Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

10th Tamil Unit 3 Book Back and Interior குறுவினா & சிறுவினா Question & Answers

 10th Tamil Unit 3 

Book Back and Interior 

குறுவினா & சிறுவினா 

Question & Answers

Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21,  Samacheer Kalvi 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil  10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide pdf free download 10th book back answer 10th standard Tamil unit 3 book back question and answer 10th standard Tamil unit 3 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use

 10th Tamil Unit 3 Book back and Interior குறுவினா & சிறுவினா  Question & Answers, Short Question & Answers, 10th Samacheer kalvi Tamil Book Back Question and answers, 10th tamil Solutions guide, Students can Download 10th Tamil Chapter 3 Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework, home test, home assignments,  assignments and to score high marks in board exams.

 10th Tamil Unit 3 Book back and Interior குறுவினா & சிறுவினா  Question & Answers 

10th Tamil Unit 3 குறுவினா & சிறுவினா

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions 

10th tamil unit 3 Short answers
Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Unit 3

விருந்து போற்றுதும்!


குறுவினா

1. ‘தானியம் ஏதும் இல்லாதநிலையில்விதைக்காகவைத்திருந்ததினையை உரலில் இட்டுக்குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றாகக் கருதமுடியாது.
ஏனென்றால், இனிய சொற்களும், நல்ல உபசரிப்பும் இல்லாமல் செல்வத்தால் செய்யும் விருந்தோம்பலை யாரும் ஏற்கமாட்டார்கள். எனவே, செல்வத்தைவிட விருந்தோம்பலுக்கு இனியச் சொற்களும் நல்ல உபசரிப்பும், மனமும் இருந்தால் போதும் என்பது என் கருத்தாகும்.

சிறுவினா

1. புதிதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.
திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காண முடிகிறது.
இப்படியாகக் காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.
அன்றைய காலத்தில் வழிப்போக்கர்களே விருந்தினராகப் போற்றப்பட்டனர்.
காலமாற்றத்தால் நாகரிகம் என்னும் பெயரால், வழிப்போக்கர்களுக்கு விருந்தளிப்பது மறைந்து, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மட்டுமே விருந்தளிக்கும் நிலையைத்தான் இன்று காணமுடிகின்றது.
வழிப்போக்கர்களுக்கும், ஏழைகளுக்கும் கோவில் மற்றும் அன்னசத்திரங்கள் விருந்திட்டு வருகின்றன.
விருந்தினர் என்று சொல்லி கயவர்கள் இன்று மக்களை ஏமாற்றுவதால் புதியவர்களை விருந்தினர்களாகப் போற்றப்படுவது இல்லை.
இன்றைய சமுதாயத்தில் தன்னலம் மேலோங்கியதால் விருந்தென்னும் பொதுநலம் குறைந்து வருகின்றது.
 

குறுவினா

1. விருந்தோம்பல் என்றால் என்ன?
தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று, உண்ண உணவும் இடமும்
கொடுத்தல், அவர்களிடம் அன்பு பாராட்டுதல் இவையே விருந்தோம்பல் எனப்படும்.

2. உலகம் நிலைத்திருக்கிறதற்கான காரணங்கள் எவையென இளம்பெருவழுதி குறிப்பிட்டுள்ளார்?
தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.
அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது, பிறருக்குக் கொடுக்கும் நல்லோர் உள்ளதால் உலகம் நிலைத்திருக்கிறது.

3. ‘உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு’ என்பதைக் குறித்து நற்றிணை குறிப்பிடும் செய்தி யாது?
விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு.
 
4. இன்மையிலும் விருந்தோம்பல் குறித்து புறநானூறு எவ்வாறு காட்சிப்படுத்துகிறது?
வீட்டிற்கு வந்தவர்க்கு வறிய நிலையிலும் எவ்வழியேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர்.
தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தி எடுத்து விருந்தினருக்கு உணவளித்தாள் தலைவி.

5. வாளையும் யாழையும் பணையம் வைத்து விருந்தளிக்கப்பட்ட செய்தியைக் கூறு.
பழைய வாள் :
நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன்
சீறியாழ் :
இன்றும் விருந்தினர் வந்ததால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான்.
 
6. இளையான்குடி மாறநாயனார் சிவனடியார்க்கு விருந்தளித்த நிகழ்வை எழுது.
இளையான்குடி மாறநாயனாரின் வீட்டிற்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியம் இல்லை. தானியமில்லாததால் அன்று விதைத்துவிட்டு வந்த விதை நெல்லை அரித்துச் சமைத்து விருந்து படைத்தார்.

7. நெய்தல் நிலத்தவரின் விருந்தளிப்பு குறித்துச் சிறுபாணாற்றுப்படை வழியே செய்தியைக் கூறு.
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர்.

8. பழந்தமிழர் விருந்தை எதிர்கொள்ளும் தன்மைப் பற்றி குறுந்தொகை கூறும் செய்தி யாது?
இல்லத்தின் பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் பழந்தமிழரிடையே இருந்ததைக் குறுந்தொகை கூறுகிறது.

9. இல்ல விழாக்கள் யாவை?
திருமணத்தை உறுதி செய்தல்
பிறந்தநாள்
திருமணம்
புதுமனை புகுவிழா
வளைகாப்பு
 
10. மினசோட்டா தமிழ்ச் சங்க ‘வாழையிலை விருந்து விழாவில்’ வைக்கப்படும் உணவுகள் யாவை?
முருங்கைக்காய் சாம்பார்
வெண்டைக்காய் கூட்டு
மோர்க்குழம்பு
தினைப்பாயாசம்
வேப்பம்பூ ரசம்
அப்பளம்

11. யாருடைய ஆட்சி காலத்தில் மிகுதியான சத்திரங்கள் கட்டப்பட்டன?
நாயக்கர், மராட்டியர்.

12. “காலின் ஏழடிப் பின் சென்று” – இப்பாடலடி உணர்த்தும் செய்தி யாது?
பண்டையத் தமிழர் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும் போது வழியனுப்பும் விதம்.
வழியனுப்பும் போது அவர்கள் செல்ல இருக்கின்ற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர் வரை ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர்.

13. விருந்து பற்றி எடுத்துரைக்கும் தமிழ்நூல்கள் யாவை?

தொல்காப்பியம்
புறநானூறு
திருக்குறள்
நற்றிணை
சிலப்பதிகாரம்
குறுந்தொகை
கம்பராமாயணம்
கொன்றை வேந்தன்
கலிங்கத்துப்பரணி

 
14. விருந்து பற்றி எடுத்துரைக்கும் சங்க இலக்கிய நூல்கள் எவை?
புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை.

