PUBG Game Banned
118 Mobile Apps Banned in India
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப கொள்கை விதிகளை மீறியதாக 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதில், டிக்டாக், ஷேர் இட், யூசி பிரௌசர், கேம் ஸ்கேனர், வீ சாட் உள்ளிட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய செயலிகளும் அடங்கும்.
ஏற்கெனவே 59 சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதையடுத்து, ஏற்கெனவே தடை செய்யப்பட்ட செயலிகளுடன் தொடர்புடைய மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பிரபல ஆன்லைன் விளையாட்டான பப்ஜி, வீ சாட், லூடோ, ஆப் லாக், கிளீனர்- போன் பூஸ்டர், எம்.வி.மாஸ்டர், ஆப் லாக் என மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவில் மேலும் 118 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் 18 கோடி பேர் பதிவிறக்கம் செய்து விளையாடி வந்த பப்ஜி மொபைல் கேம் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
PUBG Game Banned 118 Mobile Apps Banned in India
0 Comments