10th Tamil Unit 2 Book back and Interior One Mark, Short Question & Answers, 10th Samacheer kalvi Tamil Book Back Question and answers, 10th tamil Solutions guide, Students can Download 10th Tamil Chapter 2 Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework, home test, home assignments, assignments and to score high marks in board exams.
கற்பவை கற்றபின்
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. செய்தி 1 : ஒவ்வோர் ஆண்டும் july 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.(july-15-2020)
செய்தி 2 : காற்றாலை மின்உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3 : காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.
அ) செய்தி 1 மட்டும் சரி
ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி
ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
Answer: ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
2. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.
i) கொண்டல் – 1. மேற்கு
ii) கோடை – 2. தெற்கு
iii) வாடை – 3. கிழக்கு
iv) தென்றல் – 4. வடக்கு
அ) 1, 2, 3, 4
ஆ) 3, 1, 4, 2
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 4, 1, 2
Answer: ஆ) 3, 1, 4, 2
கூடுதல் வினாக்கள்
1. தென்மேற்குப் பருவக்காற்று இந்தியாவிற்கு எத்தனை விழுக்காடு மழைப்பொழிவினைத் தருகிறது?
அ) ஐம்பது
ஆ) அறுபது
இ) எழுபது
ஈ) எண்ப து
Answer: இ) எழுபது
2. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு எப்பாடல்களைத் தாய்மொழியில் எழுதி வைத்துப் பாடுகிறார்கள்?
அ) திருமந்திரம், திருவாசகம்
ஆ) திருக்குறள், திருமந்திரம்
இ) திருவருட்பா, திருப்பாவை
ஈ) திருவெம்பாவை, திருப்பாவை
Answer: ஈ) திருவெம்பாவை, திருப்பாவை
3. பொருத்துக.
1. மூச்சு – அ) நீர்
2. தாகம் – ஆ) நிலம்
3. உறைவது – இ) காற்று
4. ஒளி – ஈ) கதிரவன்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.இ 2.ஆ 3.அ 4.ஈ
இ) 1.ஈ 2.இ 3.ஆ 4.அ
ஈ) 1.இ 2.அ 3.ஆ 4.ஈ
Answer: ஈ) 1.இ 2.அ 3.ஆ 4.ஈ
4. உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்?
அ) திருமூலர்
ஆ) அகத்தியர்
இ) வள்ளுவர்
ஈ) தொல்காப்பியர்
Answer: ஈ) தொல்காப்பியர்
5. “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” என்ற பாடலடியைப் பாடியவர்
அ) திருமூலர்
ஆ) ஔவையார்
இ) தொல்காப்பியர்
ஈ) கம்பர்
Answer: ஆ) ஒளவையார்
6. பொருத்துக.
1. மேற்கு – அ) வாடை
2. வடக்கு – ஆ) குடக்கு
3. தெற்கு – இ) குணக்கு
4. கிழக்கு – ஈ) தென்றல்
அ) 1.ஈ 2.இ 3.அ 4.ஆ
ஆ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.இ 2.ஈ 3.ஆ 4.அ
Answer: ஆ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
7. “முந்நீர்” என்பதன் பொருள்
அ) கடல்
ஆ) கப்பல்
இ) பயணம்
ஈ) நீர்
Answer: அ) கடல்
8. பொருந்தாத ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) வளி
ஆ) தென்றல்
இ) புயல்
ஈ) கடல்
Answer: ஈ) கடல்
9. “வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” எனக் கூறும் நூல் எது?
அ) தென்றல் விடு தூது
ஆ) சிலப்பதிகாரம்
இ) மணிமேகலை
ஈ) புறநானூறு
Answer: ஆ) சிலப்பதிகாரம்
10. பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது என்ற நூலின் ஆசிரியர்?
அ) இளங்கோவடிகள்
ஆ) ஔவையார்
இ) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
ஈ) திருமூலர்
Answer: இ) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
11. ‘வளிதொழில் ஆண்ட உரவோன்’ – எனக் குறிப்பிடப்படும் மன்னன்
அ) கரிகாலன்
ஆ) இராசராசன்
இ) இராசேந்திரன்
ஈ) பாழி
Answer: அ) கரிகாலன்
12. கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து பாடிய சங்ககாலப் பெண்புலவர்
அ) ஔவையார்
ஆ) ஆதிமந்தியார்
இ) அள்ளூர் நன்முல்லையார்
ஈ) வெண்ணிக் குயத்தியார்
Answer: ஈ) வெண்ணிக் குயத்தியார்
13. முசிறி துறைமுகத்துக்கு விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்த கிரேக்க மாலுமி
அ) ஹிப்பாலஸ்
ஆ) யுவான்சுவாங்க்
இ) பிளைனி
ஈ) தாலமி
Answer: அ) ஹிப்பாலஸ்
14. ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசும் பருவக்காற்று
அ) வடகிழக்குப் பருவக் காற்று
ஆ) தென்மேற்குப் பருவக் காற்று
இ) வடமேற்குப் பருவக் காற்று
ஈ) தென்கிழக்குப் பருவக் காற்று
Answer: ஆ) தென்மேற்குப் பருவக் காற்று
15. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வீசும் பருவக்காற்று
அ) வடகிழக்குப் பருவக் காற்று
ஆ) தென்மேற்குப் பருவக் காற்று
இ) வடமேற்குப் பருவக் காற்று
ஈ) தென்கிழக்குப் பருவக் காற்று
Answer: அ) வடகிழக்குப் பருவக் காற்று
16. உலகக் காற்றாலை உற்பத்தியில் ஐந்தாம் இடம் பெற்றுள்ள நாடு
அ) இந்தியா
ஆ) அமெரிக்கா
இ) சீனா
ஈ) ஜப்பான்
Answer: அ) இந்தியா
17. இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்
அ) குஜராத்
ஆ) கேரளா
இ) தமிழ்நாடு
ஈ) ஆந்திரா
Answer: இ) தமிழ்நாடு
18. உலகிலேயே அதிக அளவு மாசுபடுத்தும் நாடுகளில் இரண்டாமிடம் பெற்றுள்ள நாடு
அ) சீனா
ஆ) அரேபியா
இ) இந்தியா
ஈ) ஜப்பான்
Answer: இ) இந்தியா
19. இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணிகளில் ஐந்தாமிடம் பெறுவது
அ) காற்று மாசு
ஆ) நீர் மாசு
இ) நில மாசு
ஈ) ஒலி மாசு
Answer: அ) காற்று மாசு
20. உலகக் காற்று நாள்
அ) ஜூன் 15
ஆ) ஜூலை 15
இ) ஜனவரி 15
ஈ) டிசம்பர் 10
Answer: அ) ஜூன் 15
21. ‘யுனிசெப்’ என்பது
அ) பருவநிலை மாறுபாடு
ஆ) சிறுவர் நிதியம்
இ) உலக சுகாதார நிறுவனம்
ஈ) உலக வங்கி நிறுவனம்
Answer: ஆ) சிறுவர் நிதியம்
22. “பூங்காற்றே! இத்தனை நாள் உனைப் பாடாதிருந்துவிட்டேன்” என்று வருந்திய கவிஞர்
அ) தனிநாயக அடிகள்
ஆ) தேவகோட்டை வா.மூர்த்தி
இ) இளங்குமரனார்
ஈ) பாரதியார்
Answer: ஆ) தேவகோட்டை வா.மூர்த்தி
23. உயிரின வாழ்வின் அடிப்படை
அ) இயற்கை
ஆ) செயற்கை
இ) மனிதன்
ஈ) மரங்கள்
Answer: அ) இயற்கை
24. தொல்காப்பியர், உலகம் என்பது எதனால் ஆனது என்கிறார்?