15. விருந்து பேணுவதற்காக எவற்றையெல்லாம் தலைவன் பணையம் வைத்ததாகப் புறநானூறு கூறுகின்றது?
இரும்பினால் செய்யப்பட்ட பழைய வாள், கருங்கோட்டுச் சீறி யாழ்.

16. விருந்தினர் என்பவர் யார்? (அல்லது) விருந்தே புதுமை – பொருள் விளக்கம் தருக.
விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தில் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். இதனையே தொல்காப்பியர் ‘விருந்தே புதுமை’ என்கிறார்.

17. விருந்து மற்றும் விருந்தோம்பல் பற்றிக் குறிப்பிடும் புலவர்கள் யாவர்?
தொல்காப்பியர்
கம்பர்
திருவள்ளுவர்
செயங்கொண்டார்
இளங்கோவடிகள்
ஔவையார்

18. மோப்பக் குழையும் அனிச்சம் உவமை கொண்டு வள்ளுவர் வலியுறுத்தும் கருத்து யாது?
முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதாகும்.
 
19. “விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” என்று கண்ணகி வருந்தக் காரணம் யாது?
கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததை விட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணி வருந்துகிறாள்.

20. தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை எது?
தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை ஆகும்.

21. உலகம் நிலைபெற்றிருக்கக் காரணம் யாது?
அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுத்து மகிழ்வர் நல்லோர். அத்தகையவர்களால் தான் உலகம் இன்றும் நிலைபெற்று இருக்கின்றது.

22. “அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்” தொடர் விளக்கம் தருக.
தொடர் இடம்பெறும் நூல் : நற்றிணை
தொடர் விளக்கம் : நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நற்பண்பு குடும்பத்தலைவிக்கு உண்டு.
 
23. “பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ” தொடர் விளக்கம் தருக.
தொடர் இடம்பெறும் நூல் : குறுந்தொகை
தொடர் விளக்கம் : இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளனரா? என்று கேட்கின்றனர்.
 
சிறுவினா
1. இன்மையிலும் விருந்தோம்பல் குறித்து இலக்கியங்கள் கூறும் செய்திகளைக் கூறு.
வீட்டிற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வழியிலேனும் முயன்று விருந்தளித்தனர் பழந்தமிழர் என்று புறநானூறு கூறுகிறது.
தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தளித்தாள் தலைவி. இன்று வந்த விருந்தினருக்கு விருந்தளிக்க கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்தான் தலைவன்.
இளையான்குடி மாறநாயனார் தன் வீட்டிற்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க, அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து விருந்து படைத்ததைப் பெரிய புராணம் மூலம் அறியலாம்.

2. உற்றாரோடு நின்ற விருந்து குறித்து எழுதுக.
சங்க காலத்தில் அரசனாயினும் வறியோராயினும் விருந்தினர்களைப் போற்றினர்.
கால மாற்றத்தினால் புதியவர்களை வீட்டிற்குள் அழைத்து உணவளிப்பது குறைந்தது.
விருந்து புரப்பது குறைந்ததால் நாயக்கர் மராத்தியர் காலத்தில் மிகுதியான சத்திரங்கள் வழிப்போக்கர்களுக்காகக் கட்டப்பட்டன.
புதியவர்களைவிருந்தினராய் ஏற்பது குறைந்து ஓரளவு தெரிந்தவர்களை மட்டுமே விருந்தினர்களாய் ஏற்ற னர்.
படிப்படியாக உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையே விருந்தினர்களாகப் போற்றும் நிலைக்கு மாறினர்.
 
3. விருந்தோம்பல் அன்றும் இன்றும் எவ்வாறு உள்ளது என வேறுபடுத்திக் காட்டுக.

4. மினசோட்டா ‘வாழையிலை விருந்து விழா’ பற்றி எழுதுக.
அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் வாழையிலை விருந்து விழா’வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
தமிழர்களின் பாரம்பரிய உணவுகளைக் கொண்டு விருந்து வைக்கின்றனர்.
முருங்கைக்காய் சாம்பார், மோர்க்குழம்பு, வேப்பம்பூ ரசம், வெண்டைக்காய்க் கூட்டு, தினைப்பாயாசம், அப்பளம் எனச் சுவையாகத் தமிழர் விருந்து கொடுக்கின்றனர்.
அங்கு வாழும் தமிழர்கள் பலரும் இந்த விருந்தில் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர்.  தொடர்ந்து பல பண்பாட்டு நிகழ்வுகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.
 
5. வாழை இலை விருந்து, ‘உணவு பரிமாறும் முறை’ குறித்து எழுது.
தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது.
உண்பவரின் இடப்பக்கம் வாழையிலையின் குறுகிய பகுதியும், வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வர வேண்டும்.
இலையின் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலானவைகளையும், சிறிய உணவு வகைகளையும் வைத்தனர்.
இலையின் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான உணவு வகைகளை வைப்பர். நடுவில் சோறு வைத்து எடுத்துண்ண வசதியாகப் பரிமாறுவர்.
பரிவுடன் பரிமாற்றம் :
விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறும் வழக்கத்தை நம் முன்னோர்கள் செய்தனர்.

6. வாழை இலையில் உண்பதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்ட நாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும்.
வாழை இலை ஒரு கிருமிநாசினி. அது உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.
வாழை இலையில் தொடர்ந்து உண்பவர்களுக்கு நோய் தாக்குவதில்லை.
தோல் பளபளப்பாகும்; பித்தம் தணிக்கும்.
வயிற்றுப் புண் ஆற்றும்; பசியைத் தூண்டும்.

7. காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த உங்கள் கருத்துகள் மூன்றினை எழுதுக.
புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைக்கப்பட்டிருந்த நிலை இக்காலத்தில் இல்லை.
அறிமுகமில்லாத புதியவர்களை விருந்தினர்களாக ஏற்பதுவும் இல்லை
திருமணம், வளைகாப்பு போன்ற இல்லவிழாக்கள் திருமணக்கூடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டன.


