கல்வி தொலைக்காட்சியை இன்று முதல்வர் துவக்கி வைக்கிறார்
கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் கல்விக்காக தனியாக ஒரு தொலைக்காட்சி துவக்கப்படும் என அறிவித்திருந்தார் அதன் அடிப்படையில் கடந்த ஓர் ஆண்டுகளாக கல்வி தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சி நிரல்களை தயார்செய்தல் படப்பிடிப்பு உபகரணங்களை வாங்குதல் தயார் செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் கல்வி தொலைக்காட்சியை துவக்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத் தொலைக்காட்சி முழுக்க முழுக்க கல்வி சம்பந்தமான செய்திகளும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கின்றன. தொலைக்காட்சியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சியில் யோகா தமிழ் ஆங்கிலம் கணிதம் போன்ற பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பயிற்சிகள் நிகழ்ச்சிகள் வழங்கப்பட இருக்கின்றன. மாணவர்களைப் போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில் நீட் போன்ற தேர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன துவக்கவிழா நிகழ்ச்சியானது யூடியூப் ஃபேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments