10th Tamil Unit 4 Short Answers
செயற்க்கை நுண்ணறிவு
குறுவினா
1. வருங்காலத்தில் தேவை கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.
செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்
செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இயந்திர மனிதன் (Robo-ரோபோ)
செயற்கை நுண்ண றிவால் இயங்கும் திறன்பேசி (Smart Phone)
சிறுவினா
1. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.
இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்தவில்லை.
அது மனிதனுக்குரியத் தேவைகளை மட்டுமே மேம்படுத்தி இருக்கிறது.
அறிவியலால் இன்று மனிதன் மனிதனாக வாழவில்லை .
இயந்திரம் மனிதனாகிவிட்டது. மனிதன் இயந்திரம் ஆகிவிட்டான்.
மனிதநேயத்தையும் அன்பையும் இரக்கத்தையும் இன்றைய மனிதனிடம் பார்க்க முடியவில்லை.
பணிகளால் அவன் எந்திரத்தைப் போல ஓடிக்கொண்டே உள்ளான்.
2. மனிதர்களின் மூளையைப் போன்றது, செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனித குலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு ‘எதிர்காலத் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் எழுதுக.
எதிர்காலத் தொழில்நுட்பம்
உயிரினங்களில் மனிதரை உயர்த்திக்காட்டுவது அவர்களின் சிந்தனை ஆற்றலே! அந்தச் சிந்தனைக்குத் தொழில்நுட்பமும் துணை செய்கிறது. திறன்பேசிகளில் இயங்கும் உதவு மென்பொருள் கண்ணுக்குப் புலப்படாத மனிதனைப் போல நம்முடன் உரையாடி உதவி செய்கிறது.
நாம் சொல்கிறவர்களுக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுக்கும். நாம் திறக்க கட்டளையிடுகிற செயலியைத் திறக்கும். நாம் கேட்பதை உலாவியில் தேடும். நாம் விரும்பும் அழகான கவிதைகளை இணையத்தில் தேடித்தரும். எந்தக்கடையில் எது விற்கும் என்று சொல்லும். படிப்பதற்கு உரிய நூல்களைப் பட்டியலிடும். நாம் எடுத்த ஒளிப்படங்களைப் பற்றி பட்டியலிடும்.
எதிர்காலத்தில் நம் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரை விடவும் உதவு மென்பொருள் நம்மை நன்கு அறிந்திருக்கும்.
குறுவினா
1. மின்னணுப் புரட்சிக்கான காரணங்களைக் கூறுக.
1980களில் ஒவ்வொருவருக்குமான தனிநபர் கணினிகளின் வளர்ச்சி.
இணையப் பயன்பாட்டின் பிறப்பு. இவையே இன்றைய மின்னணுப் புரட்சிக்கான காரணங்களாகும்.
2. ‘வேர்டுஸ்மித்’ குறிப்பு வரைக.
இதழியலில் மொழிநடையை உருவாக்கும் மென்பொருளின் பெயர் வேர்டுஸ்மித்.
இதற்கு ‘எழுத்தாளி’ என்று பெயர்.
இதில் தகவல்களைக் கொடுத்தால் மட்டும் போதும்; சில நொடிகளிலேயே அழகான கட்டுரையை உருவாக்குகின்றன.
3. ‘வாட்சன்’ குறிப்பு வரைக.
2016ல் ஐ.பி.எம். நிறுவனத்தின் செயற்கை நுண்ண றிவுக் கணினி வாட்சன்.
சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.
4. செயற்கை நுண்ணறிவு நமக்கு எப்படி அறிமுகமாகிறது?
சமூக ஊடகங்கள்.
மின்னணுச் சந்தைகள்.
இவற்றின் மூலம் செயற்கை நுண்ணறிவு நமக்கு அறிமுகமாகிறது.
5. செயற்கை நுண்ணறிவு குறித்த தொழில்நுட்ப வரையறையைக் கூறுக.
செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு செயல்திட்ட வரைவு.
6. செயற்கை நுண்ணறிவின் பொதுவான பணி யாது?
மனிதனால் முடியும் செயல்களையும் அவன் கடினம் என்று கருதும் செயல்களையும் செய்யக்கூடியது செயற்கை நுண்ணறிவு.
7. சீனாவில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் இயந்திர மனிதனின் செயல்பாடுகளைக் கூறுக.
மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் குரலையும் முகத்தையும் அடையாளம் கண்டு அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கின்றன.
சீன மொழியின் வெவ்வேறு வட்டார வழக்குகளையும் கூட அவை புரிந்து கொண்டு பதில் அளிக்கின்றன.
8. ‘இலா’ என்னும் மென்பொருள் குறித்து எழுதுக.
பாரத ஸ்டேட் வங்கி இலா’ என்னும் உரையாடு மென்பொருளை உருவாக்கியுள்ளது.
ஒரு விநாடிக்குப் பத்தாயிரம் வாடிக்கையாளர்களுடன் உரையாடும்.
அவர்களுக்கான சேவையை இணையம் மூலம் அளிக்கிறது.
9. இலா (ELA) என்பதன் ஆங்கில விரிவாக்கத்தை எழுதுக.
ELA – Electronic Live Assistant
10. செயற்கை நுண்ணறிவின் சிறப்பு யாது?
செயற்கை நுண்ணறிவு பொதிந்த இயந்திரங்களுக்கு ஓய்வு தேவையில்லை.
செயற்கை நுண்ணறிவால் பார்க்கவும் கேட்கவும் புரிந்து கொள்ளவும் முடியும்.
சிறுவினா
1. ‘பெப்பர்’ குறிப்பு வரைக.
ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர்.
இது உலக அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ.
வீட்டுக்கு, வணிகத்துக்குப், படிப்புக்கு என மூன்று வகை ரோபோக்கள் உள்ளன.
இவை மனிதரின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகின்றன.
பெப்பரை வரவேற்பாளராகவும் பணியாளராகவும் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பயன்படுத்துகிறார்கள்.
2. செயற்கை நுண்ணறிவு குறித்த தொழில் நுட்ப வரையறையைக் கூறி விளக்குக.
வரையறை :
செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல்திட்ட வரைவு எனலாம்.
வடிவமைப்பு :
ஒலிப்படங்கள், எழுத்துகள், கானொலிகள், ஒலிகள் போன்றவற்றிலிருந்து கற்றுக் கொள்ளும் மென்பொருளை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைக்கின்றனர்.
முடிவெடுக்கும் திறன் :
இந்த மென்பொருள் அறிவைக் கொண்டு தனக்கு வரும் புதிய புதிய சூழ்நிலைகளில் மனிதரைப் போல தானே முடிவெடுக்கும் திறனுடையது.
சிறப்பு :
செயற்கை நுண்ணறிவு பொதிந்த இயந்திரங்களுக்கு ஓய்வு தேவையில்லை. செயற்கை நுண்ணறிவால் பார்க்கவும் கேட்கவும் புரிந்து கொள்ளவும் முடியும். மனிதனால் முடியும் செயல்களையும் அவன் கடினம் என்று கருதும் செயல்களையும் செய்யக்கூடியது செயற்கை நுண்ணறிவு.
3. மெய்நிகர் உதவியாளர் பற்றி விவரி.
உதவு மென்பொருள் :
திறன் பேசியில் இயங்கும் உதவு மென்பொருள் கண்ணுக்குப் புலப்படாத மனிதனைப் போல நம்முடன் உரையாடி சில உதவிகளைச் செய்கிறது.
செயல்பாடுகள் :
இம்மென்பொருள் நாம் சொல்லுகிறவர்களுக்குத் தொலைபேசி அழைப்பு விடுக்கும்.
நாம் திறக்கக் கட்டளையிடுகிற செயலியைத் திறக்கும்.
நாம் கேட்பதை உலாவியில் தேடும். நாம் விரும்பும் அழகான கவிதையை இணையத்தில் தேடித் தரும். எந்தக் கடையில் எது விற்கும் என்றும் சொல்லும்.
