Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

TNPSC Exam 2020?

TNPSC Exam 2020?

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னரே அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2020-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சியின் தேர்வுக்கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள பல்வேறு தேர்வுகள் கரோனாஊரடங்கால் இன்னும் நடத்தப்படவில்லை. ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுகளுக்கும் முடிவுகள் வெளியிடப்படவில்லை. 2020 வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்புகள் கடந்த மே மாதத்திலும், இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை செயல் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்புகள் ஜூலையிலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். எனவேடிஎன்பிஎஸ்சியின் தேர்வுகால அட்டவணையை எதிர்பார்த்து பட்டதாரிகள் காத்திருக்கின்றனர். 
 இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி ஒருவர் கூறிய தாவது: பள்ளி, கல்லூரிகள் திறந்தால்தான் தேர்வுகளை நடத்த முடியும்.கரோனா காரணமாக, இந்த ஆண்டுஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அரசுபணியிடங்களில் 50 சதவீதம்தான் நிரப்ப முடியும். நடத்த இயலாத தேர்வுகள் அடுத்த ஆண்டு தேர்வுக்கால அட்டவணையில் சேர்க்கப்பட்டு நடத்தப்படும். டிஎன்பிஎஸ்சி தேர்வின் வெளிப்படைத் தன்மையை மேலும் அதிகரிக்கும் பொருட்டும், தேர்வர்களுக்கு கூடுதல் சேவைகள் வழங்கும் வகையிலும் தேர்வாணையத்துக்கு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்வர்கள் உரிய கட்டணம் செலுத்தி தங்கள் விடைத்தாளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், பழையதேர்வுகளின் கேள்வித்தாள்களும் இணையதளத்தில் இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments