TNPSC அதன் புதிய இணையதள பக்கத்தை உருவாக்கியுள்ளது.
tnpsc introduce new website soon
ஊரடங்கு காரணத்தால் நடத்தப்படாத TNPSC தேர்வுகள் அடுத்த ஆண்டிற்கான கால அட்டவணையில் சேர்க்கப்படும் என TNPSC உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றது. அதன் காரணத்தால் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது என்பது நாம் அறிந்ததே. இந்த ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப் பட்டது குழந்தைகளின் கல்வியே. கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்ட நிலையில் அது எப்பொழுது திறக்கப்படும் என இன்னும் அரசாங்கம் முடிவெடுக்கவில்லை.
இந்நிலையில் 2020 ஆண்டிற்கான TNPSC தேர்வுகள் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னரே நடத்தப்படும் என TNPSC உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். 2020 ஆண்டிற்கான தேர்வுகால அட்டவணையில் இடம்பிடித்துள்ள எந்த தேர்வும் ஊரடங்கு காரணத்தால் நடைபெற்றால் இருந்தது. அந்த தேர்வுக்கால அட்டவணையின்படி கடந்த மே மாதத்தில் குரூப்-2, குரூப்- 2ஏ தேர்வுகளும் ஜூலை மாதத்தில் இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை செயல் அலுவலகர்களுக்கான பணியிடங்களை நிரப்பும் தேர்வும் நடந்த்திருக்க வேண்டும். ஆனால் ஊரடங்கு காரணத்தால் அது நடைபெற்றாமல் போனது. ஊரடங்கிற்கு முன்னர் நடந்த தேர்வுகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் உள்ளன. தற்போது TNPSC உயர் அதிகாரி கூறியுள்ளதாவது, தமிழத்தில் எப்பொழுது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுமோ அதற்கு பின்னரே தேர்வுகள் நடத்தப் படும் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் கொரோனா காரணத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரசு பணியிடங்களில் 50 சதவீத பணியிடங்கள் மட்டுமே நிரப்ப இயலும். 2020 ஆண்டில் நடத்த இயலாமல் போன தேர்வுகள் அடுத்த ஆண்டிற்கான கால அட்டவணையில் சேர்த்து நடைபெறும் எனக் கூறினார்.
அதுமட்டுமல்லாது TNPSC அதன் புதிய இணையதள பக்கத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் தேர்வர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி அவர்களது விடைத்தாள்களை ஆன்லைன் மூலம் பதிவேற்று பார்த்துக் கொள்ளலாம். முன்னர் நடந்த தேர்வுகளின் கேள்வித்தாள்களும் இந்த இணையதள பக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரியவருகிறது.
0 Comments