படிப்பதற்கு உரிய நூல்களைப் பட்டியலிடும்.
நாம் எடுத்த ஒளிப்படங்களைப் பற்றிக் கருத்துரைக்கும்.
எதிர்காலத்தில் :
எதிர்காலத்தில் நம் நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரை விடவும் இது போன்ற மெய்நிகர் உதவியாளர் நம்மை நன்கு அறிந்திருக்கும்.
4. ஒளிப்படக்கருவியில் செயற்கை நுண்ணறிவு குறித்து சுருக்கி வரைக.
சில உயர்வகைத் திறன் பேசியின் ஒளிப்படக்கருவி, செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கிறது.
கடவுச் சொல்லும் கைரேகையும் கொண்டு திறன்பேசியைத் திறப்பது பழமையானது.
உரிமையாளரின் முகத்தை அடையாளம் கண்டு திறப்பது இன்றைய தொழில்நுட்பம்.
படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு அதற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.
திறன் பேசியில் உள்ள ஒளிப்படக் கருவியில் எடுக்கும் படங்களை மெருகூட்ட இத்தொழில் நுட்பம் உதவுகிறது.
பயன்கள் :
காணொலிகளைத் தொகுக்கும் மென்பொருள்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் பயன்படுகிறது. நேரம் வீணாவது தவிர்க்கப்படுகிறது.
5. செயற்கை நுண்ணறிவின் பொதுவான கூறுகளை விளக்குக.
நம்மை அறியாமலேயே நம் வாழ்க்கையையும், வணிகத்தையும் வளப்படுத்துகிறது.
இத்தொழில் நுட்பத்தைக் கண்டு அச்சப்படுபவர்களின் அலறல்களை நாம் எதிர்கொள்வதே முதல் அறை கூவல்.
ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளும் அறிமுகமாகும் போது புதிய வடிவில் மாற்றம் பெறுகின்றன.
மனித இனத்தைத் தீங்குகளிலிருந்து காப்பாற்றி, உடல் நலத்தைப் பேணுகிறது.
கொடிய நோய்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்தல், மருத்துவரைப் போல பரிந்துரை செய்தல் போன்ற மேற்கண்ட செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
6. நீவிர் அறிந்த செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு மூன்றினை எழுதுக.
கண்காணிப்புக் கருவியில் பொதிந்திருக்கும் செயற்கை நுண்ணறிவு பலவிதங்களில் உதவியாக இருக்கின்றது.
வழிகாட்டி வரைபடமாகத் திறன் பேசியிலிருந்து செயற்கை நுண்ணறிவு
பயணம் செய்பவர்களுக்கு வழிகாட்டுகிறது.
செயற்கை நுண்ணறிவைக் கொண்ட இயந்திரம் மனிதர்களுடன் சதுரங்கம் முதலான விளையாட்டுகளை விளையாடுகிறது.
கண் அறுவை மருத்துவம் செய்கிறது.
சமைக்கிறது.
சில புள்ளிகளை வைத்துப் படம் வரைகிறது.
7. முக்காலக் கல்வியறிவு குறித்து எழுதுக.
முந்தைய கல்வியறிவு :
ஒரு காலத்தில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எழுதப் படிக்கத் தெரிந்த கல்வியறிவே போதுமானதாக இருந்தது. ஆனால் இன்று, கல்வியறிவுடன் மின்னணுக் கல்வியறிவையும் மின்னணுச் சந்தைப்படுத்துதலையும் அறிந்திருத்தல் வேண்டும். இது வாழ்க்கையை எளிதாக்கவும் வணிகத்தில் வெற்றியடையவும் உதவுகிறது.
எதிர்காலக் கல்வியறிவு :
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவும் நான்காவது தொழிற் புரட்சியின் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் அறிவுமே நம்மை வளப்படுத்தும்.
8. சீன நாட்டில் அமைந்துள்ள தமிழ்க் கல்வெட்டு குறித்து எழுதுக.
