பாடத்திட்டம் குறைப்பு இந்த ஆண்டு மட்டும் நடைமுறைக்கு வரும்!
பாடத்திட்டம் குறைப்பு பணி நிறைவு பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டத்தை குறைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளதாகவும், குறைக்கப்பட்ட பாடம் தொடர்பான அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்ட குறைப்பு பணிகள் நிறைவுபெற்றுள்ளதாகவும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்கள் குறைப்பு பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதனைப்போன்று, திருத்தப்பட்ட பாடத்திட்டம் இந்த வருடத்திற்கு மட்டுமே என்றும், பொதுத்தேர்வில் பாடசுமையை குறைக்கும் பொருட்டு, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிப்பட்டுள்ளது.
தற்போது செப்டம்பர் மாதம் துவங்கியும், கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் முழுமையாக திறக்கப்படவில்லை. இனி பள்ளிகள் திறக்கப்பட்டாலும், பாடங்கள் முழுவதுமாக நடத்தினால் தேவையில்லாத மன உளைச்சலுக்கு மாணவர்கள் ஆளாவார்கள் என்ற காரணத்தால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments