7.5% quota for govt
school students in MBBS
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாள் அவை இன்று நடைபெற்று வருகிறது. நாளையொடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில், இன்றைய நாள் முக்கிய தினமாக கருதப்படுகிறது. கேள்வி நேரத்துடன் இன்று தொடங்கிய கூட்டத்தொடரில், நீட் தேர்வு பற்றி விவாதம் எழுந்தது. நீட் தேர்வு தொடர்பான எதிர்க்கட்சி தலைவரின் கருத்துக்கு முதல்வர் பழனிசாமி தொடர்ந்து பதிலடி கொடுத்துக் கொண்டே வந்தார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முதல்வர், நீட் தேர்வால் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக தான் முழு காரணம் என ஆவேசத்துடன் கூறினார்.இதனைத்தொடர்ந்து, கொரோனாவால் ஏற்பட்ட செலவுகள் குறித்த நிதிநிலை அறிக்கையை துணை முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்தார். அதன் பின்னர், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவை முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்தார்.
7.5% quota for govt. school students in MBBS
மருத்துவம், பல், இந்திய மருத்துவம், ஓமியோபதி இளங்கலை படிப்புகளில் முன்னுரிமை தர உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு உள்ஒதுக்கீடு தரப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். இந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு செய்யும் மசோதா நிறைவேறியுள்ளது.
அதனடிப்படையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில், 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்க வகையில் செய்யும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
இந்த நிலையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஓமியோபதி உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க இந்த மசோத வழிவகை செய்கிறது.
0 Comments