காசிக்காண்டம்


1. நெடுநாளாகப் பார்க்க எண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வருகிறார். நீங்கள் அவரை எதிர்கொண்டு விருந்து அளித்த நிகழ்வினை விரிவாக ஒரு பத்தியளவில் எழுதிப் படித்துக் காட்டுக.
உறவினரை வியந்து உரைத்து நல்லச் சொற்களை இனிமையாகப் பேசி முகமலர்ச்சியுடன் அவர்களை நோக்கினேன். வீட்டிற்குள் வருக! வருக! என்று வரவேற்றேன். அவர் எதிரில் நின்று முகமும் மனமும் மலரும்படி உணவருந்திச் செல்லுங்கள் எனக் கூறி உணவு சமைத்து, தலைவாழை இலையில் உணவிட்டேன். அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டேன். அவர் விடை பெற்றுச் செல்லும் போது வாயில் வரை பின் தொடர்ந்து சென்று அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்பினேன்.

இலக்கணக் குறிப்பு.
நன்மொழி – பண்புத்தொகை
வியத்தல், நோக்கல், எழுதுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் – தொழிற்பெயர்கள்
வருக – வியங்கோள் வினைமுற்று
இலக்கணக் குறிப்பு.
வந்து – வினையெச்சம்
நன்முகமன் – பண்புத்தொகை
பொருந்து – வினையெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்.

வந்து – வா(வ) + த(ந்) + த் + உ
வா – பகுதி (வ) எனக் குறுகியது விகாரம்
த் – சந்தி (ந்) ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

குறுவினா

1. காசிக்காண்டம் நூல் குறிப்பு வரைக.
காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம்.
துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது.

2. அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்கள் யாவை?
காசிக்காண்டம், நைடதம், லிங்க புராணம், வாயுசம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்மபுராணம், வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை.

3. “முகமன்” என்னும் சொல் உணர்த்தும் செய்தி யாது?
ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொல்லாகும்.

4. “பொருந்து மற்று அவன் தன் அருகுற இருத்தல்” – தொடர் பொருள் விளக்கம் தருக.
தொடர் இடம்பெறும் நூல் : காசிக்காண்டம்
தொடர் விளக்கம் : விருந்தினர் அருகிலேயே விருந்து மேற்கொள்பவர் அமர்ந்து கொள்ளுதல்.

சிறுவினா

1. அதிவீரராம பாண்டியர் குறிப்பு வரைக.
பெயர் : அதிவீரராம பாண்டியன்
சிறப்பு : கொற்கையின் அரசர் தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்தார்.
பட்டப் பெயர் : சீவலமாறன்
இயற்றிய நூல்கள் : காசிக்காண்டம், நைடதம், லிங்க புராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம், வெற்றிவேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை.’

2. விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கம் குறித்து காசிக்காண்டம் குறிப்பிடும் செய்தி யாது?
விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை எதிர்கொண்டு வியந்து உரைத்தல் வேண்டும்.
நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல் வேண்டும்.
முகமலர்ச்சியுடன் அவரை நோக்கி, வீட்டிற்குள் வருக’ என்று வரவேற்று, அவர் எதிரில் நின்று, அவர் முன் மனம் மகிழும்படி பேசுதல் வேண்டும்.
அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டு, அவர் விடை பெற்றுச் செல்லும் போது, வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல் வேண்டும்.
வந்தவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் வேண்டும். மேற்கண்ட செயல்கள் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாக காசிக்காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.


மலைபடுகடாம்

1. உணவு, விருந்து குறித்த பழமொழிகளைத் திரட்டி அவை சார்ந்த நிகழ்வுகளை எடுத்துரைக்க.
அ) எ.கா : ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’
கதை – எறும்பும் புறாவும் :
குளத்து நீரில் விழுந்து தத்தளித்த எறும்பைத் தக்க சமயத்தில் புறாவானது ஓர் இலையைப் பறித்துப் போட்டு எறும்பை அதன்மீது ஏறி கரைக்கு வரச் செய்தது. செய்நன்றி மறவாத எறும்பானது மறுமுறை புறாவைக் கொல்ல வந்த வேடனின் காலைக் கடித்ததால் அவன் எய்த அம்பு தவறியது புறா காப்பாற்றப்பட்டது.
 
ஆ) எ.கா : அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
கதை :
பல நாட்கள் பட்டினியாகக் கிடந்த எலி ஒன்று தானியங்கள் நிரப்பப்பட்ட ஓர் உயரமான பானையைப் பார்த்தது. உயரத்தில் ஏற முடியாத காரணத்தால் எலியானது பானையின் அடியில் உள்ள ஓட்டையின் வழியே உள்ளே சென்றது. அளவுக்கு அதிகமான தானியங்களை உண்டதால் வயிறு புடைந்தது. ஓட்டையை விட்டு வெளியேற முடியாத எலி மீண்டும் மீண்டும் முயன்று அதன் வயிறு கிழிந்தது. ஓட்டையை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலே வலியால் துடித்துச் செத்தது.

2. பத்தியைப் படித்து வார இதழ் ஒன்றிற்கு அனுப்பும் வகையில் சமையல் குறிப்பாக மாற்றுக.
கம்மங்கூழ் தயாரித்தல் :
பொசுக்குகிறது வெயில், ஒரு துளி மழை பட்டால் வறுத்த உளுத்தின் வாசம் பரப்பும் வறண்ட மண். வெடித்த நிலம் செழித்து விளைகிறது கம்மம் பயிர். உரலில் குத்தி, சுளகில் புடைக்க அதன் உழி நீங்கும். நீர் தெளித்துத் தெளித்து, மீண்டும் உரலில் இடிக்க அது ஒன்றுடன் ஒன்று ஒட்டி மாவாகும். உப்புக் கலந்து உலையில் ஏற்றி, கொதிக்கும் நீரில் கரையவிட்டுக் கிண்ட, கட்டியாகி அது சோறாகும். கம்மஞ் சோற்றை உருட்டி வைத்து, பின் மோர் விட்டுக் கரைத்தால் அது கம்மங்கஞ்சி அல்லது கம்மங்கூழ், மோர் மிளகாய் வற்றல், உப்பில் தோய்த்த பச்சை மிளகாய் அல்லது சின்ன வெங்காயம் கடித்துக் கஞ்சியைக் குடித்தால் உச்சி தொட்டு உள்ளங்கால் வரை தேகம் குளிர்ந்து போகும், அனல் அடங்கும். உயிர் வரும் கம்பு கறுப்பு நிறக் கரிசல் மண்ணின் இயற்கைத் தங்கம்.


குறுவினா

1. ‘இறடிப் பொம்மல் பெறுகுவிர்’ – தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.
தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்.

சிறுவினா
1. முல்லை நிலத்திலிருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவு வகைகள் யாவை?

2. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?
வழிகாட்டல் :
பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள். இரவில் சேர்ந்து தங்குங்கள். எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள். சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்கள், மூங்கில்கள் ஓசை எழுப்பும் மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள்.
நன்னனின் கூத்தர்கள் :
பகைவரே இல்லாமல் ஆட்சிசெய்பவன், பகை வந்தாலும் எதிர்கொள்ளும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.
இன் சொற்கள் :
நீங்கள் உரிமையுடன் உங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டிற்குள் நுழையுங்கள். அவர்களும் உங்களிடம், உறவினர் போலப் பழகி இனிய சொற்களைப் பேசுவார்கள்.
உணவு : நெய்யில் வெந்த மாமிசம், தினைச் சோறு ஆகியவற்றை உணவாக அளிப்பர். அவற்றை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

குறுவினா

1. மலைபடுகடாம் – பெயர்க்காரணம் கூறு.
மலைக்கு யானையை உருவகமாகக் கூறி, அதன் ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்துள்ளதால் மலைபடுகடாம் எனப் பெயர் பெற்றது.

2. ஆற்றுப்படை என்றால் என்ன?
ஆற்றுப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர் வரும் கூத்தனை அழைத்தல்.
யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகிறோம்.
நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என்று கூறுதல்.

3. குறுநில மன்னன் நன்னனின் ஊரில் கூத்தர்களுக்கு வழங்கப்படும் உணவாக மலைபடுகடாம் கூறுவன யாவை?
நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியல்.
தினைச் சோறு.

4. பண்டையத் தமிழ் கலைஞர்கள் யாவர்?
கூத்தர், பாணர், விறலியர்.
 
5. மலைபடுகடாமில் ஒளிரும் பூங்கொத்துகளுக்குக் கூறப்பட்ட உவமை யாது?
மலைபடுகடாமில் ஒளிரும் பூங்கொத்துகளுக்குக் கூறப்பட்ட உவமை எரியும் நெருப்பு ஆகும்.

6. “நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்
மானா விறல்வெள் வயிரியம் எனினே ” என்று யார் யாரிடம் கூறினார்?
நன்னனைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரிடம் கூறினார்.

7. “நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்
மானா விறல்வெள் வயிரியம் எனினே” தொடர் பொருள் விளக்குக.
தொடர் இடம் பெறும் நூல் : மலைபடுகடாம்
தொடர் பொருள் விளக்கம் : பகைவரைப் பொறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.

8. தினை, சோறு ஆகியவற்றிற்கு மலைபடுகடாம் தரும் சொற்கள் யாவை?
தினை – இறடி ; சோறு – பொம்மல்.

9. “அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்” இவ்வடியில் ‘கழை’ என்னும் பொருள் தரும் சொல் எது?
கழை – மூங்கில்.
 
10. “அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்” இவ்வடியில் “ஆரி”, “படுகர்” ஆகிய சொற்களின் பொருள் யாது?
ஆரி – அருமை ; படுகர் – பள்ளம்.

சிறுவினா

1. ‘மலைபடுகடாம்’ நூல் குறிப்பு வரைக.
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம்.
வேறு பெயர் : கூத்தராற்றுப்படை
அடிகள் : 583
உருவகம் : மலைக்கு யானையை உவமையாக்கி அதன் ஓசையைக் கடாஅம் எனச் சிறப்பித்தது.
பாட்டுடைத் தலைவன் : நன்னன் என்னும் குறுநில மன்னன்.
பாடியவர் : இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்.

2. “நெய்க்கண் வேவையொடு குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்” இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம்:
இப்பாடல், பெருங்கௌசிகனார் பாடிய மலைபடுகடாம் எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.
பொருள்:
பரிசில் பெற்ற கூத்தன் பெறப் போகும் கூத்தனை ஆற்றுப்படுத்தல்.
விளக்கம் :
நன்னனின் ஊரில் பரிசு பெற்ற கூத்தன் பரிசு பெறப்போகும் கூத்தனிடம், “அங்கே, நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச்சோற்றையும் உணவாகப் பெறுவீர்” என்று ஆற்றுப்படுத்துகின்றான்.
 
3. பத்துப்பாட்டில் அமைந்த ஆற்றுப்படை நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்களையும் எழுதுக.


கோபல்லபுரத்து மக்கள்


1. பசித்தவருக்கு உணவிடுதல் என்ற அறச்செயலையும் விருந்தினருக்கு உணவிடுதல் என்ற பண்பாட்டுச் செயலையும் ஒப்பிட்டு பேசுக.
பசித்தவருக்கு உணவிடுதல் என்பது ஒரு மனிதநேயச் செயலாகும். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்ற புகழ்மொழிக்கேற்ப பசியால் வருந்தும் ஒருவருக்கு அந்நேரத்தில் உணவளிப்பது அவருக்குப் புத்துயிர் அளிப்பதாக இருக்கிறது.
விருந்தினருக்கு உணவிடுதல் என்பது நாச்சுவைக்காகவும் விருந்தோம்பல் காரணமாகவும் உணவிடப்படுகிறது. தமிழர் பண்பாடுகளில் சிறந்த ஒன்று விருந்தோம்பல். ஆகவே, விருந்தளிப்பதனைப் பெறும் பேறாகக் கருதி உணவளிப்பர்.

2. உங்கள் கற்பனையை இணைத்து நிகழ்வைக் கதையாக்குக.
அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே சின்னஞ்சிறு சச்சரவுகள் ஏற்பட்டு, இரண்டு பேருமே முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்திருக்கும் போது, விருந்தினர் வருகை அவர்களை அன்பான கணவன் மனைவியாக மாற்றிவிடும் அம்மாவின் கெடுபிடியும் அப்பாவின் கீழ்ப்படிதலும் ஆச்சரியமாக இருக்கும். விருந்தாளிகள் அடிக்கடி வரமாட்டார்களா என்று இருக்கும்.