சூவன்சௌ துறைமுக நகர் :
சீன நாட்டில் காண்டன் நகருக்கு வடக்கே 500 கல் தொலைவில் உள்ளது. சூவன்சௌ துறைமுக நகர். தமிழ் வணிகர் :
சூவன்சௌ துறைமுக நகருக்குத் தமிழ் வணிகர் அடிக்கடி வந்து சென்றனர்.
சிவன் கோவில் :
தமிழர்களின் வரவு காரணமாக சீனாவில் சிவன் கோவில் கட்டும்படியாக அந்நாட்டு மன்னர் குப்லாய்கான் ஆணையிட்டார்.
இம்மன்னரது ஆணைப்படி இக்கோவில் கட்டப்பட்டது எனத் தமிழ்க் கல்வெட்டு ஒன்று இக்கோவிலில் உள்ளது.
இக்கோயிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெருமாள் திருமொழி
சிறுவினா
1. “மாளாத காதல் நோயாளன் போல்” என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
உடலில் ஏற்பட்ட புண் :
மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் துன்பம் தரும்படி கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அத்துன்பம் தனக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்பு காட்டுவார்.
நீங்காத துன்பம் :
வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! மருத்துவரைப் போன்று நீ எனக்குத் துன்பத்தைத் தந்தாலும், உன் அடியவனாகிய நான் (நோயாளியைப் போல) உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கிறேன்.
குறுவினா
1. பெருமாள் திருமொழி நூல் குறிப்பு வரைக.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது பெருமாள் திருமொழி ஆகும்.
இதில் 105 பாடல்கள் உள்ளன.
இயற்றியவர் : குலசேகராழ்வார்
2. குலசேகர ஆழ்வார் குறித்து குறிப்பு வரைக.
பெயர் – குலசேகர ஆழ்வார்
ஊர் – திருவஞ்சிக்களம் (கேரளம்)
நூல்கள் – பெருமாள் திருமொழி, முகுந்தமாலை.
புலமை – வடமொழி, தென்மொழி
காலம் – எட்டாம் நூற்றாண்டு
3. “நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே” என்று யார் யாரிடம் கூறினார்?
குலசேகர ஆழ்வார் திருவித்துவக் கோட்டம்மாவிடம் கூறினார்.
4. “வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்” – மாயம் செய்தவர் யார்?
மாயம் செய்தவர் : திருவித்துவக் கோட்டம்மா
5. “வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்”
– இவ்வடிகளில் சுட்டப்படும் ‘மருத்துவன்’ மற்றும் ‘நோயாளன்’ போன்றவர் யாவர்?
மருத்துவன் போன்றவர் : திருவித்துவக் கோட்டம்மா
நோயாளன் போன்றவர் : குலசேகர ஆழ்வார்
சிறுவினா
1. குலசேகரர் திருவித்துவக் கோட்டம்மா இறைவனிடம் வேண்டுவது யாது?
மருத்துவரை நேசித்தல் :
மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என உணர்ந்து நோயாளி மருத்துவரை நேசிப்பார்.
இறைவன் அருளை எதிர்பார்த்தல் :
இறைவா! நீ உன் விளையாட்டால் எனக்கு நீங்காத துன்பத்தைத் தந்தாலும் நோயாளியைப் போல உன் அருளை எதிர்பார்த்து வாழ்கிறேன்.
பரிபாடல்
குறுவினா
1. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு.
நெடுவினா
1. நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.
பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கி வரும் தமிழ் மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன.
சங்க இலக்கியமான பரிபாடலில்……. பூமியின் தோற்றம் குறித்து சொல்லப்பட்டுள்ளது.
எதுவுமே இல்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்குக் காரணமான கரு பேரொலியுடன் தோன்றியது.
உருவமில்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் என்னும் முதல் பூதங்கள் உருவாகின.
அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல காலங்கள் கடந்தது.
பின்னர் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.
மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தில் இப்பெரிய புவி மூழ்கி உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது.
இச்சூழல் மாற்றத்தினால் உயிர்கள் தோன்றி நிலை பெற்று வாழ்கின்றன.