அ) கடவுளால்
ஆ) மனிதனால்
இ) ஐம்பெரும் பூதங்களால்
ஈ) இன்பதுன்பங்களால்
Answer: இ) ஐம்பெரும் பூதங்களால்
25. மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் யார்? கூறப்பட்ட நூல் எது?
அ) மாணிக்கவாசகர், திருவாசகம்
ஆ) திருமூலர், திருமந்திரம்
இ) திருநாவுக்கரசர், தேவாரம்
ஈ) ஔவையார், ஆத்திச்சூடி
Answer: ஆ) திருமூலர், திருமந்திரம்
26. ‘வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்’ – என்று உரைத்தவர் யார்?
அ) ஔவையார்
ஆ) இளங்கோவடிகள்
இ) பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்
ஈ) குமரகுருபரர்
Answer: ஆ) இளங்கோவடிகள்
27. தென்றல் காற்று என அழைக்கப்படக் காரணம்
அ) மரம், செடி, கொடி, ஆறு, மலை தாண்டி வருவது
ஆ) வேகமாக வீசுவது
இ) சுழன்று வீசுவது
ஈ) மணற்பகுதியிலிருந்து வீசுவது
Answer: அ) மரம், செடி, கொடி, ஆறு, மலை தாண்டி வருவது
28. ‘நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே’ – என்று பெண்ணொருத்தி, தூது செல்ல காற்றினை அழைத்ததாகப் பாடியவர்
அ) ஔவையார்
ஆ) இளங்கோவடிகள்
இ) பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்
ஈ) குமரகுருபரர்
Answer: இ) பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்
29. “நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே” – என்ற பாடலை இயற்றியவர்
அ) வாலி
ஆ) கண்ண தாசன்
இ) வைரமுத்து
ஈ) மீரா
Answer: ஆ) கண்ண தாசன்
30. நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களிஇயல் யானைக் கரிகால் வளவ!” – என்று பழங்காலத்தில் கடல் கடந்த பயணங்கள் அனைத்தும் காற்றினால் இயக்கப்பட்ட பாய்மரக் கப்பல்களால்தான் நிகழ்ந்தன என்று குறிப்பிடும் நூல்
அ) புறநானூறு
ஆ) அகநானூறு
இ) பரிபாடல்
ஈ) கலித்தொகை
Answer: அ) புறநானூறு
31. ஹிப்பாலஸ் என்பவர்
அ) கிரேக்க மாலுமி
ஆ) போர்ச்சுக்கீசிய மாலுமி
இ) பிரெஞ்சு மருத்துவர்
ஈ) ஆங்கில ஆளுநர்
Answer: அ) கிரேக்க மாலுமி
32. பருவக் காற்றின் உதவியினால் முசிறித் துறைமுகத்திற்கு நேரே நடுக்கடல் வழியாக விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தவர்
அ) வாஸ்கோடகாமா
ஆ) ஹிப்பாலஸ்
இ) பார்த்தலோமியோ டயஸ்
ஈ) டெமாஸ்தனிஸ்
Answer: ஆ) ஹிப்பாலஸ்
33. ஹிப்பாலஸ் பருவக்காற்று என்று பெயரிட்டவர்கள்
அ) யவனர்
ஆ) சீனர்
இ) ஆங்கிலேயர்
ஈ) அமெரிக்கர்
Answer: அ) யவனர்
34. ஹிப்பாலஸ் பருவக்காற்று கண்டுபிடிக்கப்பட்ட நூற்றாண்டு
அ) கி.பி. முதல் நூற்றாண்டு
ஆ) கி.மு. முதல் நூற்றாண்டு
இ) கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
ஈ) கி.மு. இரண்டாம் நூற்றாண்டு
Answer: அ) கி.பி. முதல் நூற்றாண்டு
35. வெண்ணிக்குயத்தியார் என்பவர்
அ) சங்ககாலப் பெண் புலவர்
ஆ) காப்பிய நாயகி
இ) பாண்டிமாதேவி
ஈ) இடைக்காலப் பெண் புலவர்
Answer: அ) சங்ககாலப் பெண் புலவர்
36. “களிஇயல் யானைக் கரிகால் வளவ!” என்று பாடியவர்
அ) காக்கைப் பாடினியார்
ஆ) வெண்ணிக்குயத்தியார்
இ) வெள்ளிவீதியார்
ஈ) நப்பசலையார்
Answer: ஆ) வெண்ணிக்குயத்தியார்
37. வெண்ணிக்குயத்தியார் கரிகால் வளவனைப் புகழ்ந்து பாடும் பாடலில் ‘வளி’ எனக் குறிப்பிடப்படுவது
அ) வலிமை
ஆ) காற்று
இ) விரைவு
ஈ) வறுமை
Answer: ஆ) காற்று
38. பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்திய கிரேக்க அறிஞர்
