Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

School Re Opens on September 21?

 School Re Opens on September  21? 

செப்டம்பர் 21 -ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், 4 கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான வழி காட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியிட்டுள்ளது .

அதில், செப்டம்பர் 21 -ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் ஆலோசனை பெறலாம். மேலும், 6 அடி தனிமனித இடைவெளியை மாணவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கைகளை அடிக்கடி கழுவுதல், முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை, பெற்றோரின் ஒப்புதல் பெற்ற பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் ஆலோசனை பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


9-ம் வகுப்புமுதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம். அவ்வாறு வரும் மாணவர்கள் பெற்றோர் ஒப்புதல் பெற்ற பிறகே பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம். பள்ளியில் 6 அடி தனிமனித இடை

வெளியை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவவேண்டும். முக கவசம் அணிய வேண்டும். பிரார்த்தனை கூட்டம் விளையாட்டு, ஒன்று கூடுதல் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது.கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் இருந்து மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மன அழுத்தம் போக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும். என மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments