Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

AIRTEL NEW PLAN

ஏர்டெல் பயனர்களுக்கு அலெர்ட் இனிமே ரூ.100 க்கு 

1GB டேட்டா தான் வரும்! 


AIRTEL NEW PLAN 
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் நிறுவனம், முன்னதாக சில ப்ரீபெய்ட் திட்டங்களுடன் இலவச டேட்டா கூப்பன்களை வழங்குவதாக அறிவித்தது. அந்த சலுகையானது நிறுவனத்தின் பிற திட்டங்களான ரூ.289, ரூ.448 மற்றும் ரூ.599 க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 


இந்த மூன்று திட்டங்களும் சமீபத்தில் இலவச டேட்டா கூப்பன் சலுகையில் சேர்க்கப்பட்டுள்ளன, அதாவது வாடிக்கையாளர்கள் இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் ஏதேனும் ஒன்றை வாங்கும்போது, அவர்களுக்கு இலவச டேட்டா கூப்பன்கள் கிடைக்கும். 
AIRTEL NEW PLAN 
ஏர்டெல் பயனர்களுக்கு அலெர்ட்; இனிமே ரூ.100 க்கு 1GB டேட்டா தான் வரும்! 

இருப்பினும் இந்த கூப்பன்களுடன் ஒரு சிறிய சிக்கல் உள்ளது

அது அவற்றின் செல்லுபடியைப் பொருட்படுத்தாமல், அவை ரீடிம் செய்யப்பட்ட அதே நாளில் 11:59 மணிக்கு காலாவதியாகும். இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும். 

ஏர்டெல் ரூ.289, ரூ.448 மற்றும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டங்கள்:

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.289 ப்ரீபெய்ட் திட்டம் புதியதல்ல. இது ZEE5 பிரீமியம் சேவையின் OTT நன்மையுடன் தொகுக்கப்பட்டுள்ளது.மேலும் ZEE5 பிரீமியத்தின் நன்மையுடன் வரும் ஏர்டெல் திட்டமும் இதுதான். 
AIRTEL NEW PLAN 
இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் 28 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் இரண்டு 1 ஜிபி தரவு வவுச்சர்களைப் பெறுவார்கள். ஏர்டெல் ரூ.289 திட்டமும் 28 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும், மேலும் இது 1.5 ஜிபி அளவிலான தினசரி டேட்டாவையும், வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளையும் வழங்குகிறது. 

ஏர்டெல் ரூ.448 மற்றும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டங்களைப் பொறுத்தவரை, இவை ஏர்டெல்லின் புதிய திட்டங்களாகும் மற்றும் இவைகள் ஒரு வருடத்திற்க்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி நன்மையுடன் தொகுக்கப்படுகின்றன. 

ஏர்டெல் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் 28 நாட்கள் செல்லுபடியாகும் இரண்டு 1 ஜிபி டேட்டா வவுச்சர்கள் கிடைக்கும். ஏர்டெல் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டமும் 28 நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்குகிறது. உடன் வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் 3 ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது. 

கடைசியாக உள்ள ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டமும் ஒரு வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியின் நன்மையுடன் வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர் 1 ஜிபி அளவிலான நான்கு டேட்டா கூப்பன்களை 56 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் வருகிறது. 

ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டமும் 56 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. இது வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் தினமும் 2 ஜிபி அளவிலான தினசரி தரவை வழங்குகிறது. எந்தவொரு நாளிலும் வாடிக்கையாளர் தனது டேட்டா வவுச்சரை ரீடிம் செய்தால், அவர்கள் அதன் நன்மையை அதே நாளிலேயே பயன்படுத்த வேண்டும் என்பது மீண்டும் குறிப்பிடத்தக்கது. 

இதே போன்ற இலவச டேட்டா கூப்பன்களை வழங்கும் மற்ற ஏர்டெல் பிளான்களின் முழு லிஸ்ட்: 

ஏர்டெல் நிறுவனத்திடம் இதுபோன்ற இலவச டேட்டா வவுச்சர்களுடன் வரும் மற்ற திட்டங்களும் உள்ளன. அதில் 28 நாட்கள் செல்லுபடியாகும் இரண்டு 1 ஜிபி டேட்டா வவுச்சர்களுடன் வரும் திட்டங்களின் பட்டியல் இதோ: ஏர்டெல் ரூ.219, ரூ.249, ரூ.279, ரூ.289, ரூ.298, ரூ.349, ரூ.398, மற்றும் ரூ.448 ஆகியவைகள் ஆகும். 

ஏர்டெல் ரூ.129 & ரூ.199 ப்ரீபெய்ட் பிளான்கள்; இனி அனைவருக்கும் கிடைக்கும்! 

இதே போல 56 நாட்கள் செல்லுபடியாகும் நான்கு 1 ஜிபி வவுச்சர்களுடன் வரும் திட்டங்களின் பட்டியல் இதோ: ஏர்டெல் ரூ.399, ரூ.449, ரூ.558, மற்றும் ரூ.599 ஆகும். பின்னர் ஆறு 1 ஜிபி வவுச்சர்கள் மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களின் பட்டியல் இதோ: ஏர்டெல் ரூ.598 மற்றும் ரூ.698 ஆகும்.

Post a Comment

0 Comments