நவம்பர் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பரவிய செய்தி குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
உலகம் முழுவதும் பள்ளிகள் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று கேள்விகள் மக்களிடையே எழுந்து வருகிறது. ஆனாலும் அவ்வப்போது இதுகுறித்த தவறான செய்திகள் மக்களிடையே பரவி வருகிறது. இதுபற்றி அமைச்சர் செங்கோட்டையன் ஒவ்வொரு முறை செய்தியாளர்களை சந்திக்கும் பொழுதும் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என கூறி வந்தார். இந்நிலையில் தற்பொழுது நவம்பர் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஒரு வதந்தி பரவி வருகிறது. இதுகுறித்து செங்கோட்டையன் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது, ஈரோடு மாவட்டம் கோபி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின், அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நவம்பர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் இன்னும் என் காதுகளுக்கு எட்டவில்லை என்றும் பரவிய வதந்தி பொய் என்றும் அவர் கூறியுள்ளார்.
0 Comments