அ) டெமாஸ்தனிஸ்
ஆ) ஹிப்பாலஸ்
இ) பெர்னாட்ஷா
ஈ) சாக்ரடீஸ்
Answer: ஆ) ஹிப்பாலஸ்
39. ஹிப்பாலஸ் பருவக்காற்றின் பயனைக் கண்டறியும் முன்னரே காற்றின் ஆற்றலைப் பயன்படுத்தி கடல் வணிகத்தில் வெற்றி கண்டவர்கள்
அ) வட இந்தியர்கள்
ஆ) ஆப்பிரிக்கர்கள்
இ) தமிழர்கள்
ஈ) ஐரோப்பியர்கள்
Answer: இ) தமிழர்கள்
40. இந்தியாவின் முதுகெலும்பு
அ) நெசவு
ஆ) வேளாண்மை
இ) கட்டிடத்தொழில்
ஈ) பேரளவு ஊற்பத்தி
Answer: ஆ) வேளாண்மை
41. காற்று தாழ்வு மண்டலமாய்த் தவழ்ந்து புயலாய் மாறும் காலம்
அ) தென்மேற்குப் பருவக்காலம்
ஆ) தென்கிழக்குப் பருவக்காலம்
இ) வடமேற்குப் பருவக்காலம்
ஈ) வடகிழக்குப் பருவக்காலம்
Answer: ஈ) வடகிழக்குப் பருவக்காலம்
42. ‘வளிமிகின் வலி இல்லை ‘ என்று பாடியவர் யார்? நூல் எது?
அ) புறநானூறு, ஐயூர் முடவனார்
ஆ) ஆத்திச்சூடி, ஔவையார்
இ) கலித்தொகை, நல்லந்துவனார்
ஈ) புறநானூறு, இளநாகனார்
Answer: அ) புறநானூறு, ஐயூர் முடவனார்
43. கடுங்காற்று, மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று கூறும் நூல் எது? கூறியவர் யார்?
அ) புறநானூறு, ஐயூர் முடவனார்
ஆ) ஆத்திச்சூடி, ஒளவையார்
இ) கலித்தொகை, நல்லந்துவனார்
ஈ) புறநானூறு, மதுரை இளநாகனார்
Answer: ஈ) புறநானூறு, மதுரை இளநாகனார்
44. புறஊதாக் கதிர்களைத் தடுக்கும் அரண்
அ) ஓசோன் படலம்
ஆ) எரிகற்கள்
இ) விடிவெள்ளி
ஈ) காடு
Answer: அ) ஓசோன் படலம்
45. குளிர்பதனப்பெட்டி வெளியிடும் நச்சுக்காற்று
அ) கார்பன்-டை-ஆக்சைடு
ஆ) குளோரோ புளோரோ கார்பன்
இ) ஆக்சிஜன்
ஈ) ஹைட்ரோ கார்பன்
Answer: ஆ) குளோரோ புளோரோ கார்பன
46. குளோரோ புளோரோ கார்பன் வாயிலாக உருவாகும் பாதிப்புகளைக் குறைக்கும் விதமாகப் பயன்படுத்தப்படும் குளிர்பதனி
அ) ஹைட்ரோ கார்பன்
ஆ) கார்பன் மோனாக்சைடு
இ) நைட்ரஜன்
ஈ) ஹைட்ரஜன்
Answer: அ) ஹைட்ரோ கார்பன்
47. கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை மழை பெய்யும் போது நீரில் கரைந்து விடுவதால் பெய்வது
அ) அமில மழை
ஆ) கல் மழை
இ) கன மழை
ஈ) மிதமான மழை
Answer: அ) அமில மழை
48. அமில மழையால் துன்பத்திற்கு உள்ளாகுபவை
i) மண்
ii) நீர்
iii) கட்டடங்கள்
iv) காடுகள்
v) நீர்வாழ் உயிரினங்கள்
அ) i, ii – சரி
ஆ) ili, iv – சரி
இ) iv, v – சரி
ஈ) ஐந்தும் சரி
Answer: ஈ) ஐந்தும் சரி
49. குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு, ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்து விடும்.
அ) ஓராயிரம்
ஆ) ஈராயிரம்
இ) ஒரு இலட்சம்
ஈ) ஒரு கோடி
Answer: இ) ஒரு இலட்சம்
50. ஒரு மணித்துளிக்கு 12 முதல் 18 முறை மூச்சுக்காற்றாய் நாம் வெளியிடுவது
அ) ஆக்சிஜன்
ஆ) நைட்ரஜன்
இ) கார்பன்-டை-ஆக்சைடு
ஈ) ஹைட்ரஜன்
Answer: இ) கார்பன்-டை-ஆக்சைடு
51. மரங்கள் நம் நுரையீரலுக்குத் தேவையான எதைத் தருகிறது?
அ) உயிர் வளி (ஆக்சிஜன்)
ஆ) கார்பன்-டை-ஆக்சைடு
இ) நைட்ரஜன்
ஈ) ஹைட்ரஜன்
Answer: அ) உயிர் வளி (ஆக்சிஜன்)
52. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை பாடல்களைத் தாய்மொழியில் எழுதி வைத்துப் பாடுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளவர் அ) மறைமலையடிகள்
ஆ) தனிநாயக அடிகள்
இ) ஞானியாரடிகள்
ஈ) அமுதன் அடிகள்
Answer: ஆ) தனிநாயக அடிகள்
53. இயற்கையின் கூறுகளில் எதின் பங்கு கூடுதலானது?
