர் என்ன?
அ) சிறுபாணாற்றுப்படை
ஆ) பெரும்பாணாற்றுப்படை
இ) விறலியாற்றுப்படை
ஈ) கூத்தராற்றுப்படை
Answer:
ஈ) கூத்தராற்றுப்படை
 
7. மலைபடுகடாம் என்னும் நூலில் மலைக்கு உவமையாகக் கூறப்படுவது
அ) யானை
ஆ) மேகம்
இ) மான்
ஈ) வானம்
Answer:
அ) யானை

8. இரணிய முட்டத்துப் பெருங்குன்றூரைச் சார்ந்த புலவர்
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) பெருங்கௌசிகனார்
இ) மருதனார்
ஈ) நக்கீரர்
Answer:
ஆ) பெருங்கௌசிகனார்

9. ‘மலைந்து’ – என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை
அ) மலைந்து+உ
ஆ) மலைந்+த்+உ
இ) மலை +த்(ந்)+த்+உ
ஈ) மலை +த்+த்+உ
Answer:
இ) மலை +த்(ந்)+த்+உ

10. ‘பொழிந்த’ – என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை
அ) பொழிந்து+அ)
ஆ) பொழி+த்+த்+உ
இ) பொழி+த்+ந்+த்+அ
ஈ) பொழி+த்(ந்)+த்+அ
Answer:
ஈ) பொழி+த்(ந்)+த்+அ
 
11. பொருந்தாததைக் கண்டறிக.
அ) திருமுருகாற்றுப்படை – நக்கீரர்
ஆ) சிறுபாணாற்றுப்படை – நல்லூர் நத்தத்தனார்
இ) பொருநராற்றுப்படை – முடத்தாமக்கண்ணியார்
ஈ) மலைபடுகடாம் – கடியலூர் உருத்திரங்கண்ணனார்
Answer:
ஈ) மலைபடுகடாம் – கடியலூர் உருத்திரங்கண்ண னார்

12. அன்று அவண் அசைஇ – என்பதில் ‘அசைஇ’ என்பதன் பொருள்
அ) அசைவாடிய
ஆ) இளைப்பாறி
இ) அமைதியாகி
ஈ) இன்பமாகி
Answer:
ஆ) இளைப்பாறி
 
13. கன்று எரி – என்பதில் ‘எரி’ எனக் குறிப்பிடப்படுவது
அ) நெருப்பு
ஆ) கொம்பு
இ) வால்
ஈ) நீர்
Answer:
அ) நெருப்பு

14. அசோக மரங்கள் எவ்வண்ணப் பூக்களைக் கொண்டது?
அ) கரும்
ஆ) சிவந்த
இ) வெண்மையான
ஈ) நீலநிற
Answer:
ஆ) சிவந்த

15. அல்கி என்பதன் பொருள்
அ) அழிந்து
ஆ) தங்கி
இ) உள்ளே
ஈ) வெளியே
Answer:
ஆ) தங்கி
 
16. பொருத்துக.
1. இறடி – அ) தங்கி
2. அல்கி – ஆ) பள்ளம்
3. படுகர் – இ) வெந்து
4. வேவை – ஈ) தினை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ)

17. கூத்தராற்றுப்படை என்றழைக்கப்படும் நூல்
அ) திருமுருகாற்றுப்படை
ஆ) மலைபடுகடாம்
இ) பொருநராற்றுப்படை
ஈ) சிறுபாணாற்றுப்படை
Answer:
ஆ) மலைபடுகடாம்
 
18.நன்னன் எந்நில மன்னன்?
அ) பெருநில
ஆ) குறுநில
இ) சிறுநில
ஈ) மா
Answer:
ஆ) குறுநில

19. மலைபடுகடாமின் (கூத்தராற்றுப்படை) பாட்டுடைத் தலைவர்
அ) நன்ன ன்
ஆ) பாரி
இ) கபிலர்
ஈ) பெருங்கௌசிகனார்
Answer:
அ) நன்னன்

கோபல்லபுரத்து மக்கள்


கூடுதல் வினாக்கள்

1. கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதை ……………………
அ) கோபல்லபுரம்
ஆ) கோபல்லபுரத்துக் கோகிலா
இ) கோபல்லபுரத்து மக்கள்
ஈ) கோபல்ல சுப்பையா
Answer:
இ) கோபல்லபுரத்து மக்கள்

