school admission form 17th august
ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் சேர்க்கை நடைபெறும்
1,6,9-ஆம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "கொரோனா வைரஸின் தாக்கம் குறையவில்லை. கல்வியாளர்கள், பெற்றோர் கருத்துகள் அறிந்த பின்பு கொரோனா தாக்கம் குறைந்த பின்பு பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார். பள்ளிகளை திறக்க தற்போது சாத்தியக்கூறுகளே இல்லை. 1,6,9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் சேர்க்கை நடைபெறும். 11 ஆம் வகுப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் சேர்க்கை நடபெறும். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் எந்த விதமான குழப்பமும் இல்லை" எனத் தெரிவித்தார். கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் இவை எப்போது திறக்கப்படும் என மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் டிசம்பர் மாதம் வரையில் இதனை திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வி செயலர் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு நாடு முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலிலிருந்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து வகை கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. தமிழகத்தில் வரும் 24-ஆம் தேதி முதல் 11-ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைப்பெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகிறது. மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்து வந்தது. அந்தவகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிழும் வரும் 17-ம் தேதி முதல் 1,6,9 -ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவித்தார்.
0 Comments