அ) நிலத்தின்
ஆ) நீரின்
இ) நெருப்பின்
ஈ) காற்றின்
Answer: ஈ) காற்றின்
54. கேட்கிறதா என் குரல் – என்னும் பாடப்பகுதி யாருடைய குரலாக எதிரொலிக்கிறது?
அ) நிலம்
ஆ) நீர்
இ) காற்று
ஈ) வானம்
Answer: இ) காற்று
55. தாஜ்மகால் கட்டப்பட்ட நூற்றாண்டு
அ) கி.பி. 16
ஆ) கி.பி. 17
இ) கி.பி. 15
ஈ) கி.பி. 18
Answer: ஆ) கி.பி. 17
காற்றே வா!
பலவுள் தெரிக
1. “உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்”
– பாரதியின் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை?
அ) உருவகம், எதுகை
ஆ) மோனை, எதுகை
இ) முரண், இயைபு
ஈ) உவமை, எதுகை
Answer: ஆ) மோனை, எதுகை
பலவுள் தெரிக
1. கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாத இணையைக் கண்டுபிடி.
அ) மயலுறுத்து – மயங்கச்செய்
ஆ)ப்ராண – ரஸம் – உயிர்வளி
இ) லயத்துடன் – சீராக
ஈ) வாசனை மனம்
Answer: ஈ) வாசனை – மனம்
2. பொருத்திக் காட்டுக.
i) பாஞ்சாலி சபதம் – 1. குழந்தைகளுக்கான நீதிப்பாடல்
ii) சுதேசமித்திரன் – 2. பாராட்டப்பெற்றவர்
iii) புதிய ஆத்திசூடி – 3. இதழ்
iv) சிந்துக்குத் தந்தை – 4. காவியம்
அ) 3, 4, 2, 1
ஆ) 1, 2, 3, 4
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 4, 1, 3
Answer: இ) 4, 3, 1, 2
3. ‘‘நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா’ என்று பாராட்டப்பட்டவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer: அ) பாரதியார்
4. ‘சிந்துக்குத் தந்தை’ என்று பாராட்டப்பட்டவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer: அ) பாரதியார்
5. கேலிச் சித்திரம், கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer: அ) பாரதியார்
6. பாட்டுக்கொரு புலவன் என்று பாராட்டப்பெறுபவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer: அ) பாரதியார்
7. ‘காற்று’ என்னும் தலைப்பில் வசன கவிதை எழுதியவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer: பாரதியார்
8. “காற்றே , வா மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா” – என்று பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer: அ) பாரதியார்
9. ப்ராண-ரஸம் என்ற சொல் உணர்த்தும் பொருள்
அ) சீராக
ஆ) அழகு
இ) உயிர்வளி
ஈ) உடல்உயிர்
Answer: இ) உயிர்வளி
10. வசன கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்
அ) பாரதிதாசன்
ஆ) வல்லிக்கண்ணன்
இ) பிச்சமூர்த்தி
ஈ) பாரதியார்
Answer: ஈ) பாரதியார்
11. ‘காற்றே வா’ என்னும் கவிதையின் ஆசிரியர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) வாணிதாசன்
Answer: அ) பாரதியார்
12. காற்று எதைச் சுமந்து கொண்டு வர வேண்டுமென்று பாரதி அழைக்கிறார்?
அ) கவிதையை
ஆ) மகரந்தத்தூளை
இ) விடுதலையை
ஈ) மழையை
Answer: ஆ) மகரந்தத்தூளை
13. பொருத்திக் காட்டுக:
i) மயலுறுத்து – 1. மயங்கச் செய்
ii) ப்ராண – ரஸம் – 2. உயிர்வளி
iii) லயத்துடன் – 3. மணம்
iv) வாசனை – 4. சீராக
அ) 1, 2, 4, 3
ஆ) 2, 3, 1, 4
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 1, 3, 4
Answer: அ) 1, 2, 4, 3
14. ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும் வடிவத்தைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) வாணிதாசன்
ஈ) கண்ண தாசன்
Answer: ஆ) பாரதியார்
15. புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணம்
அ) பாரதியின் வசன கவிதை
ஆ) ஜப்பானியரின் ஹைக்கூ
இ) வீரமாமுனிவரின் உரைநடை
ஈ) கம்பரின் கவிநயம்
Answer: அ) பாரதியின் வசன கவிதை
16. பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள்
i) இந்தியா
ii) சுதேசமித்திரன்
iii) எழுத்து
iv) கணையாழி
அ) i, ii – சரி
ஆ) முதல் மூன்றும் சரி
இ) நான்கும் சரி
ஈ) i, ii – தவறு
Answer: அ) i, ii – சரி
17. பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது பாயுது பாயுது – தாம்தரிகிட என்ற இயற்கையொலிகளை உணர்வுடன் வெளிப்படுத்தும் பாடல்களைப் பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) வாணிதாசன்
Answer: அ) பாரதியார்
18. ‘இனிய வாசனையுடன் வா’ என்று பாரதி அழைத்தது
அ) காற்று
ஆ) மேகம்
இ) குழந்தை
ஈ) அருவி
Answer: அ) காற்று
19. பாரதியார் காற்றை ‘மயலுறுத்து’ அழைப்பதைக் குறிக்கும் சொற்றொடர்
அ) மணம் வீசும் காற்றாய் நீ வா
ஆ) மனதை மயங்கச் செய்யும் மணத்தோடு வா
இ) மயிலாடும் காற்றாய் நீ வா
ஈ) மகரந்தம் சுமந்து கொண்டு நீ வா
Answer: ஆ) மனதை மயங்கச் செய்யும் மணத்தோடு வா
புயலிலே ஒரு தோணி
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. புயலிலே ஒரு தோணி என்பது
அ) சிறுகதை
ஆ) புதினம்
இ) காப்பியம்
ஈ) கவிதை
Answer: ஆ) புதினம்
2. ‘புயலிலே ஒரு தோணி’ என்னும் புதினத்தின் ஆசிரியர்
அ) ப. சிங்காரம்
ஆ) மு.வ.