2. கோபல்லபுரத்து மக்கள் என்னும் கதையின் ஆசிரியர்……………………
அ) கி. ராஜநாராயணன்
ஆ) இந்திரா பார்த்தசாரதி
இ) ஜெயமோகன்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
அ) கி. ராஜநாராயணன்

3. உறையூர் உள்ள மாவட்டம் ……………………
அ) திருச்சி
ஆ) தஞ்சாவூர்
இ) கரூர்
ஈ) பெரம்பலூர்
Answer:
அ) திருச்சி

4. கறங்கு இசை விழாவின் உறந்தை என்று குறிப்பிடும் நூல் ……………………
அ) புறநானூறு
ஆ) அகநானூறு
இ) கலித்தொகை
ஈ) நளவெண்பா
Answer:
ஆ) அகநானூறு

5. கி. ராஜநாராயணின் சொந்த ஊர் ……………………
அ) கோபல்லபுரம்
ஆ) இடைசெவல்
இ) திருச்சி
ஈ) நாமக்கல்
Answer:
ஆ) இடைசெவல்

6. இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையும் புகுத்தி எழுதப்பட்டுள்ள நூல் கால்……………………
அ) கோபல்லபுரத்து மக்கள்
ஆ) பால்மரக்காட்டினிலே
இ) சட்டை
ஈ) சித்தன் போக்கு
Answer:
அ) கோபல்லபுரத்து மக்கள்

7. எப்போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது கோபல்லபுரத்து மக்கள் என்னும் நூல்?
அ) விடுதலைப்
ஆ) விவசாயிகளின்
இ) நெசவாளர்களின்
ஈ) தொழிலாளர்களின்
Answer:
அ) விடுதலைப்

8. கோபல்லபுரத்து மக்கள் என்னும் நூல் சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்ற ஆண்டு ……………………
அ) 1988
ஆ) 1991
இ) 1994
ஈ) 1996
Answer:
ஆ) 1991

9. எழுத்துலகில் கி.ரா. என்றழைக்கப்படுபவர்……………………
அ) கி. ராஜமாணிக்கம்
ஆ) கி. ராஜநாராயணன்
இ) கி. ராசரத்தினம்
ஈ) கி. ராசதுரை
Answer:
ஆ) கி. ராஜநாராயணன்

10. கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியவர்……………………
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) கி. ராஜநாராயணன்
இ) முத்துலிங்கம் ஈ) அகிலன்
Answer:
ஆ) கி. ராஜநாராயணன்

11. வட்டார மரபு வாய்மொழிப் புனைக் கதைகள் எவ்விலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன?
அ) நாஞ்சில்
ஆ) கொங்கு
இ) கரிசல்
ஈ) நெய்தல்
Answer:
இ) கரிசல்

12. வட்டார மரபு வாய்மொழிப் புனைக் கதைகளைத் தொடங்கியவர் ……………………
அ) அகிலன்
ஆ) இந்திரா பார்த்தசாரதி
இ) நாஞ்சில்நாடன்
ஈ) கி.ராஜநாராயணன்
Answer:
ஈ) கி.ராஜநாராயணன்

13. கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம்……………………
அ) கரிசல் இலக்கியம்
ஆ) நாஞ்சில் இலக்கியம்
இ) புதுக்கவிதை
Answer:
அ) கரிசல் இலக்கியம்

14. கி. ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கிய கரிசல் மண்ணின் படைப்பாளி ……………………
அ) கு. அழகிரிசாமி
ஆ) பூமணி
இ) பா. செயப்பிரகாசம்
ஈ) சோ. தர்மன்
Answer:
அ) கு. அழகிரிசாமி

15.கரிசல் இலக்கியப் பரம்பரைக்குத் தொடர்பில்லாதவரைக் கண்டறி.
அ) பூமணி
ஆ) வீரவேலுசாமி
இ) வேலராம மூர்த்தி
ஈ) ந. பிச்சமூர்த்தி
Answer:
ஈ) ந. பிச்சமூர்த்தி

16. வட்டார வழக்குச் சொற்களைப் பொருத்திக் காட்டுக.
i) பாச்சல் – 1. சோற்றுக்கஞ்சி
ii) பதனம் – 2. மேல்கஞ்சி
iii) நீத்துப்பாகம் – 3. கவனமாக
iv) மகுளி – 4. பாத்தி
அ) 4, 3, 2,1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 3, 1, 4, 2
Answer:
அ) 4, 3, 2, 1

17. வட்டார வழக்குச் சொற்களைப் பொருத்திக் காட்டுக.
i) வரத்துக்காரன் – 1. புதியவன்
ii) சடைத்து புளித்து – 2. சலிப்பு
iii) அலுக்கம் – 3. அழுத்தம்
iv) தொலவட்டையில் – 4. தொலைவில்
அ) 4, 3, 2, 1
ஆ) 1, 2, 3, 4
இ) 2, 1, 4, 3
ஈ) 4, 2, 1, 3
Answer:
ஆ) 1, 2, 3, 4

18. காய்ந்தும் கெடுக்கிற பெய்தும் கெடுக்கிற மழையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் ……………………
அ) கரிசல் இலக்கியங்கள்
ஆ) நெய்தல் இலக்கியங்கள்
இ) கொங்கு இலக்கியங்கள்
ஈ) புதினங்கள்
Answer:
அ) கரிசல் இலக்கியங்கள்

தொகாநிலைத் தொடர்கள்

கூடுதல் வினாக்கள்

1. கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.
அ) காவிரி பாய்ந்தது – எழுவாய்த் தொடர்
ஆ) பாடினாள் கண்ணகி – வினைமுற்றுத் தொடர்
இ) நண்பா எழுது – விளித்தொடர்
ஈ) பாடி மகிழ்ந்த னர் – பெயரெச்சத்தொடர்
Answer:
ஈ) பாடி மகிழ்ந்தனர் – பெயரெச்சத்தொடர்

2. சரியான வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுது.
i) பாடத்தைப் படித்தாள் – 1. இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
ii) இசையால் ஈர்த்தார் – 2. மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
iii) கயல்விழிக்குப் பரிசு – 3. ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
iv) முருகனின் சட்டை – 4. நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
அ) 1, 2, 3, 4
ஆ) 2, 1, 4, 3
இ) 1, 2, 4, 3
ஈ) 4, 3, 2, 1
Answer:
இ) 1, 2, 4, 3

3. ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது……………………………
அ) தொகை நிலைத்தொடர்
ஆ) தொகாநிலைத்தொடர்
இ) மரபுத்தொடர்
ஈ) உவமைத்தொடர்
Answer:
ஆ) தொகாநிலைத்தொடர்
 
4. தொகாநிலைத் தொடரின் வகைகள்……………………………
அ) 6
ஆ) 7
இ) 8
ஈ) 9
Answer:
ஈ) 9

5. விளியுடன் எது தொடர்வது விளித்தொடர் ஆகும்?
அ) பெயர்
ஆ) வினா
இ) வினை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) வினை

6. வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது……………………………
அ) எழுவாய்த்தொடர்
ஆ) விளித்தொடர்
இ) வினையெச்சத்தொடர்
ஈ) வினைமுற்றுத்தொடர்
Answer:
ஈ) வினைமுற்றுத்தொடர்

7. முற்றுப் பெறாத……………………………பெயர்ச்சொல்லைத் தொடர்வது பெயரெச்சத்தொடர் எனப்படும்.
அ) வினா
ஆ) எழுவாய்
இ) வினை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) வினை
 
8. ……………………………உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.
அ) உவம்
ஆ) வேற்றுமை
இ) பண்பு
ஈ) வினை
Answer:
ஆ) வேற்றுமை

9. பொருத்திக் காட்டுக.
i) கட்டுரையைப் படித்தாள் – 1. உரிச்சொல் தொடர்
ii) அன்பால் கட்டினார் – 2. நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
iii) அறிஞருக்குப் பொன்னாடை – 3. மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
iv) சாலச் சிறந்தது – 4. இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 2, 3, 1, 4
ஈ) 4, 2, 3, 1
Answer:
அ) 4, 3, 2, 1

10. பொருத்திக் காட்டுக.
i) காவிரி பாய்ந்தது – 1. வினையெச்சத்தொடர்
ii) நண்பா எழுது – 2. பெயரெச்சத்தொடர்
iii) கேட்ட பாடல் – 3. எழுவாய்த்தொடர்
iv) பாடி மகிழ்ந்த னர் – 4. விளித்தொடர்
அ) 3, 4, 2, 1
ஆ) 2, 1, 4, 3
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 2, 1, 4
Answer:
அ) 3, 4, 2, 1
 
