Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

அனைத்து மாணவர்களுக்கும் தலா 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்

 அனைத்து மாணவர்களுக்கும் தலா 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோயிலில் உள்ளது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்

TNPSC Free Online Test Click Here 
New Updated Text Book Click Here
Latest Jobs Click Here



6 முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் 350 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்து கொண்டே வந்துள்ளது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருவதைக் கண்ட கல்வி அதிகாரிகள், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சமீபத்தில் ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டனர்.
இதனையடுத்து ஆலோசனை நடத்திய ஆசிரியர்கள் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் தலா 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கணினி வழி கல்வி, இலவசப் பேருந்து பயணச் சீட்டு, சிறந்த நூலக வசதி, ஆங்கிலத்தில் பேசுவதற்குப் பயிற்சி, சுத்தமான குடிநீர், அரசு அளிக்கும் கல்வி உதவித்தொகை பெற்றுத் தருதல், நீட் பயிற்சிக்கு தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தைப் பள்ளியே ஏற்கும், மாலை நேரத்தில் யோகா மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

TNPSC Free Online Test Click Here 
New Updated Text Book Click Here
Latest Jobs Click Here

Post a Comment

0 Comments