இ) திரு.வி.க.
ஈ) அகிலன்
Answer: அ) ப. சிங்காரம்
3. வடஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை தொடங்கப்பட்ட ஆண்டு
அ) 2004
ஆ) 2000
இ) 1999
ஈ) 1940
Answer: ஆ) 2000
4. இலங்கை தந்த புயலின் பெயர்
அ) அக்னி
ஆ) ஆகாஷ்
இ) கஜா
ஈ) ஜல்
Answer: இ) கஜா
5. ‘கப்பித்தான்’ என்பது எதைக் குறிக்கிறது?
அ) தலைமை மாலுமி
ஆ) கப்பல்
இ) புயல்
ஈ) பயணி
Answer: அ) தலைமை மாலுமி
6. ‘தொங்கான்’ என்பது எதைக் குறிக்கிறது?
அ) தலைமை மாலுமி
ஆ) கப்ப ல்
இ) புயல்
ஈ) பயணி
Answer: ஆ) கப்பல்
7. புலம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றிய முதல் புதினம்
அ) புயலிலே ஒரு தோணி
ஆ) தோணி வருகிறது
இ) கள்ளத் தோணி
ஈ) அகல்விளக்கு
Answer: அ) புயலிலே ஒரு தோணி
8. தென்கிழக்காசியப் போர் மூண்டதில் மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு
அ) ஆறாம் திணை
ஆ) புயலிலே ஒரு தோணி
இ) பால் மரக்காட்டினிலே
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer: ஆ) புயலிலே ஒரு தோணி
9. புயலிலே ஒரு தோணி என்னும் புதினத்தின் என்னும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதி பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அ) காவியக்கூத்து
ஆ) கலைக்கூத்து
இ) கடற்கூத்து
ஈ) இசைக்கூத்து
Answer: இ) கடற்கூத்து
10. பா. சிங்காரத்தின் ஊர் – மாவட்டம்)
அ) சிங்கம்புணரி, சிவகங்கை
ஆ) உறையூர், திருச்சி
இ) மேட்டுப்புதூர், ஈரோடு
ஈ) தென்காசி, திருநெல்வேலி
Answer: அ) சிங்கம்புணரி, சிவகங்கை
11. ப. சிங்காரம்
இந்தோனேசியா சென்றார்.
அ) வேலைக்காக
ஆ) தூதராக
இ) ஆய்வாளராக
ஈ) அகதியாக
Answer: அ) வேலைக்காக
12. ப. சிங்காரம் பணியாற்றிய இதழ்
அ) தினகரன்
ஆ) தினமணி
இ) தினத்தந்தி
ஈ) தினபூமி
Answer: இ) தினத்தந்தி
13. ப. சிங்காரத்தின் சேமிப்பான இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார்.
அ) ஏழரை
ஆ) ஆறரை
இ) நான்கரை
ஈ) பத்து
Answer: அ) ஏழரை
14. ‘பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி’ என்று குறிப்பிடும் நூல்
அ) புறநானூறு
ஆ) அகநானூறு
இ) கலித்தொகை
ஈ) நாலடியார்
Answer: ஆ) அகநானூறு
15. கொல்லிமலை அமைந்துள்ள மாவட்டம்
அ) தர்மபுரி
ஆ) சேலம்
இ) நாமக்கல்
ஈ) திண்டுக்கல்
Answer: இ) நாமக்கல்
16. புதுதில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலம் சிறப்பு வானிலை ஆய்வுமையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
அ) 62
ஆ) 64
இ) 60
ஈ) 54
Answer: ஆ) 64
17. ‘பெய்ட்டி ‘ புயலின் பெயரைத் தந்த நாடு
அ) இந்தியா
ஆ) இலங்கை
இ) ஓமன்
ஈ) தாய்லாந்து
Answer: ஈ) தாய்லாந்து
18. புயலுக்கு இந்தியா தந்துள்ள பெயர்களில் நான்கு பூதங்களைக் கண்டறி.
அ) அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல்
ஆ) மேக், அக்னி, ஜல்
இ) மேக், சாகர், வாயு, ஆகாஷ்
ஈ) பிஜ்லி, அக்னி, மேக், கஜா
Answer: அ) அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல்
19. வானிலை ஆய்வாளர்கள், பொதுமக்கள், கடல் மாலுமிகள் ஆகியோர்க்கு வானிலை எச்சரிக்கையைப் புரிந்து கொண்டு செயல்படக் கொடுக்கப்படுவது
அ) புயலின் பெயர்கள்
ஆ) கலங்கரை விளக்கம்
இ) நிவாரண உதவி
ஈ) திசைகாட்டும் கருவி
Answer: அ) புயலின் பெயர்கள்
20. நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்காசிய நாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறினர்.
அ) பதினெட்டாம்
ஆ) பத்தொன்பதாம்
இ) பதினாறாம்
ஈ) பதினேழாம்
Answer: ஆ) பத்தொன்பதாம்
21. ப. சிங்காரம் இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த போது இருந்த இடம்
அ) இந்தோனேசியா, மெபின் நகர்
ஆ) இலங்கை, யாழ்ப்பாணம்
இ) மலேசியா, கோலாலம்பூர்
ஈ) சீனா, பெய்ஜிங்
Answer: அ) இந்தோனேசியா, மெபின் நகர்
22. பொருத்திக் காட்டுக.