11. இடைச்சொல் தொடரில் இடைச்சொல்லுடன் தொடர்வது……………………………
அ) பெயர், வினை
ஆ) வினா, விடை
இ) பெயர், வினா
ஈ) வினை, வினா
Answer:
அ) பெயர், வினை

12. மற்றொன்று என்பது……………………………
அ) வினையெச்சத்தொடர்
ஆ) வினைமுற்றுத்தொடர்
இ) இடைச்சொல் தொடர்
ஈ) உரிச்சொல் தொடர்
Answer:
இ) இடைச்சொல் தொடர்

13. ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது……………………………
அ) இரட்டைக்கிளவி
ஆ) அடுக்குத்தொடர்
இ) இரட்டுறமொழிதல்
ஈ) உரிச்சொல் தொடர்
Answer:
ஆ) அடுக்குத்தொடர்]

14. கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி ஆகியன……………………………
அ) பெயரெச்சங்கள்
ஆ) கூட்டுநிலைப் பெயரெச்சங்கள்
இ) கூட்டுநிலை வினையெச்சங்கள்
ஈ) வினையெச்சங்கள்
Answer:
ஆ) கூட்டுநிலைப் பெயரெச்சங்கள்
 
15. அன்பால் கட்டினார், அறிஞருக்குப் பொன்னாடை ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது
அ) வேற்றுமை உருபு
ஆ) எழுவாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்
Answer:
அ) வேற்றுமை உருபு

பலவுள் தெரிக

1. கீழக்காண்பனவற்றுள் பொருந்தாத இணை எது?
அ) உயிரினும் மேலானது – ஒழுக்கம்
ஆ) ஒழுக்கமுடையவர் – மேன்மை அடைவர்
இ) உண்மைப் பொருளைக் காண்பது – அறிவு
ஈ) உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் – அறிவுடையவர்
Answer:
ஈ) உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் – அறிவுடையவர்
 
2. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
அ) அழிக்க வேண்டியவை – ஆசை, சினம், அறியாமை
ஆ) பெரியோரை துணையாக்கிக் கொள்ளுதல் – பெறும்பேறு
இ) நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர் – பிறர் நன்மையைக் கருதுபவர்
ஈ) ஆராயாத மன்னன் – நாட்டின் வளத்தைப் பெருக்குவான்
Answer:
ஈ) ஆராயாத மன்னன் – நாட்டின் வளத்தைப் பெருக்குவான்

3. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று – இக்குறளில் பயின்று வரும் அணி எது?
அ) உவமையணி
ஆ) எடுத்துக்காட்டு உவமையணி
இ) ஏகதேச உருவக அணி
ஈ) உருவக அணி
Answer:
அ) உவமையணி

4. பொருத்துக.
1. மேன்மை – அ) சினம்
2. வெகுளி – ஆ) உயர்வு
3. மயக்கம் – இ) வறுமை
4. இன்மை – ஈ) அறியாமை
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
 
5. உயிரினும் மேலானதாகக் கருதிப் பாதுகாக்க வேண்டியது……………………………….
அ) ஒழுக்கம்
ஆ) மெய் உணர்தல்
இ) கண்ணோட்டம்
ஈ) கல்வி
Answer:
அ) ஒழுக்கம்

6. “ஒழுக்கம் விழுப்பம் தரலான்” என்பதில் அமைந்துள்ள நயம்……………………………….
அ) மோனை
ஆ) எதுகை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
ஆ) எதுகை

7. “பெரியாரைப் பேணித் தமராக் கொளல்” இதில் “தமர்” என்பதன் பொருள்……………………………….
அ) நூல்
ஆ) துணை
இ) பேறு
ஈ) அரிய
Answer:
ஆ) துணை
 
8 “முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்” இதில் “இன்மை’ என்பதன் பொருள்……………………………….
அ) வறுமை
ஆ) இல்லை
இ) முயற்சி
ஈ) செல்வம்
Answer:
அ) வறுமை

9.  பொருத்துக. 
1. ஒழுக்கமுடைமை – அ) 36 வது அதிகாரம்
2. மெய்உணர்தல் – ஆ)14 வது அதிகாரம்
3. பெரியாரைத் துணைக்கோடல் – இ) 56வது அதிகாரம்
4. கொடுங்கோன்மை – ஈ) 45 வது அதிகாரம்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4. ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Post a Comment

0 Comments