புவி உருவாகிய நிகழ்வை அறிவியல் அறிஞர்கள் கண்டறியும் முன்பே நம் தமிழர் கண்டறிந்தனர் என்பது தமிழருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியும் பெருமைக்குரிய செயலுமாகும்.
இலக்கணக் குறிப்பு.
ஊழ்ஊழ் – அடுக்குத் தொடர்
வளர் வானம் – வினைத்தொகை
செந்தீ – பண்புத்தொகை
வாரா (ஒன்றன்) – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
தோன்றி, மூழ்கி – வினையெச்சங்கள்
கிளர்ந்த – பெயரெச்சம்
குறுவினா
1. சங்க இலக்கிய நூல்கள் மூலம் நீவீர் அறிந்து கொள்ளும் செய்தி யாது?
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை,
அறிவாற்றல்,
சமூக உறவு,
இயற்கையைப் புரிந்து கொள்ளும் திறன்.
2. பரிபாடல் நூல் குறிப்பு வரைக.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று பரிபாடல் – அகம் புறம் சார்ந்த நூல்.
இந்நூல் “ஓங்கு பரிபாடல்” என்னும் புகழுடையது.
சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல்.
உரையாசிரியர்கள் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
24 பாடல்களே கிடைத்துள்ளன.
3. அண்டப்பகுதி குறித்து மாணிக்கவாசகர் குறிப்பிடும் செய்தி யாது?
அண்டப்பகுதியின் உருண்டை வடிவம் ஒப்பற்ற வளமான காட்சியும் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்புடன் நூறுகோடிக்கும் மேல் விரிந்து நின்றன.
கதிரவனின் ஒளிக்கற்றையில் தெரியும் தூசுத்துகள் போல அவை நுண்மையாக இருக்கின்றன.
4. பால்வீதி குறித்து எட்வின் ஹப்பிள் நிரூபித்துக் கூறிய செய்தியை எழுது.
அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால் வீதிகள் உள்ளன.
வெளியே எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன.
வெளியே நின்று அதைப் பார்த்தோமெனில் சிறுதூசி போலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தூ சுகளாகத் தெரியும்.
5. பூமி வெள்ளத்தில் மூழ்கக் காரணம் என்ன?
தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.
6. “மீண்டும் பீடு உயர்பு ஈண்டி , அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்” – தொடர் பொருள் விளக்குக.
மீண்டும் மீண்டும் நிறைவெள்ளத்தில் மூழ்குதல் நடந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது, அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலை பெறும்படியான ஊழிக்காலம் வந்தது.
7. “விசும்பில் ஊழி ஊழ்” என்பதில் விசும்பு, ஊழி, ஊழ் ஆகிய சொற்களின் பொருள் யாது?
விசும்பு – வானம்
ஊழி – யுகம்
ஊழ் – முறை
சிறுவினா
1. அண்டப் பெருவெளி குறித்து மாணிக்கவாசகர் மற்றும் எட்வின் ஹப்பிள் ஆகியோர் மூலம் அறியப்படும் செய்தி யாது?
மாணிக்கவாசகர் கூற்று :
அண்டப் பகுதியின் உருண்டை வடிவம், ஒப்பற்ற வளமான காட்சியும் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்புடன் நூறு கோடிக்கும் மேல் விரிந்து நின்றன.
“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்” என்னும் திருவாசகப் பாடலில் மேற்கண்ட செய்தியை 1300 ஆண்டுகளுக்கு முன் மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார்.
எட்வின் ஹப்பிள் கூற்று :
அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன.
வெளியே நின்று அதைப் பார்த்தோமெனில் சிறு தூசி போலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தூசுகளாகத் தெரியும்.
மேற்கண்ட செய்தியை அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924 இல் நிரூபித்தார்.
2. “மீண்டும் பீடு உயர்பு ஈண்டி , அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம் :
இவ்வடிகள் பரிபாடலில் கீரந்தையார் பாடலில் இடம்பெறுகின்றது.