i) கப்பித்தான் – 1. இந்தோனேசியாவிலுள்ள இடம்
ii) தொங்கான் – 2. மீன் வகை
iii) அவுலியா – 3. கப்பல்
iv) பிலவான் – 4. தலைமை மாலுமி (கேப்டன்)
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 2, 1, 3, 4
ஈ) 3, 4, 2, 1
Answer: அ) 4, 3, 2, 1
23. “ஓடி வாருங்கள்! இங்கே ஓடி வாருங்கள்! லெக்காஸ், லெக்காஸ்! என்று கத்தியவன்
அ) பாண்டியன்
ஆ) கப்பித்தான்
இ) ஜப்பானிய அதிகாரி
ஈ) குஸ்டாவ்
Answer: ஆ) கப்பித்தான்
24. ‘தமிரோ’ என்று உறுமியவர்
அ) மாலுமி
ஆ) ஜப்பானிய அதிகாரி
இ) சீன அதிகாரி
ஈ) பாண்டியன்
Answer: ஆ) ஜப்பானிய அதிகாரி
25. வானிலை மாற்றத்தைக் கண்டு எழுந்து போய்ப் பார்த்தவன்
அ) மாலுமி
ஆ) பாண்டியன்
இ) கப்பித்தான்
ஈ) சேரன்
Answer:
ஆ) பாண்டியன்
தொகைநிலைத் தொடர்கள்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1. தொகை நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer: ஈ) ஆறு
Question 2. கீழ்க்காணும் சொற்களில் உம்மைத்தொகை அல்லாத சொல் எது?
அ) தேர்ப்பாகன்
ஆ) அண்ண ன் தம்பி
இ) வெற்றிலை பாக்கு
ஈ) இரவு பகல்
Answer: அ) தேர்ப்பாகன்
Question 3. ‘மதுரை சென்றார்’ – இத்தொடரில் அமைந்துள்ள வேற்றுமைத்தொகை எவ்வகை வேற்றுமைத் தொகைக்குப் பொருந்தும்?
அ) மூன்றாம் வேற்றுமைத் தொகை
ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை
இ) ஐந்தாம் வேற்றுமைத் தொகை
ஈ) ஆறாம் வேற்றுமைத் தொகை
Answer: ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை
Question 4.பொருத்துக. 1. மதுரை சென்றார் – அ) வினைத்தொகை
2. வீசு தென்றல் – ஆ) பண்புத்தொகை
3. செங்காந்தள் – இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
4. மார்கழித் திங்கள் – ஈ) நான்காம் வேற்றுமைத் தொகை
அ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
ஆ) 1.ஈ 2.இ 3.ஆ 4.அ
இ) 1.ஈ 2.ஆ 3.அ 4.இ
ஈ) 1.ஈ 2.இ 3.அ 4.ஆ
Answer: அ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
Question 5. பொருத்துக.
1. உவமைத்தொகை – அ) முறுக்கு மீசை வைத்தார்
2. உம்மைத்தொகை – ஆ) மலர்க்கை
3. அன்மொழித்தொகை – இ) வட்டத்தொட்டி
4. பண்புத்தொகை – ஈ) அண்ணன் தம்பி
அ) 1.ஆ 2.ஈ. 3.அ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.இ 3.அ 4.ஈ
ஈ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ
Answer: அ) 1.ஆ 2.ஈ 3.அ 4.இ
Question 6. பண்புத்தொகை அல்லாத ஒன்று அ) செங்காந்தள்
ஆ) வட்டத்தொட்டி
இ) இன்மொழி
ஈ) கொல்களிறு
Answer: ஈ) கொல்களிறு
Question 7. காலம் கரந்த பெயரெச்சம்
அ) வினைத்தொகை
ஆ) பண்புத்தொகை
இ) உவமைத்தொகை
ஈ) உம்மைத்தொகை
Answer: அ) வினைத்தொகை
Question 8. வேற்றுமையுருபு அல்லாதது
அ) ஐ, ஒடு
ஆ) கு, இன்
இ) ஆகிய, ஆன
ஈ) அது, கண்
Answer: இ) ஆகிய, ஆன
Question 9. பொருந்தாத இணையைக் கண்டறிக
அ) வினைத்தொகை – தேர்ப்பாகன்
ஆ) பண்புத்தொகை – இன்மொழி
இ) உம்மைத்தொகை – தாய் சேய்
ஈ) அன்மொழித்தொகை – சிவப்புச்சட்டை பேசினார்
Answer: அ) வினைத்தொகை – தேர்ப்பாகன்
Question 10. ‘மலர் போன்ற கை’ இதில் ‘மலர்’ என்பது ………………….. ‘போன்ற’ என்பது ……………… ‘கை’ என்பது…………………..
அ) உவம உருபு – உவமை – உவமேயம்
ஆ) உவமை – உவம உருபு – உவமேயம்
இ) உவமேயம் – உவமை – உவம உருபு
ஈ) இவற்றுள் ஏதுமில்லை
Answer: ஆ) உவமை – உவம உருபு – உவமேயம்
Question 11. சிறப்புப் பெயர், பொதுப்பெயர் ஆகியன வரும் தொகைச்சொல்
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
ஈ) உம்மைத்தொகை
Answer: இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
Question 12. மார்கழித் திங்கள், சாரைப்பாம்பு ஆகிய சொற்களில் இடம்பெறும் பொதுப்பெயர்கள் எவை?
அ) மார்கழி, சாரை
ஆ) திங்கள், பாம்பு
இ) மார்கழி, பாம்பு
ஈ) திங்கள், சாரை
Answer: ஆ) திங்கள், பாம்பு
Question 13. ‘செங்காந்தள்’ – இப்பண்புத்தொகைச் சொல்லில் மறைந்து வரும் உருபு
அ) ஆன
ஆ) ஆகிய
இ) போன்ற
ஈ) ஐ
Answer: ஆ) ஆகிய
Question 14. ‘இன்மொழி’ – இப்பண்புத்தொகைச் சொல்லில் மறைந்து வரும் உருபு
அ) ஆன
ஆ) ஆகிய
இ) போன்ற
ஈ) இன்
Answer: அ) ஆன
Question 15. ‘மதுரை சென்றாள்’ – இவ்வேற்றுமைத்தொகைச் சொல்லில் இடம்பெறும் வேற்றுமை உருபு
அ) கு
ஆ) கண்
இ) ஆல்
ஈ) அது
Answer: அ) கு
Question 16. கரும்பு தின்றான் – இத்தொடர் …………………………….. வேற்றுமைத்தொடர்.