3.விருந்தினர் தினம் என்பது எப்படி விடியும் தெரியுமா?
காலையிலிருந்தே வீட்டிற்குள்ளிருந்து வாசலுக்கு வந்து வந்து எட்டிப் பார்த்துச் செல்வாள் அம்மா. திண்ணையில் பேப்பர் பார்த்துக் கொண்டிருக்கும் அப்பா கேட்பார். “என்ன விஷயம், இன்னிக்கு யாராவது விருந்தாளி வரப்போராங்களா என்ன?”
“ஏங்க…. காலையிலேருந்து வேப்ப மரத்துல காக்கா விடாம கத்திக்கிட்டே இருக்கே பார்க்கலியா? நிச்சயம் யாரோ விருந்தாளி வரப்போறாங்க பாருங்க.” “அடடே, ஆமாம் காக்கா கத்துது யாரு வரப்போறா? இது பலாப்பழ சீசன் ஆச்சே…. உன் தம்பிதான் வருவான், பலாப்பழத்தைத் தூக்கிட்டு” – நாங்கள் ஓடிப்போய் தெருவில் பார்ப்போம். அப்பா சொன்னது சரி, காக்கா கத்தியதும் சரி. தூரத்தில் தெருமுனையில் அறந்தாங்கி மாமாதலையில் பலாப்பழத்துடன்வந்து கொண்டிருந்தார். அம்மாவுக்குக் காக்கை மொழி தெரியும். – தஞ்சாவூர்க் கவிராயர்
Answer:
விருந்தினர் தினம்
அதிகாலையில் கதிரவன் பொன் நிறமான ஒளிக்கதிர்களை வீசிக் கொண்டிருந்தான். விடியலை உணர்ந்த பறவைகள் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. குடும்பத் தலைவிகள் சாணநீர் கரைசலுள்ள வாளி, துடைப்பம், கோலப்பொடி கிண்ணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியேறி வீட்டின் முன்றிலில் சாணநீர் தெளித்து துடைப்பத்தால் பெருக்கி கோலமிட்டனர். பின் வீட்டிற்குள் சென்று மற்ற வேலைகளில் ஈடுப்பட்டனர்.
ஒருவரது இல்லத்தில் மட்டும் வேப்ப மரத்திலிருந்து காக்கை ஒன்று கரைந்து கொண்டிருந்தது. காக்கை அதிகாலையில் கரைந்தால் விருந்தினர் வருகை இருக்கும் என்பது ஐதீகம். ஆகவே அப்பெண்மணி விருந்துக்கான உணவினைத் தயார் செய்ய ஆரம்பித்தாள். இடையில் தன் கணவனுடன் மனவருத்தம் ஏற்பட்டு சண்டை வேறு குழந்தைகளின் மனதில் விருந்தினர் வந்தால் பெற்றோர் சண்டையை விட்டு விட்டு மகிழ்வர் எனக் கருதிக் கொண்டிருந்த போது பலாப்பழம் ஒன்றைத் தன் தலையில் வைத்து சுமந்தபடி வந்தார். பெற்றோர் சண்டையை விட்டுவிட்டு விருந்தினரை வரவேற்பதிலும் உபசரிப்பதிலும் மூழ்கினர். குழந்தைகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

தொகாநிலைத் தொடர்கள்

1. இன்று நீங்கள் படித்த செய்தித்தாள்களில் உள்ள தொகாநிலைத் தொடர்களைத் தொகுத்து வருக.
பத்தி செய்தி :
கதிரவன் வந்தான். கதிரவா வா என அழைத்தாள் சீதா. சீதையைக் கண்டேன் எனக் கூறிய கதிரவன், அம்மா நலமா? எனக் கேட்டான். அம்மா நனி நலம்; நேற்றுதான் வந்து போனாள்; உன்னை விசாரித்தாள் எனச் சீதா கூறினாள். இவ்வாறு பேசிக் கொண்டிருந்த சீதாவின் கழுத்தில் கத்தியை வைத்தான் கதிரவன். உன் சங்கிலியைத் தா என்றான். அவள், அவன் கையைத் தட்டிவிட்டு வெளியே ஓடிப்போனாள். திருடன், திருடன் என அவள் கூச்சலிட்டதைக் கேட்ட ஊர் மக்கள் அனைவரும் திரண்டனர்; கதிரவனைப் பிடித்தனர். பின் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர் காவலர் அவனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். நம்பிக்கை துரோகி ஒருவனிடமிருந்து தான் காப்பாற்றப்பட்டதற்காக இறைவனுக்கு நன்றி கூறினாள்.
Answer:
கதிரவன் வந்தான், அம்மா நலமா?, சீதா கூறினாள்,அனைவரும் திரண்டனரா? – எழுவாய்த் தொடர்கள்
கதிரவா வா  – விளித்தொடர்
திருடன் திருடன் – அடுக்குத்தொடர் (அச்சம் காரணமாக)
அழைத்தாள் சீதா – வினைமுற்றுத் தொடர்
நனிநலம் – உரிச்சொல் தொடர்
கூறிய கதிரவன், கேட்ட ஊர் மக்கள் – பெயரெச்சத் தொடர்கள்
வந்து போனாள் – வினையெச்சத் தொடர்
சீதையைக் கண்டேன், உன்னை விசாரித்தாள், கத்தியை வைத்தான், கதிரவனைப் பிடித்தனர், சங்கிலியைத் தா – இரண்டாம் வேற்றுமைத்  தொகாநிலைத் தொடர்கள்
கழுத்தில் கத்தி, சிறையில் அடைத்தனர் – ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத்
தொடர்கள்
காவல் நிலையத்திற்குத் தகவல், இறைவனுக்கு நன்றி  – நான்காம் வேற்றுமைத்   தொகாநிலைத் தொடர்கள்
 
2. கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக.
மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. அவரது அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பாடல்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார்.
இறங்கினார் முகமது – வினைமுற்றுத் தொடர்
அவர் பாடகர் – எழுவாய்த் தொடர்
பாடுவது கேட்பது – கூட்டு வினையெச்சத் தொடர்
கேட்ட பாடல்கள் – பெயரெச்சத் தொடர்
கேட்காத பாடல்கள் – எதிர்மறைப் பெயரெச்சத் தொடர்
அடுக்கு அடுக்காக – அடுக்குத் தொடர்

3. வண்ணச் சொற்களின் தொடர் வகைகளை எழுதுக.
பழகப் பழகப் பாலும் புளிக்கும் – அடுக்குத்தொடர்
வடித்த கஞ்சியில் சேலையை அலசினேன் – பெயரெச்சத் தொடர்
மேடையில் நன்றாகப் பேசினான். – வினையெச்சத் தொடர்
வந்தார் அண்ணன் – வினைமுற்றுத் தொடர்
அரிய கவிதைகளின் தொகுப்பு இது. – ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்


குறுவினா

1. ‘எழுது என்றாள்’ என்பது விரைவு காரணமாக ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத் தொடரானது. ‘சிரித்துப் பேசினார்’ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
‘சிரித்து பேசினார்’ என்பது, உவகை காரணமாக சிரித்து சிரித்து பேசினார்’ என அடுக்குத்தொடராகும்.

2. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?.
பெயர்ப் பயனிலை –
வினை பயனிலை – சென்றார்
வினா பயனிலை – யார்?

சிறுவினா

1. ‘கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீயெழும்பு
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!
இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.
‘கண்ணே கண்ணுறங்கு – விளித்தொடர்
காலையில் நீயெழும்பு – ஐந்தாம் வேற்றுமை தொகாநிலைத் தொடர்
மாமழை பெய்கையிலே – உரிச்சொல் தொடர்
மாம்பூவே கண்ணுறங்கு – விளித்தொடர்
பாடினேன் தாலாட்டு – வினைமுற்றுத் தொடர்
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு – அடுக்குத்தொடர்

குறுவினா

1. தொகாநிலைத் தொடர் என்றால் என்ன?
ஒரு தொடர் மொழியில் இரு சொற்கள் இருக்கும்.
அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே பொருளை உணர்த்தும்.
இதுவே தொகாநிலைத் தொடர் எனப்படும்.

2. தொகாநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
தொகாநிலைத் தொடர்கள் ஒன்பது வகைப்படும். அவை:
எழுவாய்த் தொடர்
வேற்றுமைத் தொடர்
விளித்தொடர்
இடைச்சொல் தொடர்
வினைமுற்றுத் தொடர்
உரிச்சொல் தொடர்
பெயரெச்சத் தொடர்
அடுக்குத் தொடர்
வினையெச்சத் தொடர்
 
3. எழுவாய்த் தொடர் என்றால் என்ன? சான்றுகள் தருக.
எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர்.
சான்று :
இனியன் கவிஞர் – பெயர் பயனிலை
காவிரி பாய்ந்தது – வினை பயனிலை
பேருந்து வருமா? – வினா பயனிலை

4. விளித்தொடர் என்றால் என்ன? சான்று தருக.
விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர்.
சான்று : நண்பா எழுது.

5. வினைமுற்றுத் தொடர் என்றால் என்ன? சான்று தருக.
வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடரும்.
வினைமுற்று முதலில் நின்று ஒரு பெயரைக் கொண்டு முடியும்.
சான்று : பாடினாள் கண்ணகி.

6. பெயரெச்சத் தொடர் என்றால் என்ன? சான்று தருக.
முற்றுப் பெறாத வினை (எச்ச வினை) பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிவது பெயரெச்சத் தொடர் எனப்படும்.
சான்று : கேட்ட பாடல் (கேட்ட – எச்சவினை, பாடல் – பெயர்ச்சொல்)
 
7. வினையெச்சத் தொடர் என்றால் என்ன? சான்று தருக.
முற்றுப் பெறாத வினை (எச்சவினை) வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத் தொடர் எனப்படும்.
சான்று : பாடி மகிழ்ந்தனர்.

8. வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் என்றால் என்ன? சான்று தருக.
வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத் தொடராகும்.
சான்று : கட்டுரையைப் படித்தான்.
 
9. இடைச்சொல் தொடர் என்றால் என்ன? சான்றுடன் விளக்குக.
இடைச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.
சான்று :
மற்றொன்று – மற்று + ஒன்று
மற்று – இடைச்சொல்
ஒன்று – இடைச்சொல்லை அடுத்து நின்று பொருள் தரும் சொல்.

10. உரிச்சொல் தொடர் என்றால் என்ன? சான்று தந்து விளக்குக.
உரிச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.
சான்று : சாலச் சிறந்தது
சால – உரிச்சொல்
சிறந்தது – உரிச்சொல்லைத் தொடர்ந்து சிறந்தது என்ற சொல் நின்று மிகச் சிறந்தது என்ற பொருளைத் தருகின்றது.

11.அடுக்குத் தொடர் என்றால் என்ன? சான்று தருக.
ஒரு சொல் இரண்டு, மூன்று முறை அடுக்கி வரும்.
சான்று : வருக! வருக! வருக!
(பிரித்தால் பொருள் தரும். உவகை, விரைவு, அச்சம், வெகுளி ஆகிய பொருள்களில் வரும். சொற்கள் தனித்தனியே நிற்கும்).
 
சிறுவினா

1. கூட்டுநிலைப் பெயரெச்சத்தை சான்றுடன் விளக்குக.
கூட்டுநிலைப் பெயரெச்சம் :
ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடிவது கூட்டுநிலைப் பெயரெச்சம்.
உருவாக்கம் :
வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன.
சான்று : கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி.

2. வேற்றுமைத் தொகாநிலைத் தொடரைச் சில சான்றுகளுடன் விளக்குக.
வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் :
வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் ஆகும்.
சான்று :
இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’
கட்டுரையைப் படித்தாள் – இத்தொடரில் ‘ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்பட வந்துள்ளது.
 மூன்றாம் வேற்றுமை உருபு ‘ஆல்’
அன்பால் (ஆல்) கட்டினார் – இத்தொடரில் ‘ஆல்’ என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு வெளிப்பட – வந்துள்ளது.
நான்காம் வேற்றுமை உருபு ‘கு’
அறிஞருக்குப் பொன்னாடை – இத்தொடரில் ‘கு’ என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்பட வந்துள்ளது.

திருக்குறள்


குறுவினா

1. ‘நச்சப் படாதவன்’ செல்வம் – இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
நச்சப் படாதவன் என்பதன் பொருள், பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர்.

2. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.
கொடுப்பதூஉம் – இன்னிசை அளபெடை துய்ப்பதூஉம் – இன்னிசை அளபெடை

3. பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.

 
 
4. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?
அ) கூவிளம் தேமா மலர்
ஆ) கூவிளம் புளிமா நாள்
இ) தேமா புளிமா காசுஈ) புளிமா தேமா பிறப்பு
அ) கூவிளம் தேமா மலர்

சிறுவினா

1. வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு நின்றான் இரவு – இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
இப்பாடலில் உவமையணி பயின்று வந்துள்ளது.
அணி இலக்கணம் :
உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் ஒரு வாக்கியமாகவும் உவம உருபு வெளிப்படையாக வருவது உவமையணி ஆகும்.
உவமை : வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிபறி செய்தல்.
உவமேயம் : ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு மன்னன் வரி விதித்தல்.
உவம உருபு : போல (வெளிப்படை)
விளக்கம் : ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பது, வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானது ஆகும்.
 
