அடுத்தடுத்து ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் ???
நீட் தேர்வு தொடங்கப்படுவதற்கு முந்தைய நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் நிலைமையின் தீவிரத்தை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்தடுத்து ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒரே நாளில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தேர்வு அச்சம் காரணமாக இன்று தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரியை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதன்பின் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழகத்தில் இந்த தற்கொலைகள் காரணம் மீண்டும் நீட் எதிர்ப்பு விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இந்த நிலையில் இந்த தற்கொலை தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ள இரங்கலில், நீட் தேர்வை எதிர்கொள்வதில் உள்ள அச்சம் காரணமாக நாமக்கல் நகரத்தைச் சேர்ந்த மோதிலால் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீட் அச்சம் காரணமாக ஒரே நாளில், அதுவும் நீட் தேர்வு தொடங்கப்படுவதற்கு முந்தைய நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் நிலைமையின் தீவிரத்தை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்; நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கப்பட வேண்டும், என்று தனது இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments