10th Tamil 2 Mark Question and Answers பத்தாம் வகுப்பு இரண்டு மதிப்பெண் குறுவினாக்கள்10 TH STD 2 MARK QUESTIONS & ANSWERS | 5 Minute Maths
10th Tamil Unit 1 Book back and Interior குறுவினா & சிறுவினா NEW
இயல் - 1
1. ' வேங்கை ' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக .
தனிமொழி : 'வேங்கை' என்னும் சொல் தனித்து நின்று ' வேங்கை மரம்' என்னும் பொருளைக் குறிக்கும் .
தொடர்மொழி : 'வேங்கை' - இரு சொல்லாக பிரிந்து நின்று வேம் + கை - வேகின்ற கை எனவும் பொருள் தரும் .
பொதுமொழி : இவ்வாறு மரம் , வேகின்ற கை என இரு பொருள்களுக்கும் பொதுவாய் அமைவதால் பொது மொழியாக இருக்கிறது .
2. ' மன்னும் சிலம்பே ! மணிமேகலை வடிவே !
3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன .
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன .
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன .- மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி , எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக .
4.'" உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ் " - இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி , அதன் இலக்கணம் தருக .
உடுப்பதூஉம் , உண்பதூஉம் - இன்னிசை அளபெடை
இலக்கணம் : செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும் . இக்குறளில் உண்பதும் - உடுப்பதும் - இனிய இசைக்காக , அளபெடை கூட்டப்பட்டிருக்கிறது .
5. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக .
காலை நேரம் தொடர்வண்டியில் வநது இறங்கினார் தமிழறிஞர் கி.வா.ஜகநாதன் . அவரை மாலையிட்டு வரவேற்றனர் .அப்போது கி.வா.ஜ "அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!"என்றார் .எல்லோரும் அந்தச் சொல்லின் சிலேடை நயத்தை மிகவும் சுவைத்தனர் .
10th Tamil Unit 1 Book back and Interior குறுவினா & சிறுவினா NEW
இயல் - 2
காற்றுக்கு வரம் மரம் - மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் '-
இதுபோன்ற உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக.
7. வசன கவிதை - குறிப்பு வரைக .
8. தண்ணீர் குடி , தயிர்க்குடம் ஆகிய தொகைச்சொற்களை விரித்து எழுதுக; தொடரில் அமைக்க .
9. பெற்றோர் வேலையிலிருந்து திரும்ப தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக .
வேலைக்குச் சென்ற தாயும் தந்தையும் திரும்பி வருவதற்கு காலதாமதம் ஆகும் நாட்களில் , அழும் தம்பியிடம் அன்பாகப் பேசுவேன் . அவனுடன் விளையாடுவேன் . அம்மாவும் அப்பாவும் நமக்காக வேலைக்குச் சென்று உழைப்பதை எடுத்துக் கூறுவேன் . உனக்கு பிடித்த சாக்லேட் , பழங்கள் வாங்கி வருவார்கள் என்று ஆறுதல் கூறுவேன் .
10 .மாஅல் - பொருளும் இலக்கணக்குறிப்பு தருக .
பொருள் : திருமால் - மண்ணுக்கும் விண்ணுக்கும் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்கும் திருமால் .
இலக்கணக்குறிப்பு : இசைநிறை அளபெடை அல்லது செய்யுளிசை அளபெடை .
10th Tamil Unit 1 Book back and Interior குறுவினா & சிறுவினா NEW
இயல் - 3
11. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக .
12 . தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் ஒற்றி எடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி என்பது இலக்கிய செய்தி . விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா ? உங்கள் கருத்தை குறிப்பிடுக .
- இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியம் இல்லை . எனவே, அன்று விரித்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து அரிசியாக்கி , பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரியபுராணத்தில் காட்டப்படுகிறது .
- எனவே விருந்தினருக்கு விருந்து படைக்கச் செல்வம் தேவையில்லை . நல்ல மனம் இருந்தால் , நம்மிடம் உள்ளதைக் கொண்டு சிறந்த முறையில் விருந்து அளிக்க முடியும் என்பதாகும் .
13 . ' எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக ' எழுது எழுது என்றாள் ' என அடுக்குத்தொடரானது . ' சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும் ?
' சிரித்துச் சிரித்துப் பேசினார் 'என்பது மகிழ்ச்சி காரணமாக அடுக்குத்தொடரானது .
14 . ' இறடிப் பொம்மல் பெறுகுவிர் ' - இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக .
இறடி - தினை ; பொம்மல் - சோறு
இறடிப் பொம்மல் பெறுகுவிர் - தினைச் சோற்றைப் பெறுவீர்கள் எனப் பொருள்படும் .
15 . பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார் . அவர் யார் ? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை ?
- எழுவாய் உடன் பெயர் , வினை , வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும் .
- பாரதியார் கவிஞர் - பெயர்
- நூலகம் சென்றார் - வினை
- அவர் யார் ? - வினா
- மேற்கண்ட முன்று தொடர்களில் எழுவாயுடன் பெயர் , வினை , வினா ஆகியவற்றிற்கான பயனிலைகள் தொடர்ந்து வந்து எழுவாய் தொடர்கள் அமைந்துள்ளன .
திருக்குறள் - குறுவினாக்கள்
16. ' நச்சப் படாதவன் ' செல்வம் - இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக .
- இத்தொடர்.. கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் 'செல்வேன்'எனக் கூறுதல் வேண்டு்ம்.ஆனால் 'செல்கிறேன்'என க் கூறியுள்ளது காலவழுவமைதியாக அமைகிறது .
- செல்கிறேன் - நிகழ்காலம் ,செல்வேன் - எதிர்காலம் .
- எனவே இலக்கணப்படி பிழையாகக் கருதுவதில்லை. ஏனெனில் செல்வதன் உறுதி்த்தன்மையை நோக்கி காலவழுவமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- நோய் நீங்க " மருந்து பாதி மருத்துவம் பாதி " என்பர் .
- மருத்துவத்தில் மருந்தால் மட்டுமே நோய் நீங்காது .மருத்துவர் பேசும் வார்த்தைகளே நோயாளிக்கு நம்பிக்கை அளிக்கும்
- நோயின் இயல்பறிந்து நம்பிக்கையோடு மருத்துவர் அளிக்கும் மருத்துவம் விரைவில் நோய் தீரும் .
40 . பாசவர் , வாசவர் , பல்நிண விலைஞர் , உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் வணிகர்கள் யாவர் ?
48 . காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது ?
- இக்குறளில் நிரல்நிறை அணி வந்துள்ளது .
- இக்குறளில் சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி , அதே வரிசைப்படி இணைத்துப் பொருள் கொள்ளுமாறு கூறியுள்ளதால் இது நிரல்நிறை அணி ஆகும் .
- இக்குறள் அன்பைப் பண்புக்கும் , அறத்தைப் பயனுக்கும் நிரல்நிறையாக அமைந்துள்ளது .
- உலகில் பணம் , பதவிகளால் தலைக்கனம் பிடித்தவர்கள் பலர் உண்டு .
- "தலைக்கனமே வாழ்வு " என சித்தாளுவின் வாழ்வைக் குறிப்பிடுகிறார் .
- அடுத்தவேளை உணவுக்காக அடுக்குமாடி கட்டிடம் எதுவாயினும் செங்கற்களை தலையில் சுமந்து செல்லும் சித்தாளுக்கு "தலைக்கணமே வாழ்வாகிப் போனது" என நாகூர் ரூமி குறிப்பிடுகிறார் .
0 Comments