பொருள்:
உயிர்கள் தோன்றி நிலைபெறுதல்.
விளக்கம் :
மீண்டும் மீண்டும் நிறைவெள்ளத்தில் மூழ்குதல் நடந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது, அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியான
ஊழிக்காலம் வந்தது.
3. பால்வீதிகள் கண்டுபிடிப்பில், “எட்வின் ஹப்பிளுக்கு முன்னோடி மாணிக்கவாசகர்” என்பதை நிரூபிக்க.
எட்வின் ஹப்பிள்:
நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன. வெளியில் நின்று பார்த்தால் , சிறு தூசி போல கோடிக்கணக்கில் பால்வீதிகள் தூசுகளாகத் தெரியும். இதனை 1924 இல் அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் நிரூபித்தார்.
மாணிக்கவாசகர்:
1300 ஆண்டுகளுக்கு முன் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் திரு அண்டப்பகுதியில்,
“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
…………………. ………………….
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்”
– என்ற அடிகள் பால்வீதிகள் பற்றிய கருத்துகளைக் கூறுகின்றது. இல்லத்துள் நுழையும் கதிரவனின் ஒளிக் கற்றையில் தெரியும் தூசுத் துகள்போல பால்வீதிகள் நுண்மையாக இருக்கின்றன.
பால்வீதிகள் கண்டுபிடிப்பில், “எட்வின் ஹப்பிளுக்கு முன்னோடி மாணிக்கவாசகர்” என்பதை அறியமுடிகின்றது.
இலக்கணம் – பொது
குறுவினா
1. திணை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
திணை இரண்டு வகைப்படும். அவை: உயர்திணை, அஃறிணை.
2. பால் என்றால் என்ன? அதன் வகைகளைக் கூறு.
பால் என்பது திணையின் உட்பிரிவு. பால் ஐந்து வகைப்படும். அவை:
ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.
3. உயர்திணைக்குரிய பால்கள் எத்தனை? அவை யாவை?
உயர்திணைக்குரியப் பால்கள் மூன்று. அவை: ஆண்பால், பெண்பால், பலர்பால்.
4. அஃறிணைக்குரிய பால் பகுப்புகள் எத்தனை? அவை யாவை?
அஃறிணைக்குரியப் பால் பிரிவுகள் இரண்டு. அவை: ஒன்றன்பால், பலவின்பால்.
5. உயர்திணைக்குரிய பால் பகுப்புகளைக் கூறுக.
வீரன், அண்ணன், மருதன் – ஆண்பால் (ஒரு ஆணை மட்டும் குறிக்கும்)
மகள், அரசி, தலைவி – பெண்பால் (ஒன்றுக்கு மேற்பட்ட நபரைக் குறிக்கும்)
மக்கள், பெண்கள், ஆடவர் – பலர்பால் (ஒன்றுக்கு மேற்பட்ட நபரைக் குறிக்கும்)
6. அஃறிணைக்குரிய பால் பகுப்புகளைக் கூறுக.
அஃறிணையில் ஒன்றனை மட்டும் குறிப்பது ஒன்றன்பால். எ.கா: யானை, புறா, மலை
அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால். எ.கா: பசுக்கள், மலைகள்.
7. இடம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
இடம் மூன்று வகைப்படும். அவை: தன்மை, முன்னிலை, படர்க்கை.
8. வழு – வழா நிலை இவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கூறுக.
9. வழு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
வழு ஏழு வகைப்படும். அவை:
திணை வழு, பால் வழு, இட வழு , கால வழு, வினா வழு, விடை வழு, மரபு வழு.
10. வழுவமைதி என்றால் என்ன?
இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது வழுவமைதி ஆகும்.
11. வழுவமைதி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
வழுவமைதி ஐந்து வகைப்படும். அவை:
திணை வழுவமைதி, பால் வழுவமைதி, இட வழுவமைதி, கால வழுவமைதி, மரபு வழுவமைதி.
12. திணை வழுவமைதிக்குச் சான்று தந்து அதற்கான காரணத்தைக் கூறுக.
எ.கா : “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணை வழு.
காரணம் : உவப்பின் காரணமாக அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.
13. பால் வழுவமைதிக்குச் சான்று தந்து அதற்கான காரணத்தைக் கூறுக.
எ.கா : “வாடா ராசா, வாடா கண்ணா ” என்று தன் மகளைப் பார்த்துக் கூறுவது பால் வழுவமைதி.
காரணம் : உவப்பின் காரணமாக பெண்பால் ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.
14. இட வழுவமைதிக்குச் சான்று தந்து அதற்கான காரணத்தைக் கூறுக.
எ.கா : மாறன் என்பான் தன்னைப் பற்றி பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூற மாட்டான்” எனக் கூறுதல்.
காரணம் : தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவதால் இடவழுவமைதி ஆயிற்று.
15. கால வழுவமைதிக்குச் சான்று தந்து அதற்கான காரணத்தைக் கூறுக.
எ.கா : குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார். (வருவார் என்பதே சரி)
காரணம் : குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். வருகையின் உறுதித் தன்மை காரணமாக கால வழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.
16. மரபு வழுவமைதிக்குச் சான்று தந்து அதற்கான காரணத்தைக் கூறுக.
எ.கா : “கத்துங் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும்”-பாரதியார்.
(குயில் கூவும் – மரபு) காரணம் : குயில் கூவும் என்பது மரபு. பாரதியார் மகாகவி, அவர் குயில் கத்தும் என்று கூறியதால்
வழுவாயினும் மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
17. வீரன், அண்ண ன், மருதன் ஆகிய சொற்கள் எவ்வகைத் திணை எவ்வகைப் பால் எனக் குறிப்பிடுக.
திணை : உயர்திணை
பால் : ஆண்பால்
18. மகள், அரசி, தலைவி ஆகிய சொற்கள் எவ்வகைத் திணை எவ்வகைப் பால் எனக் குறிப்பிடுக.
திணை : உயர்திணை
பால் : பெண்பால்
19. மக்கள், பெண்கள், ஆடவர் ஆகிய சொற்கள் எவ்வகைத் திணை எவ்வகைப் பால் எனக் குறிப்பிடுக.
திணை : உயர்திணை
பால் : பலர்பால்
20. யானை, புறா, மலைஆகிய சொற்கள் எவ்வகைத் திணை எவ்வகைப் பால் எனக் குறிப்பிடுக.
திணை : அஃறிணை
பால் : ஒன்றன்பால்
21. பசுக்கள், மலைகள் ஆகிய சொற்கள் எவ்வகைத் திணை எவ்வகைப் பால் எனக் குறிப்பிடுக.
திணை : அஃறிணை
பால் : பலவின்பால்
22. வழா நிலை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
வழாநிலை ஏழு வகைப்படும். அவையாவன:
1. திணை வழாநிலை,
2. பால் வழாநிலை,
3. இடவழாநிலை,
4. காலவழாநிலை,
5. வினாவழாநிலை,
6. விடைவழாநிலை,
7. மரபுவழாநிலை
23.“நான் தேர்வில் தேர்ச்சியடைந்து விட்டேன்” என்று தேர்வு முடிவுகள் வெளிவரும் முன்பு கூறும் வழுவமைதி யாது?
கால வழுவமைதி; நம்பிக்கையின் அடிப்படையில் கூறப்படுவது.
சிறுவினா
1. மூவிடப் பெயர்களைப் பெயர்/வினை அடிப்படையில் எடுத்துக்காட்டுடன் பட்டியலிடுக.
2. செழியன் வந்தது
கண்ணகி உண்டான்
நீ வந்தேன்
நேற்று வருவான்.
ஒரு விரலைக் காட்டிச் ‘சிறியதோ? பெரியதோ? என்று கேட்டல்.
கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்குக் கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று விடையளித்தல். தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுதல் – இத்தொடர்களில் உள்ள வழு எவ்வகை வழு எனவும் வழுவை நீக்கியும் பட்டியலிடுக.
0 Comments