Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

நீட் தேர்வுகான வழிகாட்டு நெறிமுறைகள்

நீட் தேர்வுகான வழிகாட்டு நெறிமுறைகள்

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

மருத்துவ படிப்புக்கான தகுதிகான் தேர்வான நீட், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. கொரோனா காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேர்வுக்கு வரும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் நீட் தேர்வுக்கு,மாணவர்கள் 3 மணி நேரத்துக்கு முன்பே வர தொடங்க வேண்டும். காலை 11 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு தலா 90 மாணவர்கள் வீதம் பரிசோதிக்கப்பட்டு தேர்வு மையத்திற்குள் அனுப்பப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வந்த பின் அங்கு தரப்படும் முகக் கவசத்தை அணிந்து கொள்ள வேண்டும்.

காய்ச்சல் உள்ளதா என பரிசோதிக்க உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தேர்வு எழுத வரும் மாணவர்கள் முழு கைச்சட்டை அணிந்து வரக் கூடாது,வெளியில் தெரியும் படியான பாட்டிலில் தான் தண்ணீர் எடுத்து வர வேண்டும்.

மாணவர்கள் படிவத்தில் கையெழுத்து போடும் முன் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்து கொள்ளவும், வின்னாத்தாள் கொடுக்கும் முன் தேர்வு கண்காணிப்பாளர் கைகளை சுத்தம் செய்யவும், தேர்வு முடிந்து அனைவரும் ஒரே நேரத்தில் வெளியே வரக் கூடாது, எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அனுமதிச் சீட்டில், கொரோனா நடைமுறைகளைப் பற்றி குறிக்கப்பட்டிருக்கும். தேர்வு அறைக்குள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கும் பொருட்கள் குறித்து அனுமதிச்சீட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக 11 மணி முதல் 11.30 மணிவரை, மாறுபட்ட ஸ்லாட் நேரப்படி மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். முழுக்கைச்சட்டை கொண்ட ஆடைகளை அணியக்கூடாது.ஷூக்கள் அணியக்கூடாது. ஸ்லிப்பர், சாண்டல்ஸ் போன்ற உயரம் குறைந்த செருப்பு வகைகள் அணியலாம்.

Post a Comment

0 Comments