2. கவிதையைத் தொடர்க.
தண்ணீர் நிறைந்த குளம்
தவித்தபடி வெளிநீட்டும் கை
கரையில் கைபேசி படமெடுத்தபடி
…………………………………………………………………..
…………………………………………………………………..
…………………………………………………………………..
கவிதையைத் தொடர்க.
தண்ணீர் நிறைந்த குளம்
தவித்தபடி வெளிநீட்டும் கை
கரையில் கைபேசி படமெடுத்தபடி
பதறுகிறது என் நெஞ்சமடி
வருங்கால சமுதாயம் என்னவாகுமடி
எப்போது தீரும் தன்படம் மோகமடி
மூழ்கியவன் மூச்சு நின்னுப்போச்சு
மனிதநேயம் செத்துப்போச்சு
 
திருக்குறள் பற்றிய கவிதை :
உரை(றை) ஊற்றி ஊற்றிப்
பார்த்தாலும்
புளிக்காத பால்!
தந்தை தந்த
தாய்ப்பால்
முப்பால் ………………… – அறிவுமதி
 
கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.
எய்துவர், காண்பர் – வினையாலணையும் பெயர்கள்
எய்தாப் பழி, தமராக் கொளல், ஏமரா மன்னன் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சங்கள்
புகுத்தி – வினையெச்சம்
கொடுப்பதூஉம், தூய்ப்பதூஉம் – இன்னிசையளபெடைகள்
பகுபத உறுப்பிலக்கணம்.

குறுவினா



1. உயிரினும் ஓம்பப்படுவது எது? ஏன்?
உயிரினும் ஓம்பப்படுவது ஒழுக்கம்.
ஏனெனில் ஒழுக்கமானது அனைத்துச் சிறப்புகளையும் தருகிறது.

2. ஒழுக்கத்தினால் கிடைப்பது எது? இழுக்கத்தினால் கிடைப்பது எது?
ஒழுக்கத்தினால் கிடைப்பது மேன்மை.
இழுக்கத்தினால் கிடைப்பது அடையக்கூடாத பழிகள்.

3. பல கற்றும் கல்லாதவராகக் கருதப்படுபவர் யார்?
உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் பல நூல்களைக் கற்றறிந்தாலும் கல்லாதவராகவே கருதப்படுவார்.

4. எப்பொருளைக் காண்பது அறிவு?
எந்தப் பொருள் எந்த இயல்பினதாய்த் தோன்றினாலும், அந்தப் பொருளின் உண்மைப் பொருளைக் காண்பது அறிவு.
 
5. நாமம் கெடக்கெடும் நோய் பற்றி எழுதுக.
ஆசை, சினம், அறியாமை என்ற மூன்றும் அழிதல் வேண்டும்.
இம்மூன்றும் அழிந்தால் அவற்றால் வரும் துன்பங்களும் அழியும்.

6. பெரும்பேறு எது?
பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதலே கிடைத்தற்கரிய பெரும்பேறாகும்.

7. கெடுப்பார் இலானும் கெடுபவர் யார்? ஏன்?
குற்றம் கண்டபோது இடித்துத் திருத்தும் பெரியாரின் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளாத மன்னன் தன்னைக் கெடுக்க பகைவர் இல்லை எனினும் தானே கெட்டழிவான்.
 
8. நல்லார் தொடர்பை கைவிடல் எத்தன்மையது?
தான் ஒருவனாக நின்று பலரோடு பகை மேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தரும். ஆகவே நல்லார் நட்பைக் கைவிடல் கூடாது.


9. ஆட்சியதிகாரம் கொண்டுள்ள அரசன் குறித்துக் கூறப்பட்டுள்ள செய்தி யாது?
ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பான்.
அரசனது இச்செயலானது வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகராகும்.

10. ஆராயாது ஆட்சி செய்யும் மன்னனைக் குறித்து குறள் கூறும் செய்தி யாது?
தன் நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னன் தன் நாட்டை நாள்தோறும் இழக்க நேரிடும்.

11. இரக்கம் இல்லா கண்கள் எதனைப் போன்று பயனற்றது?
பாடலோடு பொருந்தாத இசையால் பயனில்லை.
அதைப் போல இரக்கம் இல்லாத கண்களாலும் பயனில்லை.
 
12. உலகமே உரிமையுடையதாகும் எப்போது?
நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும்.

13. நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர் யார்? ஏன்?
விரும்பத்தக்க இரக்ககுணம் கொண்டவர்கள் நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர்.
ஏனெனில் பிறர் நன்மை கருதித் தமக்கு நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணுவர்.


14.  ஒருவருக்கு பெருமை தருவது எது?
ஒரு செயலை முடிப்பதற்கு இயலாது என்று எண்ணிச் சோர்வடையக் கூடாது.
அச்செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும்.

15. உயர்ந்த நிலையை எப்போது அடைய முடியும்?
விடாமுயற்சி என்னும் உயர்பண்பு கொள்ளுதல், பிறருக்கு உதவுதல். இவ்விரு பண்புகளால் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
 
16. ‘செல்வம் பெருகுதல்’ ‘வறுமை வருதல்’ எப்போது?
முயற்சி செய்வதால் செல்வம் பெருகும்.
முயற்சி இல்லாவிட்டால் வறுமையே வந்து சேரும்.

17. இழிவற்றது இழிவானது எது?
ஐம்புலன்களில் ஏதேனும் குறையிருப்பின் அது இழிவன்று.
அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாததே இழிவாகும்.

18. சோர்விலாது முயற்சி செய்வோர் குறித்துக் கூறு.
சோர்விலாது முயற்சி செய்வோர் செய்கின்ற செயலுக்கு இடையூறாய் வரும் முன்வினையையும் தோற்கடித்து வெற்றியடையவர்.

19. பல கோடி பெறினும் பயனில்லை எப்போது?
பிறருக்குக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருப்பவர் பல கோடிப் பொருள்களைப் பெற்றிருந்தாலும் அதனால் பயன் இல்லை.
 
20. விரும்பப்படாதவர் செல்வம் எதனைப் போன்றது?
பிறருக்கு உதவாமல் ஒருவராலும் விரும்பப்படாதவர் பெற்ற செல்வம், ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றதாகும்.

21. “பொறியின்மை யார்க்கும் பழியன்று” – இவ்வடிகளில் “பொறி” என்பது எதனைக் குறிக்கும்?
பொறி என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளைக் குறிக்கும்.