அ) இரண்டாம்
ஆ) மூன்றாம்
இ) நான்காம்
ஈ) ஆறாம்
Answer: அ) இரண்டாம்
Question 17. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்கான சொல்
அ) தேர்ப்பாகன்
ஆ) தமிழ்த்தொண்டு
இ) கரும்பு தின்றான்
ஈ) மதுரை சென்றார்
Answer: ஆ) தமிழ்த்தொண்டு
Question 18. பொருத்திக் காட்டுக.
i) வீசு தென்றல் – 1. உம்மைத் தொகை
ii) செங்காந்தள் – 2. உவமைத்தொகை
iii) மலர்க்கை – 3. பண்புத்தொகை
iv) தாய்சேய் – 4. வினைத்தொகை
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 2, 3, 4, 1
Answer: அ) 4, 3, 2, 1
Question 19. இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கான சொல்
அ) மலர்க்கை
ஆ) அண்ண ன் தம்பி
இ) மார்கழித்திங்கள்
ஈ) தேர்ப்பாகன்
Answer: இ) மார்கழித்திங்கள்
Question 20. பொருத்துக.
i) இன்மொழி – 1. உவமைத்தொகை
ii) தாய்சேய் – 2. வினைத்தொகை
iii) முத்துப்பல் – 3. உம்மைத் தொகை
iv) வருபுனல் – 4. பண்புத்தொகை
அ) 1, 2, 3, 4
ஆ) 3, 4, 2, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 4, 3, 1, 2
Answer: ஈ) 4, 3, 1, 2
Question 21. சிவப்புச்சட்டை பேசினார் – அடிக்கோடிட்ட சொல்லுக்கான தொகையின் வகை எது?
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை
ஈ) உம்மைத்தொகை
Answer: அ) பண்புத்தொகை
முல்லைப்பாட்டு
பலவுள் தெரிக
1. ‘பாடுஇமிழ் பனிக்கடல் பருகி’ என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல்
ஆ) கடல்நீர் குளிர்ச்சி அடைதல்
இ) கடல்நீர் ஒலித்தல்
ஈ) கடல்நீர் கொந்தளித்தல்
Answer: அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல்
1. முல்லைப்பாட்டின் மொத்த அடிகள் எத்தனை?
அ) 101
ஆ) 102
இ) 103
ஈ) 104
Answer: இ) 103
2. முல்லைப்பாட்டு எந்த நூல் வகையைச் சார்ந்தது?
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) கீழ்க்க ணக்கு
ஈ) சிற்றிலக்கியம்
Answer: ஆ) பத்துப்பாட்டு
3. முல்லைத் திணைக்குரிய பூ வகை
அ) காந்தள்
ஆ) பிடவம்
இ) தாழை
ஈ) பாதிரி
Answer: ஆ) பிடவம்
4. முல்லைப்பாட்டு எந்தக் கணக்கு நூல்களுள் ஒன்று?
அ) பதினெண்மேல் கணக்கு
ஆ) பதினெண்கீழ்க்கணக்கு
இ) சிற்றிலக்கியம்
ஈ) காப்பியம்
Answer: அ) பதினெண்மேல் கணக்கு
5. பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடிகளைக் கொண்ட நூல்
அ) குறிஞ்சிப்பாட்டு
ஆ) முல்லைப்பாட்டு
இ) பட்டினப்பாலை
ஈ) திருமுருகாற்றுப்படை
Answer: ஆ) முல்லைப்பாட்டு
6. பொருத்துக.
1. நேமி – அ) மலை
2. கோடு – ஆ) வலம்புரி சங்கு (சக்கரத்துடன் கூடிய)
3. விரிச்சி – இ) தோள்
4. சுவல் – ஈ) நற்சொல்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
இ) 1.ஈ 2.ஆ 3.இ 4.அ
ஈ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ
Answer: அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
7. வலம்புரிச் சங்கு பொறித்த கைகளையுடையவர்
அ) முருகன்
ஆ) திருமால்
இ) மாவலி மன்னன்
ஈ) நான்முகன்
Answer: ஆ) திருமால்
8. குறுகிய வடிவம் கொண்டு நீர்வார்த்துத் தந்தவன்
அ) முருகன்
ஆ) திருமால்
இ) மாவலிமன்னன்
ஈ) நான்முகன்
Answer: இ) மாவலிமன்னன்
9. மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து நின்றவர்
அ) முருகன்
ஆ) திருமால்
இ) மாவலிமன்னன்
ஈ) நான்முகன்
Answer: ஆ) திருமால்
10. “கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி”
– இவ்வடிகளில் ‘மேகம்’ என்னும் பொருள்தரும் சொல்
அ) கோடு
ஆ) செலவு
இ) எழிலி
ஈ) கொடு
Answer: இ) எழிலி
11. “கொடுங்கோற் கோவலர்” – இதில் குறிப்பிடப்படும் கோவலர் யார்?
அ) கோவலன்
ஆ) குறவர்
இ) உழவர்
ஈ) இடையர்
Answer: ஈ) இடையர்
12. முல்லைப்பாட்டு என்னும் நூலை இயற்றியவர்
அ) கபிலர்
ஆ) மாங்குடிமதேனார்
இ) நப்பூதனார்
ஈ) நக்கீரர்
Answer: இ) நப்பூதனார்
13. மழையின் சீற்றம் இயல்பு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் படம் பிடித்துக் காட்டுவது எது?