22. “முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.” – இக்குறட்பாவில் அமைந்த முரண்சொற்கள் எவை?
முயற்சி – முயற்றின்மை
திருவினை (செல்வம்) – இன்மை (வறுமை)

23. “அடுக்கிய கோடி உண்டாயினும் இல்” ஏன்?
பிறருக்கும் கொடுக்காமல், தானும் அனுபவிக்காமல் இருப்பவர் அடுக்கிய பல கோடி பெரினும் பயன் இல்லை .
 

24. “உரிமை உடைத்து இவ்வுலகு” – யாருக்கு?
நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு, உலகமே உரிமை உடையதாகும்.

25. நாள்தோறும் நாடு கெடும் – என்று வள்ளுவர் கூறக் காரணம் யாது?
தன் நாட்டில் நடக்கும் நன்மை தீமைகளை ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னன் நாடு நாள்தோறும் கெடும்.
 
26. கற்றும் கல்லாதார் அறிவிலாதார் – யார்?
உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதார், பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவர்.

27. பாடலோடு பொருந்தா இசையால் பயனில்லை என்னும் உவமையைக் கொண்ட திருக்குறளை எழுதுக.
பண்என்னாம் பாடற் இயைபின்றேல்; கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.

28. முயற்சி இல்லாதவருக்கு வறுமையே கிட்டும் என்பதற்குச் சான்றாக விளங்கும் திருக்குறளை எழுதுக.
(அ) முயற்சி செய்பவருக்கு செல்வம் பெருகும் என்பதற்குச் சான்றாக விளங்கும் திருக்குறளை எழுதுக.
Answer:
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.
 
29.ஒரு செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும் என்பதை வலியுறுத்தும் குறட்பாவினை எழுதுக.
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

30. நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுவது பலமடங்கு தீமையைத் தரும் என்பதைக் குறிப்பிடும் திருக்குறளை எழுதுக.
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

31. எந்தப் பொருளாயினும் அதன் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவு என்பதை விளக்கும் குறட்பாவினை எழுதுக.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.
 
சிறுவினா

1. ஒழுக்கமுடைமை குறித்து வள்ளுவர் கூறிய செய்தி யாது?
உயிரினும் மேலானது :
ஒழுக்கம் எல்லாருக்கும் அனைத்துச் சிறப்புகளையும் தருவதால் அதை உயிரினும் மேலானதாகக் கருதிக் காத்தல் வேண்டும்.
மேன்மை – பழி :
ஒழுக்கத்தினால் கிடைப்பது மேன்மை. இழுக்கத்தினால் கிடைப்பது அடையக் கூடாத பழி.
பல கற்றும் அறிவிலார் :
உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் பல நூல்களைக் கற்றவராயினும் அறிவு இல்லாதவராகவே கருதப்படுவார்.

2. மெய்யுணர்தல் குறித்து எழுதுக.
உண்மைப் பொருளைக் காணல் :
எந்தப் பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும் அந்தப் பொருளின் உண்மைப் பொருளைக் காண்பது அறிவு.
துன்பம் அழிதல் :
ஆசை, சினம், அறியாமை என்ற மூன்றையும் அழித்தால் அதனால் வரும் துன்பமும் அழியும்
 
3. பெரியாரைத் துணைக்கோடல் குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகளை எழுதுக.
பெரும்பேறு :
பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதலே பெரும்பேறாகும்.
பாதுகாப்பற்ற மன்னன் :
குற்றம் கண்ட இடத்து இடித்துத் திருத்தும் பெரியாரின் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளாத மன்னன் தன்னைக் கெடுக்கப் பகைவர்கள் இல்லையெனினும் தானே கெட்டழிவான்.
பெரியோர் நட்பைக் கைவிடல் :
நற்பண்புடைய பெரியோரின் நட்பைக் கைவிடுவதானது, தனியொருவனாக நின்று பகைவர் பலரைப் பகைத்துக் கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தரும்.

4. கொடுங்கோன்மை பற்றிய செய்தியைக் கூறு.
ஆட்சியதிகாரம் : தன் ஆட்சியதிகாரத்தைக் கொண்டு வரி விதிக்கும் மன்னனது செயலானது, வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிபறி செய்பவனின் செயலுக்கு ஒப்பானது.
தன் நாட்டை இழத்தல் : தன் நாட்டின் நன்மை, தீமைகளை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னன் தன் நாட்டை இழக்க நேரிடும்.
 
5. கண்ணோட்டம் குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகளை எழுது.
இரக்கம் இல்லாத கண்கள் : பாடலோடு பொருந்தாத இசையால் பயன் ஒன்றுமில்லை. அதுபோல, இரக்கமில்லாக் கண்களால் பயன் ஒன்றுமில்லை
நடுநிலை : நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும்.
நஞ்சை உண்ணும் பண்பாளர் : விரும்பத் தகுந்த இரக்க இயல்பைக் கொண்டவர்கள், பிறரது நன்மைக்காக தனக்கு நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர் ஆவார்.

6. ஒருவனது செல்வம் பயனற்றதாய்ப் போவது எப்போது?
பல கோடிப் பொருள்கள் :
பிறருக்கும் கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் இருப்பவர் பல கோடிப் பொருள்கள் பெற்றிருந்தாலும் அதனால் பயன் இல்லை.
நச்சுமரம் பழுத்தது :
பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர் பெற்ற செல்வம் ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றதாகும்.

7. பண்என்னாம் பாடற் இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண் – இக்குறளில் பயின்று வரும் அணியைக் கூறி விளக்குக.
இப்பாடலில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.
அணி இலக்கணம் :
உவமை ஒரு வாக்கியமாகவும், உவமேயம் ஒரு வாக்கியமாகவும் உவமஉருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமை அணி ஆகும்.
உவமை : பாடலோடு பொருந்தவில்லை எனில் இசையால் பயனில்லை.
உவமேயம் : இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் பயன் இல்லை.
உவம உருபு : போல (மறைந்து வந்துள்ளது)
விளக்கம் : பாடலோடு பொருந்தவில்லை எனில் இசையால் பயன் இல்லை. அதுபோலவே, இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் பயன் இல்லை.
 
8. கீழ்க்காணும் பாடலில் உள்ள எதுகைச் சொற்களை எடுத்தெழுதி அடிக்கோடிடுக.
1. பண்என்னாம் பாடற் இயைபின்றேல் ; கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.

Post a Comment

0 Comments