அ) சங்க இலக்கியம்
ஆ) திருக்குறள்
இ) நாலடியார்
ஈ) சிலப்பதிகாரம்
Answer: அ) சங்க இலக்கியம்
14. ‘நனந்தலை உலகம்’ என்பதில் ‘நனந்தலை’ என்பதன் பொருள்
அ) கவர்ந்த
ஆ) அகன்ற
இ) சுருங்கிய
ஈ) இழந்த
Answer: ஆ) அகன்ற
15. ‘நறுவீ என்பதில் ‘வீ’ என்பதன் பொருள்
அ) மலர்கள்
ஆ) மான்கள்
இ) விண்மீன்கள்
ஈ) கண்க ள்
Answer: அ) மலர்கள்
16. பொருத்திக் காட்டுக:
i) மூதூர் – 1. உரிச்சொற்றொடர்
ii) உறுதுயர் – 2. மூன்றாம் வேற்றுமைத்தொகை
iii) கைதொழுது – 3. வினைத்தொகை
iv) தடக்கை – 4. பண்புத்தொகை
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 1, 3, 4, 2
ஈ) 2, 1, 3, 4
Answer: அ) 4, 3, 2, 1
17. பொறித்த – பகுபத உறுப்பிலக்கணத்தின்படி பிரிக்கும் முறை
அ) பொறி + த் + த் + அ
ஆ) பொறித்து + அ
இ) பொறி + த்(ந்) + த் + அ
ஈ) பொறி + த் + த
Answer: அ) பொறி + த் + த் + அ
18. தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றவர்கள்
அ) இளம் பெண்கள்
ஆ) முதிய பெண்டிர்
இ) தோழிகள்
ஈ) சான்றோர்
Answer: ஆ) முதிய பெண்டிர்
19. சிறுதாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட எது பசியால் வாடிக் கொண்டிருந்தது?
அ) பசு
ஆ) இளங்கன்று
இ) எருமை
ஈ) ஆடு
Answer: ஆ) இளங்கன்று
20. பசியால் வாடிக் கொண்டிருந்த இளங்கன்றின் வருத்தத்தைக் கண்டவள்
அ) குறமகள்
ஆ) இடைமகள்
இ) தலைவி
ஈ) தோழி
Answer: ஆ) இடைமகள்
21. ‘கைய கொடுங்கோற் கோவலர் பின் நின்று உய்த்தர இன்னே வருகுவர், தாயர்’ என்று யார் யாரிடம் கூறியது?
அ) இடைமகள் இளங்கன்றிடம்
ஆ) முதுபெண்டிர் பசுவிடம்
இ) தலைவன் காளையிடம்
ஈ) தலைவி மேகத்திடம்
Answer: அ) இடைமகள் இளங்கன்றிடம்
22. ‘நன்னர் நன்மொழி கேட்டனம்’ – யார் யாரிடம் கூறியது?
அ) முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது
ஆ) தலைவி முதுபெண்டிரிடம் கூறியது
இ) தோழி தலைவியிடம் கூறியது
ஈ) தலைவி தலைவனிடம் கூறியது
Answer: அ) முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது
23. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள முல்லைப்பாட்டின் அடிகள்
அ) 1 – 17
ஆ) 17 – 25
இ) 4 – 16
ஈ) 5 – 20
Answer: அ) 1 – 17
24. முல்லையின் நிலம்
அ) காடும் காடு சார்ந்த இடமும்
ஆ) மலையும் மலை சார்ந்த இடமும்
இ) வயலும் வயல் சார்ந்த இடமும்
ஈ) கடலும் கடல் சார்ந்த இடமும்
Answer: அ) காடும் காடு சார்ந்த இடமும்
25. இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்திருத்தல்) எந்நிலத்துக்குரிய உரிப்பொருள்
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) மருதம்
ஈ) பாலை
Answer: ஆ) முல்லை
26. கார்காலத்துக்குரிய மாதங்கள் அ) தை, மாசி
ஆ) பங்குனி, சித்திரை
இ) ஆவணி, புரட்டாசி
ஈ) கார்த்திகை, மார்கழி
Answer: இ) ஆவணி, புரட்டாசி
27. நப்பூதனாரின் தந்தை அ) பொன்முடியார்
ஆ) பொன்வணிகனார்
இ) மாசாத்துவாணிகனார்
ஈ) மாணிக்கநாயனார்
Answer: ஆ) பொன்வணிகனார்
28. பொன்வணிகனாரின் ஊர்
அ) உறையூர்
ஆ) மதுரை
இ) காவிரிப்பூம்பட்டினம்
ஈ) குற்றாலம்
Answer: இ) காவிரிப்பூம்பட்டினம்
கூடுதல் வினாக்கள்
கூடுதல் 1 மதிப்பெண் வினா விடைகள்
1. உயிரின வாழ்வின் அடிப்படை இயற்கை.
2. இயற்கையின் கூறுகளில் கூடுதலான பங்கு வகிப்பது காற்று.
3. தொல்காப்பியர் உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்கிறார்
4. மனிதர்களின் இயக்கத்தையும் உலக உயிர்களின் இயக்கத்தையும் தீர்மானிப்பது காற்றின் இயக்கம்.
5. மூச்சுப்பயிற்சி உடலைப் பாதுகாக்கும் என்று கூறியவர் திருமூலர்.
6. பிற்கால ஒளவையார் தம் குறளில் காற்றைப் பற்றி வாயுதாரணை என்னும்
7.கிழக்கு என்பதற்குக் குணக்கு என்னும் பெயருண்டு
8. குடக்கு என்பது மேற்குத் திசையைக் குறிக்கும்
9. வாடை என்பது வடக்குத் திசையைக் குறிக்கும்.
10. கிழக்கிலிருந்து வருகின்ற காற்று மழை காற்று எனப்படும்
11. வறண்ட நிலப்பகுதியில் இருந்து வீசும் காற்று கோடைக் காற்று எனப்படும்
12. வலம்புரிச்சங்கு பொறித்த கைகளையுடையவன் திருமால்
13. வண்டுகள் யாழிசை போன்று ஒலிக்கும்
14. நற்சொல்லை நாங்கள் கேட்டோம் என்று தலைவியிடம் கூறியவர்கள் முதுபெண்கள்
15. சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் எனப்படும்
16. தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும்
17. ஒரு தொட வேற்றுமை உருபுகள் மறைந்து வந்து பொருளை உணர்த்துவது வேற்றுமைத் தொகை பயனும் சேர்ந்து மறைந்து
18. ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்
19. முறுக்கு மீசை வந்தார் அன்மொழித்தொகை
20. போல, போன்ற, அன்ன, அற்று என்பன உவம உருபுகள்
0 Comments